இது சூரிய உதயம் Jeffersonville, Indiana USA 65-0418M 1நாம் நம்முடைய தலைகளை வணங்குவோம். கர்த்தாவே! இந்த அருமையான் உயிர்த்தெழுதலின் காலையில் (Easter Morning) நாங்கள் இங்கே கூடிவரும் வேளையில் சிறிய அரும்புகள் துளிர் விடுவதையும், தேனீக்கள் பறந்து கொண்டு தங்கள் ஆகாரத்தைப் பெறுவதையும், பறவைகள் தங்களுடைய இதயம் சந்தோஷத்தினால் வெடித்து விடுவதைப் போல் பாடுவதையும் காண்கிறோம். ஏனெனில் உயிர்த்தெழுதல் என்று ஒன்று உண்டு, நீர் அநேக ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடே எழுப்பினீர் என்று விசுவாசித்து இந்த ஞாபகார்த்த தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம். இன்று எங்கள் எல்லோர் மத்தியிலும் ஒரு உயிர்த்தெழுதல் உண்டாகட்டும். அன்றே அவருடன் ஐக்கியம் கொண்டவர்களாய் அவரோடு கூட உயிர்த்தெழுந்து இப்பொழுதோ அவரோடுகூட பரலோகத்தின் உன்னத ஸ்தானங்களிலே வீற்றிருக்கிறோம் என்கிற அவருடைய வார்த்தையை அவருடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள் புரிந்து கொள்ள உதவி செய்யும். இக்கூடாரத்தில் நடக்கிற ஆராதனையையும் தொலைபேசியின் மூலம் நாடெங்கிலும் இதைக் கேட்கிற யாவரையும் ஆசீர்வதியும். வியாதியஸ்தர்களையும், வேதனைப்படுகிறவர்கள் எல்லோரையும் சுகமாக்கும். அவர்களுக்கும்கூட இது ஒரு உயிர்த்தெழுதலாகவும், சுகவீனத்திலிருந்து பெலனுக்குள் செல்கிற ஒரு யாத்திரையாகவும் இருக்கட்டும். பாவத்திலும், அக்கிரமத்திலும், மரிக்கிறவர்கள் இன்று கிறிஸ்துவின் மூலம் ஜீவனை அடையட்டும். நாங்கள் உம்மை துதித்து அவருடைய நாமத்தினால் இதைக் கேட்கிறோம். ஆமென். 2சபையின் உள்ளே உட்கார்ந்து கொண்டும், வெளியே நின்று கொண்டும் மற்றும் சுற்றிலும் எல்லா இடங்களிலும் உள்ள நிலப்பரப்பிலும் நிரம்பி வழிகிற இந்த மகத்தான கூட்டத்தாரோடு மீண்டும் நான் இங்கே இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில் பட்டினத்தில் இருப்பதை ஒரு அற்புதமான சிலாக்கியமாகக் கருதுகிறேன். நாடெங்கிலும் தொலைபேசியின் மூலம் இணைக்கப்பட்டுள்ள ஜனங்களே, உங்களுக்கும் இது ஒரு அருமையான காலை வேளையாக இருக்கிறது. இன்று காலை ஐந்து மணிக்கு என்னுடைய சிறிய நண்பன் தன்னுடைய சிவந்த மார்புடன் ஜன்னலருகே பறந்து வந்து என்னை எழுப்பினான். “அவர் உயிர்த்தெழுந்தார்'' (மாற்கு: 16:6) என்று அதனுடைய சிறிய இதயமே வெடித்து சொல்லியது போல் காணப்பட்டது. நான் இந்த சிறிய பறவையை என்னுடைய நண்பனாகவே எப்பொழுதும் நினைக்கிறேன். ஏனெனில் நான் அதை நேசிக்கிறேன். பாவத்தினிமித்தம் அவர் சிலுவையில் உபத்திரவப்படுவதை ஒரு பழுப்பு நிறப்பறவை (Brown Bird) பார்த்ததாகவும், அச்சிறு பறவை சிலுவையினிடம் பறந்து சென்று தன்னுடைய சிறிய அலகினால் (beak) ஆணிகளைப் பிடுங்க. முயற்சித்தது; அதனால் அதன் மார்பு முழுவதும் சிவந்துவிட்டது என்றும் ஒரு பழங்கதை சொல்லப்படுவதுண்டு. மெய்யாகவே அச்சிறிய பறவைக்கு பாவமென்பதே கிடையாது. அச்சிறிய பறவைக்காக அவர் மரிக்க வேண்டிய அவசியமே இல்லை. அவா மரித்ததற்கான மகிமையான காரியத்தை கேடயமாக பாதுகாப்பதில் அச்சிறிய பறவை நடந்து கொண்ட விதமாகவே நானும் இருக்க விரும்புகிறேன். 3நமக்கு இங்கே நேரம் குறைவாகவே இருப்பதை நினைவில் கொண்டு கூர்நுனிக் கோபுர (Pyramid) வடிவத்தில் தோன்றிய ஏழு தூதர்களை நான் சந்திப்பதற்கு இந்தியானாவிலுள்ள இக்கூடாரத்திலிருந்து அரிசோனாவிற்கு கிளம்ப வேண்டும் என்பதற்காக எனக்கு கொடுக்கப்பட்ட தரிசனத்தைக் குறித்து, சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்திற்கு விசேஷமாக இன்று காலையில் தொலை பேசியின் மூலம் கேட்டுக் கொண்டிருக்கிற நண்பர்களுடைய கவனத்தை திருப்ப விரும்புகிறேன். என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை அறியாதவனாக, அதுவே என்னுடைய வாழ்க்கையின் முடிவு என்று நான் அங்கே சென்ற பிறகு நினைத்தேன். (அந்த சம்பவம் உங்கள் எல்லோருக்கும் தெரியும் என்று நான் நம்புகிறேன்) இதே போல் ஒரு நாள் காலையில் நான் சபீனோ கான்யானில் (Sabino Canyon) ஜெபித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய கையில் ஒரு பட்டயம் வந்து விழுந்து, “இது வார்த்தை - வார்த்தையாகிய பட்டயம்” என்று சொல்லிற்று. அதன்பிறகு, தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்ட விதமாகவே தூதர்கள் தோன்றினார்கள். அதே வேளையில் நான் நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு மகத்தான ஒளியானது தூதர்களுடைய சிறகுகளைப் போல முப்பது மைல் உயரமுடையதாய் நகர்ந்து சென்று, தூதர்கள் கூட்டம் தோன்றிய அதே இடத்தில் கூர்நுனிக் கோபுர (Pyramid) வடிவத்தில் காட்சியளித்தது. 4மெக்ஸிகோவிலிருந்து வடக்கு அரிசோனா வரையிலும் அது நகர்ந்து சென்றதை விஞ்ஞானம் புகைப்படமெடுத்தது. அதே இடத்தில்தான் நான் நின்று கொண்டிருப்பேன் என்று பரிசுத்த ஆவியானவர் சொன்னார். (டூசானிலிருந்து வடக்கே நாற்பது மைல்கள்) அது ஆகாயத்தில் சென்றது. லைப் பத்திரிக்கை (Life Magazine) அப்புகைப்படங்களை வெளியிட்டது. அத்தூதர்கள் தோன்றிய அதே இடத்தில் 30 மைல் உயரமும், 27 மைல் குறுக்களவுமுடைய வான மண்டலத்தில் நீர்த் துளி, நீராவி மற்றும் வேறு எதுவுமே இல்லாத இடத்தில் வினோதமான அந்த காரியம் தோன்றியது. டூசானிலுள்ள விஞ்ஞானிகளில் ஒருவர் அதனுடைய சிறப்பு அம்சம் (Significance) என்ன என்பதை தெரிந்து கொள்ள என்னிடம் கேட்டார். ஆனால் நான் அவர்களுக்கு சொல்லவில்லை. அது சம்பவிக்கிறதற்கு முன்பே உங்களுக்கு கூறப்பட்டிருந்ததால் அது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது உங்களுக்கேயன்றி; அவர்களுக்கல்ல. 5அவர் அங்கே என்னிடத்தில் பேசி “ஏழு முத்திரைகள் திறக்கப்படும்'' என்று சொன்னார். உலகத் தோற்றத்திற்கு முன்பே வேதாகமத்தில் மறைக்கப்பட்ட ஏழு விதமான இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும். முழு உலகத்தோடும் ஒப்பிடுகையில் தாழ்மையுள்ள சிறிய கூட்டத்தாராகிய நாம் விசுவாசம், விவாகரத்து, சர்ப்பத்தின் வித்து போன்ற இரகசியங்களைக் கேட்டு இந்த ஆசீர்வாதங்களை அனுபவித்தோம். சபை என்பது என்னவென்றும், ஆதியிலே சபை கிறிஸ்துவுக்குள் எவ்விதம் இருந்தது என்றும், கடைசி நாளில் சபை எவ்விதம் வெளிப்படுத்தப்படும் என்பது போன்ற அநேக வித்தியாசமான கேள்விகளை மனிதன் அல்ல, தேவன் தாமே அந்த ஏழு இரகசியங்களைத் திறந்து நமக்கு முற்றிலுமாக வெளிப்படுத்தி தந்தார். இப்பொழுது அது சென்றபொழுது... அந்தப் புகைப்படம் இங்கே நம்மிடம் சுவரில் தொங்குகிறது. ஆனால் பிறகு... லைப் பத்திரிகை வெளியிட்ட அந்தப் படத்தை இங்கே நான் வைத்திருக்கிறேன். ஆனால் நான் என்னுடைய கூடாரத்திலுள்ளவர்களாகிய நீங்கள் எப்பொழுதாவது அது இருக்க வேண்டிய விதத்தில் அதை கவனித்திருக்கிறீர்களா (பாருங்கள், கவனித்தீர்களா?) என்று ஆச்சரியப்படுகிறேன். 6இத்தரிசனம் வந்தபொழுது நான் வெளிப்படுத்தின விசேஷம்: 1-ஆம் அதிகாரத்தில் காணப்படுகிற இயேசுவைக் குறித்து பிரசங்கித்துக் கொண்டிருந்தேன் என்பதை நினைத்துப் பாருங்கள். நாம் ஏழு முத்திரைகளை திறப்பதற்கு சற்று முன்னதாக சபை காலங்களில் கிறிஸ்து வெண் பஞ்சைப் போன்ற சிரசின் மயிருடையவராய் நின்றுக் கொண்டிருந்தார் என்றும் (வெளி: 1:14) பழங்காலத்தில் ஆங்கிலேய நியாயாதிபதிகளும், (English Judges) நீதிபதிகளும் நியாய சங்கத்திற்கு சத்திய பிரமாணம் எடுத்துக் கொள்ள செல்லும்போது அவர்களுக்கு உன்னதமான அதிகாரம் அளிக்கப்பட்டது. அவர்களுடைய உன்னதமான அதிகாரத்தை காண்பிக்க அவர்கள் தங்களுடைய தலைகளில் வெண்மையான டோப்பாவை அணிந்து கொள்வார்கள் என்று நான் உங்களுக்கு விவரித்துச் சொன்னேன். 7நீங்கள் இந்தப் படத்தை இவ்விதமாகத் திருப்பினால் நீங்கள் கிறிஸ்துவைக் காணலாம். (உங்களுடைய இடத்திலிருந்தே நீங்கள் அதைப் பார்க்கலாம்) வானத்திற்கும் பூமிக்கும் தேவனாகிய அவர் தலையில் வெள்ளை டோப்பாவை அணிந்து கொண்டு, பரிபூரணமாக கீழே நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தீர்களா? உங்களால் அவருடைய கண்களையும், மூக்கையும், வாயையும் காணமுடிகிறதா? (ஆமென் - ஆசி) அவர்கள் புகைப்படத்தை எடுத்த விதத்திலிருந்து சற்று இவ்விதமாக திருப்புங்கள். அது இவ்விதமாகத்தான் இருக்கவேண்டும். உங்களுக்கு தெரிகிறதா? (ஆமென் - ஆசி) அவரே பிரதம நீதிபதி. அவரைத் தவிர வேறு ஒருவருமில்லை. இந்த செய்தி உண்மை என்பதற்கு இதுவே மீண்டும் ஒரு அடையாளமும் நிருபணமுமாகும். இது சத்தியம். இது அவரை மூன்றாவது ஆளாக ஆக்குவது அல்ல. ஆனால்அவர்தான் அந்த ஒரே நபர். அந்த படத்திலுள்ள கறுப்பான பகுதியில் நீங்கள் அவருடைய முகத்தையும், அவருடைய தாடியையும், அவருடைய கண்களையும் பார்த்தீர்களா? அவர் பார்த்துக் கொண்டிருக்கிற வலப் பக்கத்திலிருந்து இந்த வெளிச்சம் பிரகாசமாய் வருவதைக் கவனியுங்கள். சிலுவையில் அவர் வலது பக்கம் தன்னுடைய பார்வையை திருப்பி அங்கே ஒரு பாவியை மன்னித்தார். அவருடைய உயிர்த்தெழுதலின் பிரகாசத்தில் நாம் அவருடைய நாமத்தினால் இன்னும் முன்னேறி செல்கிறோம். 81933-ஆம் ஆண்டு ஜெபர்ஸன்வில் ஆற்றங்கரையில் இதே வெளிச்சம் தோன்றி, “கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு யோவான் ஸ்நானகன் முன்னோடியாய் அனுப்பப்பட்டது போல உன்னுடைய செய்தி அவருடைய இரண்டாம் வருகைக்கு முன்னோடியாய் இருக்கும்” என்று சொல்லியது முதல் கடந்த முப்பது அல்லது முப்பத்தைந்து வருடங்களாக எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபிக்கப்பட்ட அதிசயங்களைக் குறித்து நான் இன்று காலையில் அதிக நேரம் பேசி செலவழிக்க விரும்புகிறேன். நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம், நாம் அதை காண்கிறோம். இந்த அதிசயங்கள் எல்லாம் ஏன் உலகம் முழுவதும் பரவவில்லை என்று சில சமயங்களில் நாம் ஆச்சயரிப்படுகிறோம்; கர்த்தருக்கு சித்தமானால் ஒருவேளை நாம் அதை விவரித்துச் சொல்லுவதற்கு சில நேரங்களில் சந்தர்ப்பம் கிடைக்கும். 9நாம் எப்பொழுதுமே முதலாவதாக வார்த்தையை வாசிப்பதிலிருந்தே வார்த்தை நமக்கு கிடைக்க வேண்டும் என்பதை விசுவாசிப்பதால், உங்களுடைய வேதாகமத்தை நீங்கள் திருப்ப வேண்டுமென்று நான் விரும்புகிறேன். என்னுடைய வார்த்தைகள் ஒரு மனிதனுடையவைதான்; அது தவறிவிடும். ஆனால் தேவனுடைய வார்த்தை ஒரு போதும் ஒழிந்து போகாது. ஆகவே நான் எப்பொழுதும் தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறேன். நாம் இப்பொழுது வேத வாக்கியங்களிலிருந்து ஒரு பகுதியை வாசிக்கப் போகிறோம். முதலாவதாக நான் தேர்ந்தெடுத்துள்ள மூன்று பகுதிகளுக்கு நீங்கள் உங்கள் வேதாகமத்தை திருப்பும்படி நாங்கள் விரும்புகிறோம். அவற்றில் ஒன்று வெளிப்படுத்தின விசேஷம் முதலாவது அதிகாரம் 17, 18-வசனங்கள். இங்கேதான் அவர் வெண் பஞ்சைப் போன்ற சிரசின் மயிருடனும், வெண்கலத்தைப் போன்ற பாதங்களுடனும் தோன்றினார். அடுத்ததாக ரோமர்: 8:11. இன்று காலையில் நான் என்னுடைய செய்திக்காக வேத வாக்கியங்களிலிருந்து மூன்று பகுதிகளை வாசிக்க தேர்ந்தெடுத்திருக்கிறேன். அதைத் தான் கர்த்தர் உயிர்த்தெழுதலின் செய்திக்காக என்னுடைய இருதயத்தில் வைத்தார். அதன் பிறகு மாற்கு: 16:1,2-வசனங்களை வாசிக்க விரும்புகிறேன். அதிலிருந்து நான் என்னுடைய செய்தியை பிரசங்கிப்பேன். 10நாம் வெளிப்படுத்தின விசேஷம்: 1:17,18-வசனங்களை வாசிப்போம். நான் அவரைக் கண்டபோது செத்தவனைப் போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலது கரத்தை என் மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன். மரித்தேன். ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன். ஆமென். நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். ரோமர்: 8-ம் ஆதிகாரம் 11-ம் வசனத்தை வாசிப்போம். அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். மாற்கு: 16-ஆம் அதிகாரம் (உயிர்த்தெழுதலின் அதிகாரம்) 1,2-வசனங்களை வாசிப்போம். ஓய்வு நாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்த வர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக் கொண்டு. வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து... 11நான் இன்று காலையில் “இது சூரிய உதயம்” என்கிற தலைப்பில் பேச விரும்புகிறேன். உயிர்ப்பிக்கும் வல்லமை (The Quickening Power) என்ற தலைப்பை குறிப்பிட விரும்புகிறேன். இன்று காலையில் நம்முடைய அருமையான சகோதரர் நெவில் பேசிய உயிர்த்தெழுதலின் ஈஸ்டர் செய்தியையும் மற்றும் அநேக ஊழியர்கள் வானொலியில் கொடுத்த செய்தியையும் நீங்கள் ஒருவேளை கேட்டிருக்கலாம். நான் சற்று வித்தியாசமான வழியில் பிரசங்கிக்க நினைத்தேன். வித்தியாசமாக இருப்பதற்காக அல்ல. ஆனால் சற்று அதிகமான விஷயங்களைச் சேர்த்து மற்றொரு கோணத்தில் பிரசங்கிக்க விரும்புகிறேன். உங்களுக்கு... நீங்கள் வேத வாக்கியங்களை எந்த கோணத்தில் பார்த்தாலும் அது உங்களுக்கு இயேசு கிறிஸ்துவைத் தான் அறிவிக்கும். அது எப்பொழுதுமே அவரைத்தான் அறிவிக்கிறது. அதிலிருந்த எவ்விதத்திலும் நீங்கள் வேறொன்றையும் பெற்றுக் கொள்ள முடியாது. 12மனிதன் ஒருபோதும் அடைந்திராத அந்த மகத்தான வெற்றியின் ஞாபகார்த்தத்தை உலகத்தில் இன்றுள்ள சபைகள் அதை ஒரு ஞாபகார்த்தமாக கொண்டாடிக் கொண்டிருக்கலாம். (குறைந்த பட்சம் இன்று காலையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், பூமியில் இப்பகுதியிலுள்ள சபைகளிலும்) அவர் இரட்சகராக மரித்தபொழுது அல்லது ஒரு சிறு குழந்தையாக பிறந்தபொழுது... (அவர் பிறக்காமல் இவ்வுலகில் தோன்ற முடியாது) அவர் மரித்த பொழுது நிச்சயமாகவே நம்முடைய பாவங்களுக்கு பரிகாரம் (atoned) தேடிவிட்டார். ஆனால் இதுவரை அநேக அருமையான சிறு குழந்தைகள் பிறந்து, ஒரு உண்மையான காரணத்திற்காக அநேக மனிதர்கள் உபத்திரவடைந்து மரித்தார்கள். ஆனால் இன்று வரையிலும் ஒருவராகிலும் உயிரோடு மீண்டும் தம்மை எழுப்ப முடியவில்லை. 13அவர் தாம் சொல்லியதை நிரூபிக்க உயிர்த்தெழுதலின் நாளாகிய இந்த வாரம் தான் சரித்திரத்தில் மகத்துவமானதும், எல்லாக் காலங்களிலும் மிகச் சிறந்த கொண்டாட்டமாகவும் விளங்குகிறது. மனிதன் தான் சொல்லுகிற காரியங்களை அது சத்தியம் என்று நிரூபிக்கிற வரையிலும் அதை நாம் திட்டவட்டமாக விசுவாசிக்க முடியாது. எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிய தேவனோ தாம் செய்யாத எந்த ஒரு காரியத்தையும் உங்களை செய்யச் சொல்லமாட்டார். ஆகையால் நம்முடைய பாவங்களுக்காக மரித்த இவர், தாம் யார் என்பதை நிரூபிக்கிறார். நம்மிடையே உள்ள ஈஸ்டர் புஷ்பங்கள் (Easter Flowers) ஈஸ்டர் குல்லாய்கள் (bonnets) இளஞ்சிவப்பு முயல்கள் போன்ற அநேக காரியங்களும், கொண்டாட்டங்களும் சரிதான். ஆனால் இவைகள் யாவும் உண்மையான அர்த்தத்தை உடையவைகள் அல்ல. 14இன்றைக்கு ஜனங்கள், நாம் வருடத்திற்கு ஒரு தடவை வியாழக் கிழமையிலோ அல்லது வெள்ளிக் கிழமையிலோ கால்களை கழுவ வேண்டுமென்று, அல்லது இராப்போஜனத்தை இந்த நாளிலோ அல்லது அந்த நாளிலோ, வாரத்தின் ஓய்வு நாளிலோ அல்லது வாரத்தின் முதல் நாளிலோ அல்லது வேறு எந்த நாளில் ஆசரிக்க வேண்டும் என்பது போன்ற எல்லா வித்தியாசமான உபதேசங்களைப் பற்றியெல்லாம் வாக்குவாதம் செய்கிறார்கள். இவைகளெல்லாம் வெறும் பாரம்பரியமே. உங்களில் ஜீவன் இல்லாவிடில் உங்களுக்கு லெந்து நாட்கள் (Lent) இருந்தாலும், இல்லாவிடினும் மற்றும் இப்படிப்பட்ட எந்தக் காரியத்தினாலும் உங்களுக்கு யாதொரு நன்மையும் கிடையாது. இது வெறும் ஞாபகார்த்தம் தான், அதில் தவறொன்றும் இல்லை. ஆனால் உண்மையான அர்த்தத்தை எடுத்துவிட்டு அவர்களுடைய பாரம்பரியத்தை புகுத்திவிட்டார்கள். நீங்கள் எவ்வளவு பக்தி வைராக்கியமுடையவராக இருந்தாலும், நீங்கள் உங்களுடைய உபதேசத்தில் எவ்வளவு தான் சரியாக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் சாத்தானுக்கு கவலை கிடையாது. நீங்கள் அந்த ஜீவனை இழந்துவிட்டால், நீங்கள் எவ்விதத்திலும் மேலே வர முடியாது. நீங்கள் மறுபடியும் பிறவாவிட்டால், நீங்கள் எவ்வளவு தான் பக்திவைராக்கியமுடையவராயிருந்தாலும், எவ்வளவு தான் நல்லவராக இருந்தாலும், நீங்கள் எத்தனை சபையை உடையவராக இருந்தாலும் எத்தனையோ சபைகளை உருவாக்கப் போகிறவராயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. ஆகையால், அவரை ஒரு ஞாபகார்த்தத்திற்காகவோ, வருடத்தில் ஒரு நாளில் அல்லது குறிப்பிட்ட ஒரு நாளிலே நாம் இந்த உயிர்த்தெழுதலின் காலையை கொண்டாடுவதற்காகவோ அல்லது நாம் அவருடைய உயிர்த்தெழுதலில் பங்குடையவர்களாகும்படியாகவோ எதற்காக தேவன் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடே எழுப்பினார்? அவருடைய உயிர்த்தெழுதலினால் உனக்கு என்ன பிரயோஜனம்? அது எனக்கு என்னவாயிருக்கிறது? அது உனக்கு எதுவாயிருக்கிறது? அவரை தேவன் உயிருடன் எழுப்பினார் என்பதை நாம் விசுவாசத்தினால் நம்புகிறோம், ஆனால் அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்துவிட்டதே. அதனால் எனக்கு என்ன பிரயோஜனம்? இப்பொழுது இந்தப் பொருளைக் காண்போம். 15நர்ஸ் (Nurse) எனக்கு தடுப்பு ஊசி போட்டதால் இச்செய்தியை பிரசங்கிக்க முடியாதபடி என்னுடைய கை வலிக்கிறது. நான் இன்னும் சில தினங்களில் வெளிநாடுகளுக்கு செல்ல இருப்பது உங்களுக்குத் தெரியும். நானும் என் மகனும் காலரா, மஞ்சள் ஜூரம் போன்றவைகளுக்காக தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நாம் மற்ற நாடுகளுக்கு போவதற்கு முன்னால் இந்த வகையான தடுப்பு ஊசிகளைப் போட்டுக் கொள்ள அரசாங்கம் நம்மை வற்புறுத்துகிறது. இதனால் நான் மிகவும் சோர்ந்து போய் சுகவீனமாய் இருக்கிறேன். ''ராயனுக்குரியதை ராயனுக்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள்'' என்று அவர் சொன்னார். நான் என்ன சொல்லப் போகிறேன் என்பதை கேட்பதற்காகவே தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து ஆண்களும், பெண்களுமாக இங்கே காத்திருக்கும் கூட்டத்தாராகிய உங்களுக்கு நான் இன்று காலையில் என்ன பேச வேண்டும், என்ன தலைப்பில் செய்தி கொடுக்க வேண்டும், அதை நான் எப்படிச் செய்வேன் என்றெல்லாம் நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்த பொழுது சிந்தித்துக் கொண்டிருந்தேன். (நான் உங்களுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன்). 16நான் அங்கே தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் முன்னால் உள்ள கதவு ஓசை எழுப்பியது. எனக்குத் தெரிந்த வரையில் என்னைத் தவிர அங்கே வேறே யாரும் இல்லை. நான் கவனித்துப் பார்த்தேன், எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதன் பிறகு குகை அறைக்கு படிக்கச் (Den Room) சென்றிருந்தேன். அங்கே யாரோ ஒருவர் கதவை அசைத்துக் கொண்டிருந்த சத்தம் வந்தது. நான் - நான் கதவின் அருகில் சென்று திறந்து பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஒரு சிறிய அழகிய மஞ்சள் ரோமமும், ஊதா நிற கண்களையும் உடைய சிறுமி அங்கே ஈஸ்டர் புஷ்பத்தைப் போல் நின்று கொண்டிருந்தாள், (அவள் இப்பொழுது இங்கே உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்) 17அவள் என்னிடம் ஒரு அட்டையைக் கொடுத்தாள். (நிச்சயமாக, நான் வீட்டிற்கு போகையில் அங்கே அநேக ஈஸ்டர் கார்டுகள் (Easter Cards) இருக்கும். ஆனால்...) எனக்கு கிடைத்த அந்த ஒரே அட்டையை நான் வீட்டில் வைத்திருக்கிறேன். “சகோதரன் பிரான்ஹாம் நானும், என்னுடைய தகப்பனும் இதைக் கொடுக்கிறோம்” என்று கூறின அவள், ''நான்“, என்பதை நிச்சயப்படுத்தி சொல்ல விரும்பினாள். சக்கர இது சூரிய உதயம் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மூட்டு வலியால் கஷ்டப்படும் அவளுடைய தகப்பனார் இந்த அட்டையை அனுப்பி வைத்தார். நான் அதை பெற்றுக் கொண்டு அச்சிறு பெண்ணிற்கு நன்றி சொன்னேன். அவள் திரும்பி கதவிற்கு அப்பால் நடக்கத் தொடங்கிய போது நான் அந்த அட்டையைப் பிரித்தேன். அந்த அட்டையிலிருந்து தான் நான் என்னுடைய இந்த பிர்சங்கத்தை தீர்மானித்தேன். ஏனெனில் அந்த அட்டையில் மாற்கு: 16:1,2 வசனங்கள் எழுதப்பட்டிருந்தது. சூரியன் - மேலே - சூரியன் உதித்தது - இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பிய உயிர்ப்பிக்கும் வல்லமையை சிந்தித்து என்னுடைய இந்த செய்தியை நான் தீர்மானித்தேன். 18இப்பொழுது, சூரியன் உதிக்கிற சூரியன்... நல்லது, ஒரு காலத்தில் உலகம் முழு இருளுக்குள் கிடந்தது. அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. முற்றிலும் ஜலத்தினால் சூழப்பட்டு இருளும், மப்புமான சீதோஷ்ணத்தை உடையதாயிருந்தது. ஜலத்தின் மேல் ஆவியானவர் அசைவாடிக் கொண்டிருந்து, “வெளிச்சம் உண்டாகக் கடவது'' என்றார். தேவன் அப்படிச் செய்ததற்கு ஒரு காரணம் இருந்தது. ஏனெனில் ஜலத்தின் அடியில் தேவன் விதைத்த வித்துக்கள் இருந்தன. அவைகள் உயிர் வாழ்வதற்கு சூரிய வெளிச்சம் தேவைப்பட்டது. 19தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையே பூமிக்கு கொடுக்கப்பட்ட முதல் வெளிச்சமாகும். பூமியை வந்தடைந்த முதல் வெளிச்சமே தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தை தான்; அவர், “வெளிச்சம் உண்டாகக் கடவது'' என்று சொன்னார். வெளிச்சம் உண்டாயிற்று. அது பூமியின் மேலே ஜீவனையும், சந்தோஷமிக்க ஒரு சிருஷ்டிப்பையும் உருவாக்குவதற்கு இருளை வெளிச்சமாக மாற்றியது. பூமியின் மேல் சிருஷ்டிப்பானது உதித்த முதல் நாளில் தேவ ஆவியானவர் அன்புடனும் மனதுருக்கத்துடனும் அசைவாடிக் கொண்டிருந்தார். அந்த மகத்தான நாளில் சூரியன் உதித்து தன்னுடைய கதிர்களை பூமியெங்கும் வீசி, பூமியிலிருந்த தண்ணீர்களையெல்லாம் வற்றி மேலே எழும்பிச் செல்லக் கூடிய ஒரு சீதோஷ்ண நிலையை உண்டாக்கியது. ஒரு வித்தினால் முதல் தடவையாக சந்தோஷமும் ஜீவனும் பிறந்தது. அது ஒரு மகத்தான நேரமாயிருந்தது. ஆனால், ஓ! அந்த சூரிய உதயம் இயேசு உயிர்த்தெழுந்த காலையில் (Easter Morning) உதித்த சூரிய உதயத்தைப் போன்றதல்ல. இந்த சமயம் ஒருபோதும் இருந்திராதளவு சூரியன் வானங்களில் பாய்ந்தோடி மகத்தான சூரிய உதயத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் ஆதியிலே உதித்த சூரிய உதயத்தைவிட இச்சமயம் ஒரு மகத்தான செய்தியுடனே சூரியன் உதித்தது. இந்த சூரிய உதயம், “அவர் உயிர்த்தெழுந்தார்! அவர் வாக்குரைத்த விதமாகவே உயிர்த்தெழுந்தார். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்” என்ற செய்தியைக் கொண்டு வந்தது. 20முதல் தடவையாக (ஆதியாகமத்தில்) சூரியன் உதித்தது. அது பூமியின் மேல் ஜீவன் உண்டாயிருக்கும் என்ற செய்தியை கொண்டு வந்தது - சாவுக்கேதுவான ஜீவன். ஆனால் இந்த தடவை சூரியன் உதித்தபோது இது சூரிய உதயமாக (dual sun rising) இருந்தது. குமாரன் (SON) உதயமாக (rising) இருந்தது. வெறும் ஒரு சூரிய (S-U-N) உதயம் மட்டுமல்ல. தேவனுடைய முன்னறிவினால் முன்னறியப்பட்டு பூமிக்குள் புதைந்து கிடந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வித்துக்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பதற்காக குமாரன் (S-O-N) உயிர்த்தெழுந்த சூரிய உதயமாகும். ஆதியிலே தாவர உயிரினம் ஜீவனைப் பெற்று உயிர் வாழ்வதற்கு சூரியன் (S-U-N) தேவைப்பட்டது. உலகத் தோற்றத்திற்கு முன்பே தேவன் தனக்குள்ளாக தெரிந்தெடுத்து, இன்று பூமியில் ஜீவிக்கிற தேவனுடைய குமாரர்கள் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வதற்கு குமாரனுடைய வெளிச்சம் (S-O-N- Light) தேவைப்படுகிறது. தேவன் அவர்களை தனக்குள்ளாக உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே முன் குறித்துவிட்டார். இயேசு உயிர்த்தெழுந்த அன்று காலையில் நம்முடைய சரீரங்கள் இங்கே எங்கேயாவது, குப்பையில் கிடந்திருக்கும். ஏனெனில் நாம் பூமியின் மண்ணினால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள்; பரலோகத்தில் ஒரு ஞாபக புஸ்தகம் உண்டு. இந்த குமாரன் உயிரோடெழுந்தால், இந்த மகத்தான காலத்தில் தோன்றுவதற்கு நியமிக்கப்பட்ட ஒவ்வொரு குமாரனையும் அவர் ஜீவனோடே எழுப்புவார் என்பது அவருக்குத் தெரியும். அவருடைய தன்மைகள் அவருக்குள்ளாகவே இருந்தது. அப்படி சம்பவிக்குமென்று அவருக்குத் தெரியும். முதலாவதாக உதித்த சூரிய உதயத்தைவிட இது என்னே ஒரு அதிக மகிமையான சூரிய உதயம். இப்பொழுது இந்த ஈஸ்டர் முத்திரையை (Easter Seal) உடைப்பதின் மேல்...! 21இன்று நம்மிடத்தில் ஒரு க்ஷயரோக (Tuberculosis) ஈஸ்டர் முத்திரை தான் உள்ளது. ஜனங்கள் ஒருவர் மற்றொருவருக்கு ஒரு செய்தியை அனுப்பி, க்ஷயரோகத்தை கட்டுப்படுத்த எதையாவது செய்வதற்கோ அல்லது அதற்கு உதவி செய்யவோ மருத்துவர்களை அனுப்புவதற்கு பெருமளவு பண உதவி செய்கிறார்கள். நாம் ஒருவர் மற்றொருவருக்கு செய்தியை அனுப்பும் பொழுது ஈஸ்டர் முத்திரையை என்னவென்று அழைப்போம்? நம் அச்செய்தியை பெற்றுக் கொள்ளும் போதுதான் அந்த முத்திரை உடைக்கப்படுகிறது. ஏனெனில் அந்த முத்திரையில் ஒரு செய்தி முத்திரிக்கப்பட்டுள்ளது.... இப்பொழுது இந்த சூரிய உதயத்தின் போது உண்மையான ஈஸ்டர் முத்திரை உடைக்கப்பட்டு மரணத்திற்கு பின்னால் உள்ள ஜீவனின் இரகசியம் வெளிப்படுத்தப்பட்டது. அச்சமயத்திற்கு முன்னால் அது நமக்குத் தெரியாது. உலகம் இருளுக்குள்ளும், மனிதனுடைய அவநம்பிக்கைக்குள்ளாகவும் மூழ்கிக் கிடந்தது. மனிதனால் உண்டாக்கப்பட்ட தத்துவங்களும் பாரம்பரியங்களுமே மனிதர்களுடைய இருதயத்தை நிரப்பியிருந்தது. மனிதன் விக்கிரங்களை வணங்கினான்; அவர்கள் சூரியனை வணங்கினார்கள். அவர்கள் எல்லாவிதமான தேவதைகளையும் வணங்கினார்கள். உரிமை கொண்டாடிய எல்லாவிதமான மக்களும் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் கல்லறையிலேயே தங்கிவிட்டார்கள். ஆனால் உண்மையான முத்திரை உடைக்கப்பட்டது, நாம் வாழ்வது போல் வாழ்ந்தவரும், நாம் மரிப்பது போல் மரித்தவருமான ஒருவர் மரித்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். எனனே ஒருகாலை வேளை, உலக சரித்திரத்தில் இதுவரை அவரைப் போல் ஒருவரும் உயிரோடெழுந்தது இல்லை. அவரே உயிர்த்தெழுதலும் ஜீவனுமானவர் என்கிற இரகசியம் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. 22''நான் பிழைத்திருப்பதால் நீங்களும் பிழைத்திருக்கிறீர்கள்“ என்று அன்று காலையில் அவர் வந்து சொன்னார். உயிர்த்தெழுதலில் அவர் மட்டும் பங்கடையவில்லை, தேவனுடைய மகத்தான கிருபையைப் பெற்ற எல்லா வித்துக்களுமே அவருடைய உயிர்த்தெழுதலினால் ஜீவனுக்கு பங்காளிகளாகிவிட்டார்கள். ஏனெனில் ''நான் பிழைத்திருப்பதால் நீங்களும் பிழைத்திருக்கிறீர்கள்” என்று அவர் கூறினார். அதுவே முத்திரையை உடைத்தலாகும். அவர் உயிரோடு எழுப்பப்பட்டதால் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களும் அவரோடே கூட உயிருடன் எழுப்பப்படுவார்கள். இந்த மகிமையான சூரிய உதயத்தின் போது தேவன் தம்முடைய வார்த்தையை நிரூபித்து அதை ஒரு நிரூபணமாக்கிவிட்டார். ஜனங்களின் இருதயத்தில் தேங்கிக் கிடந்த எல்லா இருளும், சந்தேகங்களும் அகற்றப்பட்டுவிட்டது, ஏனெனில் புசித்தும் குடித்தும் முன்பு ஒருமுறை மனுவர்க்கத்துடன் ஐக்கியம் கொண்டு வாழ்ந்து, ''நான் என்னுடைய ஜீவனை கொடுக்கவும் அதை மீண்டும் எடுத்துக் கொள்வதற்கும் எனக்கு அதிகாரமுண்டு'' என்று வாக்குரைத்த அதே நபர் இங்கே இருக்கிறார். அவர் அந்த வாக்குறுதியை சொன்னதோடு மட்டுமல்லாமல் அதை சத்தியம் என்று வாக்குரைத்த அதே நபர் இங்கே இருக்கிறார். அவர் அதை நிரூபித்துவிட்டார். ஓ! என்னே ஒரு மகிமையான காரியம். அதை விசுவாசிக்கிறவர்களாகிய நாமும் அது எவ்வளவு ஒரு மகிமையான காரியம் என்பதை புரிந்து கொள்ள முடியாதென்பதை இந்த காலை வேளையிலே நிச்சயமாக சொல்கிறேன். அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்ததால் அவருக்குள்ளாக இருந்த நாமும் கூட மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்துவிட்டோம். 23இப்பொழுது கவனியுங்கள். பூமியில் இருள் சூழ்ந்திருந்ததால் சூரிய (S-U-N) உதயம் இல்லாமல் வித்துக்கள் உயிர் வாழ முடியவில்லை. பூமியை இருள் கவ்வியிருந்தது. இப்பொழுது குமாரன் (S-O-N) உயிர்த்தெழுந்தார். ''அவர் உயிர்த்தெழுந்தார், அவர் அங்கே இல்லை! என்கிற செய்தி எல்லா தேசங்களிலும் பரவியதால் இந்த வெளிச்சத்தின் மூலம் எல்லா இருளும் மறைந்துவிட்டது. என்னே ஒரு - என்னே ஒரு வாக்குத்தத்தம். அவர் தம்முடைய வார்த்தையை நிரூபித்துவிட்டார். ஏனெனில், அவர் இப்பொழுது மரணம், நரகம், கல்லறை, இம்மூன்றையும் ஜெயித்துவிட்டார். சாத்தானுடைய திரித்துவமாகிய மரணம், நரகம், கல்லறை, ஆகிய இம்மூன்றையும் அவர் ஜெயித்துவிட்டதால் அவர் தம்முடைய வார்த்தை சத்தியம் என்று நிரூபித்துவிட்டார். ஏனெனில் சாத்தான் தான் மரணத்தை உண்டாக்கியவன். நரகத்திற்கும், கல்லறைக்கும் அதிபதி அவனே. மரணமாகிய ஒரு காரியத்தை உண்டாக்கிய தன் விளைவாக நீங்கள் கல்லறைக்கும், பாவியாக நரகத்திற்கும் போகிறீர்கள். அது தான் சாத்தானின் திரித்துவம். சாத்தானின் திரித்துவத்தில் ஒன்றாகிய மரணம் தான் இவ்வளவு காலங்களாக மனிதனை அடிமைத்தனத்திற்குள்ளாக்கியது... 24ஆனால் இப்பொழுது, தேவனுடைய திரித்துவம் கிறிஸ்துவிலே வெளிப்பட்டது, மெய்யான ஜீவ தேவனாகிய அவரே ஜீவன், அவரே முத்திரைகளை உடைத்து - சாத்தானை ஜெயம் கொண்டு உயிரோடு எழுந்தவர். ''நான் மரித்தேன், ஆனாலும் இதோ சதா காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன். நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்''. மனிதனை உண்டாக்கிய ஒன்றான மெய்தேவன் நம் மத்தியிலே வாசம் செய்து எல்லாப் பகைவர்களையும் ஜெயித்து, சாத்தானின் திரித்துவம் ஜெயிக்கப்பட்டதையும், தேவனுடைய திரித்துவம் வெளியாக்கப்பட்டதையும் நிரூபித்துவிட்டார். ஏனெனில் தேவன் ஒருவர் மாத்திரமே மீண்டும் ஜீவனை திரும்ப அளிக்கும் அதிகாரத்தை உடையவராயிருந்தார். அவரே இம்மானுவேல். தேவன் மாமிசத்திலே தம்மை வெளிப்படுத்தினார். “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனக்கு சாட்சியாக உங்களை நான் உலக முழுவதும் அனுப்புகிறேன்'' என்று அவர் மத்தேயு: 27ஆம் அதிகாரத்தில் உரிமையுடன் சொல்லியதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. அவர் மரணத்தையும்; நரகத்தையும், கல்லறையையும் ஜெயித்தார். அவர் அவைகளை ஜெயித்ததோடு மட்டுமல்லாமல், வானத்திலும் பூமியிலும் பிதாவுக்கும், பரிசுத்தாவிக்கும், குமாரனுக்கும் உண்டான எல்லா அதிகாரங்களையும் அவருக்குள் உடையவராக மகத்தான வெற்றியடைந்தவராக வெளியே வந்தார். ”வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.'' மற்றவை எல்லாம் வல்லமையற்றது. அவர் ஒருவரே அதை ஜெயம் சிறந்தார். 25இப்பொழுது அது மாத்திரமல்ல, அவர் தம்மை விசுவாசித்த அவருடைய சீஷர்களுக்கு, “பயப்படாதிருங்கள், மரித்தேன், ஆனாலும், இதோ சதா காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன். நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன், நான் ஏற்கனவே ஜெயித்துவிட்டேன்”, என்ற வார்த்தையை அனுப்பினார். ஒரு போதும் பயப்படாதிருங்கள், ஏனெனில் தேவனால் முன் நியமிக்கப்பட்டு முன் குறிக்கப்பட்ட வித்துக்களுக்கு மகிமையான சுவிசேஷத்தின் வெளிச்சம் பூமியின் மேல் வீசும் பொழுது, அவைகள் ஜீவனைப் பெற்றுக் கொள்ளும். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். ஓ, என்ன ஒரு ஆச்சரியம்! ''நான் ஜீவிக்கிறேன், அல்லது உயிர்ப்பிக்கப்பட்டேன்'', உயிர்ப்பிக்கப்பட்டேன் (quickened) என்கிற கிரேக்க சொல்லின் அர்த்தம், ''மரணத்திற்குப் பின்னும் உயிரோடே இருக்கிறேன்'' என்பதாகும். அது ஒரு வித்து பூமிக்குள் சென்று, முற்றிலுமாக செத்து அழுகி, அதன்பின் அந்த வித்துக்குள் இருந்த அதே ஜீவன் மீண்டும் வெளிப்படுவதாகும். அவர் உயிர்ப்பிக்கப்பட்டார். அது மட்டுமல்ல... “நான் இருக்குமிடத்தில் நீங்களும் இருக்கும்படி உங்களை உயிர்ப்பிக்க, என்னை கல்லறையிலிருந்து உயிரோடு எழுப்பிய அதே ஜீவனின் வல்லமையை உங்களுக்கும் அனுப்புவேன்” 26அவர் பங்கடைய வந்ததோடு மட்டுமல்லாமல் அந்த நன்மையை மற்றவர்களோடும் அவர் பகிர்ந்து கொள்கிறார் என்பதை நிரூபிப்பதற்காக அவர் லூக்கா: 24-ம் அதிகாரம் 49-ம் வசனத்தில், ''என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை இதோ நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்'' (அல்லது நீங்கள் காத்திருங்கள்) என்றார். உலகத் தோற்றத்திற்கு முன்பே தேவன் முன்னறிந்து, ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டு, முன்குறிக்கப்பட்ட வித்துக்களை மீட்டுக் கொள்ள அல்லது அவர்களுக்கு ஜீவனை கொடுப்பதற்காக அவர் வருகிறார். அந்த வித்துக்களோ இங்கே பூமியின் மேல் நம்பிக்கையற்றவர்களாக இருக்கிறார்கள். அவர் ஆசீர்வாதமாக மட்டுமல்ல. ஒவ்வொரு முன்குறிக்கப்பட்ட வித்திற்கும் அந்த ஆசீர்வாதத்தை பகிர்ந்து கொள்ளவே அவர் வந்தார். வித்தானது பூமிக்குள் இல்லாவிடில் அது உயிர்வாழ முடியாது. வித்து ஜீவனையும் பெற்று பூமிக்குள்ளும் இருந்திருக்க வேண்டும். அது எவ்வளவு காலம் இருளுக்குள் இருந்தது என்பதைப் பற்றி கவலையில்லை. கு - மா - ர - ன் அதன் மேல் பிரகாசிக்கும் பொழுது அது ஜீவனைப் பெற்றுக் கொள்ளும். இப்பொழுது கவனியுங்கள். அவர் அதை நம்முடன் பகிர்ந்து கொள்ள வருகிறார். சுவிசேஷம் நற்செய்தி என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. 27சுவிசேஷம் என்கிற வார்த்தையின் சரியான அர்த்தம். “நற்செய்தி”, என்பதே. நற்செய்தி என்றால் என்ன? நமக்காக ஒரு மனிதன் மரித்தால், அது நற்செய்தி. கிறிஸ்து பிறந்தார் என்பது நற்செய்தி. ஆனால், மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்கள் தம்முடைய கைகளில் இருக்கிறது என்று வாக்குரைத்தவர் அந்த வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்திவிட்டார் என்கிற செய்தியைப் போல் வேறொரு செய்தி ஒரு போதும் இருந்ததில்லை. எல்லா இருளும் மறைந்துவிட்டது; அங்கே ஒரு போதும் இருள் காணப்படவுமில்லை. ஏனெனில் குமாரன் கல்லறையிலிருந்து உயிரோடே எழுந்துவிட்டார். “அவர் வருவார்” என்றோ “அவர் வரலாம்” என்றோ இல்லை. அவர் உயிரோடே ஏற்கெனவே எழுந்துவிட்டார் என்பதே சுவிசேஷ நற்செய்தி. 28கவனியுங்கள். அவர் உயிர்த்தெழுந்தார் என்பதை ஜனங்களுக்கு நிரூபிப்பதே சுவிசேஷத்தின் நற்செய்தியாகும். “நான் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டேன், ”அவர்களுக்கு இதை உறுதிப்படுத்துவதற்கு நான் அவர்களை சந்திப்பேன் என்று புறப்பட்டு போய் என்னுடைய சீஷர்களிடம் சொல்லுங்கள்'' ஓ, தேவனே இந்த கடைசி நாட்களில் பூமியின் மேல் மீண்டும் வெளிச்சமுண்டாகும். “நான் மரிக்கவில்லை. நான் ஒரு பாரம்பரியம் அல்ல, ஆனால் நான் ஒரு ஜீவிக்கிற கிறிஸ்து என்று புறப்பட்டுப்போய் என்னுடைய சீஷர்களிடம் சொல்லுங்கள். நான் அவர்களை சந்திப்பேன்; நான் இதை என்னுடைய சீஷர்களுக்கு நிரூபிப்பேன்” இதுதான் சுவிசேஷ நற்செய்தி. இது சரியா என்று நீங்கள் கேட்கிறீர்களா? 29அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவர் என்று எபிரேயர்: 13:8 சொல்கிறது. அவருடைய ஜீவனுக்கு பங்குடையவர்களாகிய நாம் அவருடைய ஜீவன் நம்மில் இருக்கிறதையும் நாம் அவருடைய ஜீவனுக்கு பங்காளிகள் என்பதையும் நிரூபிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஜீவன், அவர் தேவனுடைய குமாரன். அவரைப் போல் ஜீவனுடையவர் யாரும் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. அவர் மரித்தார், அது அவருடைய ஜீவனை மறைத்துவிட்டது; ஆனால் ஈஸ்டர் அன்று காலையில் அவர் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிரோடே எழுந்த போது எல்லா ஜாதியாரிடத்திலும் புறப்பட்டுப் போய் ஒவ்வொருவருக்கும் அவர் ஜீவிக்கிறார் என்ற இந்த சுவிசேஷ நற்செய்தியை அறிவிக்க அவருடைய ஊழியக்காரர்களாகிய நம்மை ஏற்படுத்தியிருக்கிறார். அதை நாம் வார்த்தையினால் மட்டும் எவ்வாறு அறிவிக்க முடியும்? ஏனெனில் அவர் உயிரோடே இருக்கிறார் என்பதை நிரூபிக்க, “எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடே மாத்திரமல்ல. வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும் முழு நிச்சயத்தோடும் வந்தது'' என்றும் எழுதியிருக்கிறதே. 30பவுல் ஒரு சாராரைப் பார்த்து “நீங்கள் இந்த இரட்சிப்பின் சுவிசேஷத்தை விட்டு வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்பியதைக் குறித்து நான் ஆச்சரியப்படுகிறேன்'' என்று சொல்லியதைப் போல, வேறொரு சுவிசேஷம் இருந்தால், அது ஒரு பாவனை விசுவாசியின் சுவிசேஷமேயன்றி வேறொன்றுமில்லை. “நான் பிழைத்திருக்கிறபடியால் நீங்களும் பிழைத்திருக்கிறீர்கள். நான் உங்களில் ஜீவிக்கிறேன்; நான் செய்கிற கிரியைகளே நான் உங்களில் இருக்கிறேன் என்பதற்கு அடையாளம். (யோவான்: 14:12) ஓ, என்ன ஒரு செய்தி! நம்மிடையே உள்ள இருண்ட உலகப் பிரகாரமான மத சாஸ்திரத்தை குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் சாயங்காலத்திலே மீண்டும் வெளிச்சம் உண்டாகும். சாயங்காலத்திலே ஒரு உயிர்த்தெழுதல் உண்டு. சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும். 31இப்பொழுது, அவருடைய உயிர்த்தெழுதலில் பங்குடையவர்களாகிய நாம், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து ஜீவிக்கிறார் என்பதை நிரூபிப்பதின் மூலமாக ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணுகிறோம் என்பது தான் அனுப்பப்பட்ட செய்தியின் முக்கியமான சாரம் (essence of the message). அதை நாம் வெறும் வார்த்தையினால் மாத்திரம் செய்ய முடியாது; அதை நாம் மனிதனின் பாரம்பரியத்தினாலும் செய்ய முடியாது; நாம் அவருக்குள்ளாக பெற்ற ஆசீர்வாதத்தை பிரதிபலித்துக் காட்டுவதின் மூலமே செய்யமுடியும். இன்று நம்மில் அநேகர் கிறிஸ்துவிடம் ஜனங்களை கொண்டு வருவதில்லை என்று நான் பயப்படுகிறேன். நாம் ஜனங்களை சபையிலும், மத சாஸ்திரத்திலும் கொண்டு வந்து சேர்க்கிறோம். ஆனால் நாம் ஜனங்களை கிறிஸ்துவிடம் கொண்டு சேர்க்க வேண்டும், அவர் ஒருவர் மட்டுமே ஜீவனை உடையவர், “குமாரனை உடையவன் ஜீவனையுடையவன்”. ஒரு மரித்துப் போன மனிதனுடைய ஜீவனை உனக்குள் செலுத்தினால், நீயும் அந்த மரித்த மனிதனுக்குள் இருந்த அதே ஜீவனைத் தான் உடையவனாயிருப்பாய். நீங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான இரத்தத்தை ஒரு மனிதனிடமிருந்து எடுத்து அதை மற்றொரு மனிதனுக்குள் செலுத்தினால் அவன் அதே வகையான இரத்தத்தையே உடையவனாயிருப்பான். உனக்குள் இருக்கும் உன்னுடைய ஆவி மரித்ததாக எண்ணப்பட்டால், கிறிஸ்துவுக்குள் இருந்த அதே ஜீவனால் நீ அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தால்... “அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்” என்று ரோமர்: 8:11 சொல்கிறது, அதே ஜீவன், அதே வல்லமை. அவர் இங்கே பூமியிலிருந்த போது தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொண்ட அதே நன்மைகள்; உலகத் தோற்றத்திற்கு முன்பே எவர்களுடைய பெயர்கள் முன் குறிக்கப்பட்டு ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டதோ, அவர்களை அவர் மீட்டுக் கொண்டார். 32உயிர்த்தெழுதலின் சுவிசேஷ வெளிச்சமே வார்த்தையின் உறுதிப்பாடு... அவர் கிறிஸ்து தான் என்பதை நாம் எப்படி தெரிந்து கொண்டோம்? ஏனெனில் அவர் தாம் சொல்லியதை நிரூபித்தார். இந்த மணி வேளைக்குரிய செய்தியை நான் எப்படி தெரிந்து கொள்வேன்? தேவன் தாம் சொல்லி வாக்குரைத்ததை நிரூபிக்கிறார். நாம் அவருடைய உயிர்த்தெழுதலில் பங்குடையவர்களாயிருக்கிறோம் என்பதற்கு அதுவே அடையாளம். அவர் தாம் சொல்லியதை நிருபிக்கிறார். கிறிஸ்துவில் அவர் என்ன செய்வதாக வாக்குரைத்தாரோ அதை அவர் உயிர்த்தெழுதலில் நிரூபித்தார். மோசேயின் நாட்களில் அவர் தாம் என்ன செய்வதாக வாக்குரைத்தாரோ அதை நிரூபித்தார். ஏனோக்கின் நாட்களில் அவர் என்ன வாக்குரைத்தாரோ அதை நிரூபித்தார். அப்போஸ்தலருடைய வாழ்நாள் முழுவதும் அவர் அதை நிரூபித்தார். இப்பொழுது இந்நாளில் அவர் தாம் சொல்லியதை நிரூபிக்கிறார். ஏனெனில் அவர்கள் எல்லோரையுமே மறுபடியும் வந்து மீண்டும் தேவனிடம் அவர் மீட்டுக் கொள்வார், ஏனெனில் அவர்கள் யாவரும் ஜீவ புஸ்தகத்திலே குறிப்பிடப்பட்டுள்ள அந்த வித்தின் பகுதியாய் உள்ளனர். ஓ! என்னே ஒரு செய்தி! 33ஈஸ்டர் காலையில் அவர் மட்டும் உயிரோடு எழவில்லை, உயிர்த்தெழுதலில் பங்குள்ள அவருடையவர்களும் அவரோடே உயிர்த்தெழுந்துவிட்டார்கள். அவர் சிலுவையிலறையப்பட்ட போது அவர்களும் கிறிஸ்துவுக்குள் இருந்தார்கள். அவருடைய உயிர்த்தெழுதலிலும் அவர்கள் அவரோடே இருந்தார்கள்; இருளிலே மரித்துக் கொண்டிருந்ததிலிருந்து அவர்கள் உயிர்ப்பிக்கப்பட்டதனாலே, அவருடைய பங்காளிகளாகிறார்கள். சபை ஸ்தாபனங்கள் நம்மை மரணத்திற்குட்படுத்திய இருளிலிருந்து அவிசுவாசமான இருளான உலகத்திலிருந்து நாம் உயிர்ப்பிக்கப்பட்டோம். நமக்குள் ஏதோ ஒன்று இருந்து கொண்டு, “ஓ! நாங்கள் தேவனை வாசிக்கிறோம்; நாங்கள் தேவனுக்காக பசிதாகமுடையவர்களாயிருக்கிறோம்'' என்று கூப்பிடுகிறது. நாம் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தெகொஸ்தே, பிரஸ்பிடேரியனிலும் சேருகிறோம்; இன்னும் எதுவாயிருப்பினும், அவற்றில் ஏதோ தவறு இருக்கிறது. நம்மால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நாம் இருளில் தடுமாறிக் கொண்டிருக்கையில் தேவனுடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின் வெளிப்பாட்டில் மகத்தான உயிர்த்தெழுதல் திடீரென்று நம்மிடம் வந்த்து. அது, அவர் தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாடாய் இருந்தது போல இருக்கின்றது. ''என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்'' என்பதை அவர் வெளிப்படுத்தினார். அவரைக் குறித்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் அவர் வெளிப்படுத்தினார். ஈஸ்டர் காலை வேளையிலே அவர் உயிரோடு எழுந்தபோது அதை அவர் நிரூபித்துக் காட்டினார். 34இப்பொழுது, இந்நாளிலா கால்களை கழுவ வேண்டும். அல்லது வேறொரு நாளிலா என்றும் அல்லது இப்படிப்பட்ட ஒழுங்கு முறைகளை கடைபிடிக்க வேண்டுமா என்றெல்லாம் தெரியாமல் இருளில் முன்பு தடுமாறிக் கொண்டிருந்த ஜனங்களுடைய அப்படிப்பட்ட காரியங்கள் எல்லாம் ஒழிந்துபோயின. ஏனெனில் ஒரு மகத்தான உயிர்த்தெழுதல் உண்டாகி அது மனிதனால் உருவாக்கப்பட்டதும், மனிதனால் ஜெயிக்க முடியாததுமான எல்லாக் காரியங்களையும் வீழ்த்திவிட்டது. ஒரு மனிதன் தன் ஜீவனை இழந்து அதை மீண்டும் உயிரோடெழுப்பின சம்பவம் ஒருபோதும் நிகழவில்லை. அவர் மீண்டும் தம்மை உயிரோடெழுப்பி அவர்களுடைய விஞ்ஞான நிரூபணத்தை பொய்யாக்கிவிட்டார். 35இயேசு கிறிஸ்துவின் வல்லமை மாறாதது அல்ல என்றும் அவருடைய சுவிசேஷம் மாறாதது அல்ல என்றும், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும், மாறாதவர் அல்ல என்றும் அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் வேதாகமமோ அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவர் என்று, சொல்கிறது. தேவன் எல்லா ஸ்தாபனங்களையும், எல்லா மதக் கோட்பாடுகளையும் வீழ்த்திவிட்டார், அவர் பரிசுத்தாவியினால் கிரியை செய்து தாம் வாக்குரைத்த படியே அவர் ஜீவிக்கிறார் என்பதை நமக்கு நிரூபித்துவிட்டார். பாவத்திலும், அக்கிரமங்களிலும் மரித்திருந்த நாம் அவரோடு மரித்து அவருடனே உயிர்த்தெழுந்து அவருடைய உயிர்தெழுதலில் பங்குடையவர்களாகி; இப்பொழுதே பரலோகத்திலுள்ள உன்னத ஸ்தானங்களிலே இயேசு கிறிஸ்துவுடனே உட்கார்ந்து இருக்கிறோம். அவருடைய ஆவி அவருடைய அதே ஜீவனை மீண்டும் பூமியின் மேல் கொண்டு வருகிறது. கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்பட்ட சரீரத்தை தேவ ஆவியானவர் உயிரோடே எழுப்பினாரானால் தேவ ஆவியானவர் அவ்விதமாக அந்த சரீரத்தை அபிஷேகித்திருந்தால், அந்த வித்து பூமிக்குள் சென்றதும், அந்த வித்து அங்கேயே தங்கியிருப்பதற்கு விடமாட்டார். இல்லை! அவர் அவரை உயிர்ப்பித்து உயிரோடே எழுப்பினார். அதே ஆவியினால் அதே கிரியைகள், அதே வல்லமை, அதே அடையாளங்கள் உன்னிலும் இருக்கும், அது உன்னையும் உயிருடனே மேலே எழுப்பும். 36நான் உங்களுக்கு இங்கே ஒரு சிறிய வேத பாகத்தை வாசிக்க விரும்புகிறேன். நான் இங்கே எழுதி வைத்துள்ள வேறொரு வசனத்தை நீங்கள் வாசிக்க விரும்புகிறேன். அது ஒரு சிறிதளவு உங்களுக்கு நன்மையாயிருக்கும். லேவியராகமம்: 23-ம் அதிகாரம் 9 முதல் 11 வசனங்கள் வரை. அது தேவன் மோசேயுடன் பேசி நியாயப் பிரமாணத்தில் லேவியருக்காக கொடுக்கப்பட்ட நியாயப் பிரமாணம். உன்னிப்பாக கவனியுங்கள். இந்தக் காரியங்கள் எல்லாம் இப்பொழுது வெறும் சாயலாகவே இருக்கிறது. நாம் நம்முடைய பிரசங்கத்தை சற்று நேரம் நிறுத்திவிட்டு இந்த சாயல் என்னவென்று பார்ப்போம். பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி; நீ இஸ்ரவேல் புத்திரரோட சொல்ல வேண்டியது என்னவென்றால். நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய் சேர்ந்து... ''...நான் உங்களுக்கு கொடுத்த ஸ்தலத்திற்கு, ஸ்தானத்திற்கு நீங்கள் போய் சேரும்போது... இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டியது என்னவென்றால், நான் உங்களுக்குக் கொடுப்பேன் என்று வாக்குத்தத்தம் செய்த தேசத்தில் நீங்கள் சேரும் பொழுது“ இயற்கைக்குரிய காரியத்தின் மூலம் ஆவிக்குரிய காரியத்தை சாயலாகக் காண்பிக்கிறார். உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய... (நான் சொன்னதை நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள்)... உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய கதிர்க் கட்டை, ஆசாரியனிடத்தில் கொண்டு வரக் கடவீர்கள்.'' உங்களுக்காக அது அங்கீகரிக்கப்படும்படி ஆசாரியன் அந்தக் கதிர்கட்டை ஓய்வு நாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்ட வேண்டும். 37ஏதாவது பரிசுத்தமான மதச்சடங்குகள் இருக்குமானால், அது வாரத்தின் ஓய்வு நாளும், ஏழாவது நாளுமான சனிக்கிழமையில் தான் ஆசரிக்கப்பட வேண்டும். ஆனால் நினைவு கூறுதலாகச் செய்யப்படும் இந்தக் காரியத்தில், வாரத்தின் முதல் நாளிலே நீங்கள் பயிரிட்ட வித்தின் முதற் பலனை கதிர்கட்டை அசைவாட்ட வேண்டும் என்பதை கவனித்தீர்களா ? “அது வளர்ந்து முதிர்ச்சியடையும் போது இந்த கதிர்கட்டை அறுவடை செய்து வந்து அதை நீங்கள் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். அவன் அதை நீங்கள் அங்கீகரிக்கப்படும் படியான உங்கள் அங்கீகரிப்புக்காக கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டுவான். நீங்கள் உங்கள் கதிர்க்கட்டை ஆசாரியனிடம் கொண்டு வர வேண்டும். அவன் அதை கர்த்தருக்கு முன்பாக அசைவாட்ட வேண்டும்...” அவனோ அதை ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில் அல்ல, வாரத்தின் முதல் நாளில் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்ட வேண்டும். நாம் அதை ஞாயிற்றுக்கிழமை என்று அழைக்கிறோம். 'ஞா-யி-ற்-று-க்-கி-ழ-மை (S-U-N-D-A-Y)' மெய்யாகவே அது ஒரு ரோமன் வார்த்தை, ஞாயிற்றுக்கிழமை என்று அவர்கள் அழைக்கும் அந்த நாளை சூரிய தேவதைகளுக்காக உண்டாக்கினார்கள். (ஞாயிறு என்கிற இலக்கணம் நிறைந்த தமிழ் வார்த்தையின் அர்த்தம் சூரியன் என்பதை புரிந்து கொள்ளவும் - தமிழாக்கியோன்). ஆனால் அது எப்படி மாறியது? அது ஒருபோதும் (S-U-N) சூ-ரி-ய-ன் அல்ல. அது ஒரு கு-மா-ர-னி -ன் கிழமை (S-o-n-d-a-y) குமாரனின் நாளில் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்த தேவனுடைய முதல் கோதுமை மணியானது சபையாரின் மேல் நாம் அவருடைய வித்துக்கள் என்பதை காட்ட அசைவாட்டப்பட வேண்டும். அதுவே நித்திரையடைந்தவர்களில் முதல் பலனாகும். அவர் ஞாயிற்றுக் கிழமையில் உயிர்த்தெழுந்து, “போய் வருகிறேன்'' (Goodbye) என்று தம் கைகளை அசைத்து மக்களுடைய கண்களுக்கு முன்பாகவே உன்னதத்திற்கு ஏறிச் சென்றார். 38கவனியுங்கள், அதுவே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த தேவனுடைய முதல் கோதுமை மணியாகும். தேவனுடைய முதல் கோதுமை மணி. தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமையால் தேவன் அவருடைய ஜீவனை உயிர்ப்பித்து - மரித்தோரிலிருந்து எழுப்பினார். அவரே நித்திரையடைந்தவர்களில் முதற்பலன் - முதற்பலன் அவரே அந்த கதிர்க் கட்டு. ஆகையால்தான் அவர்கள் அந்த கதிர்க்கட்டை அசைவாட்ட வேண்டும். ஏனெனில் அதுவே முதலாவது முதிர்ந்த (Maturity) கோதுமை மணி. நித்திரையடைந்த மற்றெல்லாரும் உயிர்த்தெழுவார்கள் என்கிற விசுவாசத்துடன், தேவனுக்கு நன்றி செலுத்தும் ஞாபகார்த்தமாக அது அசைவாட்டப்பட்டது. அது ஒரு அடையாளம். 39இப்பொழுது இந்த நாளில் அவரே தேவனுக்குள் முதலாவது முழு முதிர்வை (Full Maturity) அடைய வேண்டியவராகையால் அவர் பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு ஜனங்களுக்கு மேலாக உயிர்ப்பிக்கும் வல்லமையால் அசைவாட்டப்படுகிறார். (ஓ! என்னே ஒரு மகிமையான பாடம்). முதல் கோதுமை மணி... அவர் அநேக சமயங்களில் சாயலாகவே இருந்த போதிலும், இவரே நித்திரையடைந்தவர்களில் முதற்பலன் ஆனார். அவர் சாயல் என்பதை நாம் பின்னால் பார்ப்போம். ஜீவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வித்திற்கு மேலாக அவர் அசைவாட்டப்பட்டார். பெந்தெகொஸ்தே நாளன்று பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி, ஆசீர்வாதம் வரும் என்று காத்திருந்த பெந்தெகொஸ்தே ஜனங்களின் மேல் அவர் அசைவாட்டப்பட்டார். குமாரனின் நாளாகிய கடைசி நாளில் லூக்கா: 17:30-ன் படி மனுஷகுமாரன் (S-O-N) வெளிப்பட்டு, ஜனங்களின் மேல் மீண்டும் அசைவாட்டப்படுவார் என்பதை நாம் அறிவோம். 40இப்பொழுது, இந்த மனுஷ குமாரன் யார்? “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாமிசமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்”, நமக்கு கிடைத்துள்ள எல்லாப் போதகங்களினாலும், அடையாளங்களினாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தையினாலும் (நாம் இப்பொழுது குறிப்பிட்ட லூக்கா: 17:30), மல்கியா: 4-ம் அதிகாரம், மற்றும் நமக்குத் தெரிந்த அநேக வேத வாக்கியங்களின் வாயிலாக அதே வார்த்தையாகிய தேவன் ஜனங்களின் மேல் மீண்டும் அசைவாட்டப்பட்டு மனிதனுடைய செத்த பாரம்பரியம் மரித்துவிட்டது என்றும், தேவனுடைய குமாரன் பரிசுத்தாவியின் அபிஷேகத்தோடு நம்மத்தியிலே மீண்டும் வாசம் செய்து நமக்கு ஜீவனைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் நாம் இன்று காண்கிறோம். 41எல்லாத் தீர்க்கதரிசிகளிலும் முதலாவதாக உயிர்த்தெழ வேண்டியவர் கிறிஸ்துவே. அநேக இடங்களில் அவர் சாயலாக இருந்த போதிலும், அவரே நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானவர். கடைசி நாட்களில் சபையிலிருந்து வெளியே வரும் கிறிஸ்துவின் மணவாட்டியின் மத்தியில் மீண்டும் ஒரு கதிர்க்கட்டு அசைவாட்டப்பட வேண்டும். ஓ, என்னே! கதிர்க்கட்டை அசைவாட்டுதல்! கதிர்க்கட்டு என்பது என்ன? முதலாவதாக முதிர்ச்சியடைந்த கோதுமை மணியென்று நிரூபிக்கப்பட்டவர்கள்தான் அந்த கதிர்க்கட்டு. அல்லேலூயா! நான் என்ன சொல்லுகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன். அது ஏற்கனவே ஜனங்களின் மேல் அசைவாட்டப்பட்டுவிட்டது. முதல் தடவையாக ஸ்தாபனங்களின் இருளிலிருந்து உயிர்த்தெழும் மணவாட்டியின் யுகம் (The Bride Age)வரப் போகிறது. அந்த யுகத்தில் முழுவதும் முதிர்ச்சியடைந்த முழு வார்த்தை (The Full Maturity Word) தன் முழு வல்லமைக்கும் அது மறுபடியும் திரும்பி, அன்று அவர் அங்கே செய்தது போலவே, அதே அற்புத அடையாளங்களுடன் ஜனங்கள் மீது அசைவாட்டப்படுகின்றது என்ற செய்தி உண்டாயிருக்கும். 42''நான் பிழைத்திருப்பதனால், நீங்களும் பிழைத்திருக்கிறீர்கள்'' என்று தம்முடைய மனைவியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். “நான் பிழைத்திருப்பதனால் நீங்களும் பிழைத்திருக்கிறீர்கள்” என்னே அது ஒரு உயிர்த்தெழுதல். என்னே இது ஒரு உயிர்த்தெழுதல். தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமையால் மரணத்திலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவில் ஜீவிப்பது. பெந்தெகொஸ்தே நாளில் வார்த்தையாகிய தேவன் ஜனங்களின் மத்தியில் அசைவாட்டப்பட்டார் - வார்த்தை வெளிப்படுத்தப்பட்டது. இப்பொழுதோ... நான் சொல்லியது போல, மீண்டும் கடைசி நாளில் அது மறுபடியுமாக அசைவாட்டப்பட வேண்டும். இப்பொழுது உதாரணமாக, 43நீங்கள் சொல்லலாம் “நல்லது, ஒரு நிமிடம் பொறுங்கள், சகோதரன் பிரான்ஹாம் எனக்கு ஒரு சபையைத் தெரியும். அது...'' நல்லது, அது எனக்கும் தெரியும். பாருங்கள்? ஆனால் இப்பொழுது, உதாரணமாக இன்று பிற்பகல் நாங்கள் டுசானுக்கு பெரிய புத்தம் புதிய கெடிலாக் (Cadillac) காரில் பயணம் செய்வதாக வைத்துக் கொள்வோம். அந்தக் காரில் இருக்கைகள் எல்லாம் மான் தோலில் (Doe Skin) செய்யப்பட்டுள்ளது. (மிகவும் மிருதுவான தோல், உட்காருவதற்கு வசதியாக இருக்கும்) கால் வைக்குமிடமெல்லாம் பளிச்சென்று சுத்தமாயிருக்கிறது. காரின் கைப்பிடி (Steering Wheel) வெள்ளியைப் போல முலாம் பூசி (Nickel Plated) கண்ணாடிக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் இயந்திரம் (Engine) சரியானது தானா என்றும் நிருபிக்கப்பட்டுள்ளது. சக்கரங்களெல்லாம் பேரிங்குகள் (Bearing) பொருத்தப்பட்டு கிரீஸ் (grease) வைத்து அடைக்கப்பட்டுள்ளது. சக்கரத்தின் டயர் (Puncture Proof) எளிதில் ஓட்டை விழாது என்றும், அந்த சக்கரம் இலகுவாக சுழல்கிறது என்றும் விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. காரிலுள்ள எல்லாப் பாகங்களுமே நல்ல நிலைமையில் சரிபார்த்து, பொருத்தப்பட்டு எரிபொருளும் (Gasoline) நிரப்பப்பட்டு உள்ளது. எரிபொருள்தான் காரை ஓட்டுவதற்கு உள்ள சக்தியாகும், ஏனெனில் எரிபொருளில் தான் பற்றி எரியக்கூடிய சக்தி (Octane) இருக்கிறது. ஆனால், காரின் எல்லா உறுப்புகளுமே சரியாகப் பொருத்தப்பட்டு, எரிபொருளும் தேவையான அளவு நிரப்பியிருந்தாலும் நீங்கள் காரை ஓட்டிச் செல்லமுடியாது. ஏனெனில் எரிபொருளை எரியவைக்கும் நெருப்பு அங்கே இல்லை (Spark). அங்கே எந்த ஒரு எரியவைக்கும் வல்லமையும் இல்லை. ''எரிபொருளில் தான் காரை இயக்கும் சக்தி இருக்கிறது. சகோதரன் பிரன்ஹாம்'', என்கிறீர்களா? நல்லது. எரிபொருளை எரிய வைப்பதற்கு அங்கே நெருப்பு இருந்தாலொழிய அது எரிபொருள் தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு அங்கே ஒரு எரிய வைக்கும் வல்லமை இல்லையாயின் அந்த எரிபொருள் சாதாரண தண்ணீரைப் போலத்தான் இருக்கும். 44மதவாதிகள் எவ்வளவு தான் உரிமை கொண்டாடினாலும், நீங்கள் எவ்வளவு நல்லதாக உங்கள் சபையை கட்டியிருந்தாலும், எவ்வளவு தான் வேதத்திற்கு ஒத்த கல்வி அறிவை நீங்கள் பெற்றிருந்தாலும், அந்த அசைவாட்டும் கதிர்கட்டு, பரிசுத்தாவி ஒரு மனிதன் மேல் வந்திறங்கி வார்த்தையை உயிர்ப்பிக்காவிடில் ஒரு பிரயோஜனமும் இல்லை (எரி பொருள் வார்த்தையை குறிப்பிடுகிறது. இதுவே சத்தியம்) பரிசுத்த ஆவியாலேயன்றி அது கிரியை செய்யாது. நாம் எரிபொருளுக்கு (Dynamics) அழுத்தம் கொடுக்காமல் மோட்டார் இயந்திரத்திற்கே மிதமிஞ்சிய அழுத்தத்தைக் கொடுக்கிறோம் இதுவே எரிபொருள் (வார்த்தை) என்பதை நிறைவேற்றவும், உறுதிபடுத்தவும், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையாகிய தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமை (Dynamic Power) சபையின் மேல் அவசியமாயிருக்கிறது. தேவனுடைய வல்லமை தேவைப்படுகிறது. எரிபொருள் தொட்டியில் (Gasoline Can) எரிபொருள் இருக்கலாம்; ஆனால் அது வெறும் தண்ணீர் தான்.பார்த்தீர்களா? நெருப்பு அதில் பட்டால்தான் அது எரிபொருளா? அல்லது அது எரிபொருள் இல்லையா என்பது தெரியும். 45நீங்கள் பரிசுத்தாவியை ஒரு ஸ்தாபனத்தில் வைப்பீர்களானால், நீங்கள் அங்கே கூச்சலிடும் சத்தத்தை மட்டுமே காணமுடியும். அது நீங்கள் உங்கள் மோட்டார் இயந்திரத்தில் முழுவதுமாக கரியை நிரப்பி, அதை பாழாக்குவதற்குச் சமம். பெந்தெகொஸ்தே நாளில் ஜனங்களின் மேல் அசைவாட்டப்பட்ட பரிசுத்தாவியானவரின் வல்லமை மீண்டும் திரும்பி வந்து, ஒரு மனிதனுடைய, அல்லது ஸ்திரீயினுடைய வாழ்க்கையிலும், அல்லது ஒரு சபையினுள் உயிர்ப்பிக்கும் பத்தாயிரம் மடங்கு அதிக சக்திவாய்ந்த வல்லமையை பரிசுத்தாவியானவர் பற்றி எரியச் செய்து, அந்த கெடிலாக் கார் எரிபொருளின் சக்தியால் சாலையில் விரைந்து ஓடுவதைப் போல, அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார் என்பதை நிரூபிக்கிறார், அதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். 46தீர்க்கதரிசிகள் அனைவரின் மத்தியிலிருந்தும் முதல் கதிர்க்கட்டாக தேவனுடைய குமாரன் தோன்றினார்; அவரே எல்லா தீர்க்கதரிசிகளுக்கும் ராஜா. அநேக சபைகளும், தாங்கள் தான் மணவாட்டி என்று சொல்லிக் கொள்பவர்களும், அநேகம் பேர் இருக்கிறார்கள். ஆனால் ஒரு மணவாட்டி தோன்றியே ஆகவேண்டும். அல்லேலூயா! (சகோ. பிரான்ஹாம் தன் கரங்களை இரண்டு முறை கொட்டுகிறார் - ஆசி) ஒரு உண்மையான மணவாட்டி தேவனுடைய வார்த்தையை மட்டும் பெற்றிராமல் (Mechanics) தேவனுடைய சிருஷ்டிக்கும் வல்லமையையும் (Dynamics) பெற்று அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையோடு நடைபோட்டு, ஜீவனையுடைய சபையாக ஒரு மணவாட்டி தோன்றியே ஆகவேண்டும். அந்த ஸ்தானத்தை நாம் கண்டு கொள்ளும் வரையிலும், சடங்காச்சாரங்களினால் நமக்கு என்ன பிரயோஜனம்? சபையில் தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமை இல்லாத பட்சத்தில், பரிசுத்த பொருள்களை விற்பனை செய்து சபையின் பண பலத்தை பெருக்குவதினால் என்ன பிரயோஜனம்? தேவனுடைய வார்த்தை (Mechanics) சத்தியம் தான் என்பதை எவ்வளவாக நிரூபித்தாலும், அது கிரியை செய்வதற்கு தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமை (Dynamics) இல்லையெனில் அதனால் ஒரு நன்மையுமில்லை. 47அதைத்தான் அவர் நிரூபித்தார். அல்லேலூயா! உயிர்த்தெழுதலும் (Easter) அதைத்தான் நிரூபிக்கிறது. (சகோ. பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை அநேக முறை தட்டுகிறார் - ஆசி) அவர் வெறும் வார்த்தை மட்டுமல்ல. அவர் தேவன். வார்த்தையாகிய அவருக்குள்ளே உயிர்ப்பிக்கும் வல்லமை இருந்தது. அந்த வல்லமைதான் கல்லறையில் மரித்து, குளிர்ந்து போய் விரைத்துப் போன இயேசு கிறிஸ்துவின் சரீரத்தை அசைத்து ஜீவனுண்டாக்கி மீண்டும் உயிரோடே எழுப்பி கல்லைப் புரட்டித் தள்ளியது. (மாற்கு: 16:4) “மரித்தேன்'' - சூரியன் அவர் மரித்தார் என்று சொல்லியது, சந்திரன் அவர் மரித்தார் என்று சொல்லியது. நட்சத்திரங்கள் அவர் மரித்தார் என்று சொல்லியது. முழு இயற்கையுமே அவர் மரித்துவிட்டார் என்று சொல்லியது. இப்பொழுதோ, அவர் மீண்டும் ஜீவிக்கிறார் என்பதை முழு உலகமுமே அறிந்து கொள்ள வேண்டும். தேவனுடைய வார்த்தை மட்டுமல்ல அந்த வார்த்தையை நிரூபிக்கிற உயிர்ப்பிக்கும் வல்லமையும் அவரே. அவர் மணவாளனானால் மணவாட்டி தோன்றியே ஆகவேண்டும். ஏனெனில் அவள் அவருடைய ஒரு பாகமே. மணவாட்டியைக் குறித்து உரைக்கப்பட்ட எல்லா வெளிப்பாடுகளின் நிறைவேறுதலும் வெளிப்படுவதன் (Manifestation) மூலமே மணவாட்டி தோன்ற முடியும். மணவாளனை விட அவள் மாறுபட்டிருந்தால் அவள் மணவாட்டி அல்ல, ஏனெனில் அவள் அவருடைய மாமிசத்தின் மாமிசமும் அவருடைய எலும்பின் எலும்பும், அவருடைய ஜீவனின் ஜீவனும், அவருடைய வல்லமையின் வல்லமையும் ஆனவள். அவள் அவருடையவள்! ஆணும், பெண்ணும் ஒருவராகவே சிருஷ்டிக்கப்பட்டு, ஆணிலிருந்து பெண் வெளியே எடுக்கப்பட்டு உருவானதைப் போல, மணவாட்டியும் அவருடைய ஆவியினாலே தோன்றியவள் (அவரிடமிருந்தே மணவாட்டியின் ஆவி வருகிறது). அவருடைய விலாவிலிருந்து மணவாட்டி எடுக்கப்பட்டு, அவருடைய மாமிசத்தின் மாமிசமாகவும். ஆவியின் ஆவியாகவும், அவருடைய வார்த்தையின் வார்த்தையாகவும் அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையின் வல்லமையாகவும் ஜீவிப்பாள். சபையும் ஜனங்களும். 48இப்பொழுதுள்ள எல்லாவிதமான ஈஸ்டர் முயல்களும் (Easter bunnies) ஞாபகார்த்த கொண்டாட்டங்களும், மிகப்பெரிய சபைகளிலுள்ள ஆடம்பரங்கள் எல்லாமே ஒழிந்துபோகும். உண்மையான சபை, தேவனுடைய வார்த்தையுடனும் தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமையுடனும் தோன்றும்போது... (மேலே கூறப்பட்டது ஒழிந்து போகும்). அவருக்குள் வாசம் செய்து மகத்தான கிரியைகளை நடப்பித்த தேவனுடைய ஆவியானவரே மணவாட்டிக்குள்ளும் வாசம் செய்து அதே கிரியைகளை நடப்பிப்பார். ஆமென்! ஏனெனில் யோவான்: 14:12-ல், ''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்த கிரியைகளைத் தானும் செய்வான். நான் என்னுடைய உயிர்ப்பிக்கும் வல்லமையை அவனுக்குக் கொடுப்பேன். உலகமானது அதை எதிர்த்து நிற்கமுடியாது. கடைசி நாளில் நான் அவனை உயிருடன் எழுப்புவேன்“ என்று அவர் சொன்னார். தேவனுடைய வார்த்தையும், உயிர்ப்பிக்கும் வல்லமையும் ஒன்றாகச் சேர்ந்தது தான் உயிர்த்தெழுதலின் செய்தியாகும். உயிர்ப்பிக்கும் வல்லமையின்றி தேவனுடைய வார்த்தையும், அல்லது தேவனுடைய வார்த்தையின்றி. உயிர்ப்பிக்கும் வல்லமை மாத்திரம் இருந்தாலோ, அது ஒரு நன்மையும் பயக்காது. நீங்கள் உங்கள் விருப்பம்போல் மேலும் கீழுமாகக் குதித்து கூச்சலிட்டு சத்தமிடலாம். ஆனால், வார்த்தையை நீங்கள் மறுதலித்தால் அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை காரை கிளப்புவதற்கு நீங்கள் எவ்வளவுதான் பிஸ்டனை (piston) இயக்கி, நெருப்பை உண்டாக்கினாலும், எரிபொருள் இல்லையென்றால் ஒரு பிரயோஜனமும் இல்லை. காரைக் கிளப்புவதற்கு எரிபொருள், நெருப்பு ஆகிய இரண்டுமே தேவைப்படுகிறது. ஆமென்! ஒருவர் கைவிடப்படுவார், மற்றொருவர் எடுத்துக் கொள்ளப்படுவார். அவ்விதமாகத் தான் சம்பவிக்கும். இரண்டு சபைகளும் ஒன்றைப் போலவே காட்சியளிக்கும். இரண்டுமே தன்னை தேவனுடைய சபை என்று உரிமை கொண்டாடிக் கொள்ளும். ஆனால் உண்மையான மணவாட்டி மாத்திரமே தேவனுடைய வார்த்தையையும், அவருடைய உயிர்ப்பிக்கும் வல்லமையையும் உடையவளாயிருப்பாள். அது அவ்விதமாகவே சம்பவிக்கும். அவர் சொன்னது எதுவோ, அதுவே சத்தியம். வார்த்தையை நீங்கள் எவ்வளவுதான் விசுவாசிப்பதாகச் சொன்னாலும், தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பெற்றுக் கொள்ளாவிட்டால், உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பெற்றுக் கொள்ளும் பொழுது தான், நமக்குள்ளாக இருக்கும் ஜீவன் கிரியை செய்ய ஆரம்பிக்கும். நமக்குள் இருக்கும் ஜீவன் கிரியை செய்ய ஆரம்பிக்கும் பொழுதுதான், அது அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவர் என்பதை உலகத்திற்கு நிரூபிக்கும். அதுதான் உயிர்த்தெழுதல் என்பதாகும். அதுவே தேவனுடைய வார்த்தையுடன் கூடிய உயிர்ப்பிக்கும் வல்லமையாகும். கவனியுங்கள், ஆவியே உயிர்ப்பிக்கிறது. (யோவான்: 6:63). ஆவிதான் ஜீவனை வெளிப்படுத்துகிறது. எரிபொருள் தானாகவே எரிவதில்லை, நெருப்புதான் அதை எரியச் செய்கிறது. புரிந்து கொண்டீர்களா? 49''என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது. ஆனால் நீங்கள் என்னில் நிலைத்திருந்தால் மிகுந்த கனிகளைக் கொடுப்பீர்கள்'', (அவரே வார்த்தை: பிதா வார்த்தையில் ஜீவிக்கிறார்) பிதா என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன். நான் தேவனுக்குப் பிரியமானதை மாத்திரமே செய்தவற்கு என் பிதா என்னை வழி நடத்துகிறார். இப்பொழுது அவர் என்னை அனுப்பியது போல நானும் அதே வார்த்தையுடன் உங்களை அனுப்புகிறேன், அதே உயிர்ப்பிக்கும் வல்லமை உங்களிலும் கிரியை செய்யும். இந்த வார்த்தையை உடையவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும் (ஆங்கில வேதாகமத்தில் மாற்கு: 16:17-ல் “And these signs shall follow them...” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது தமிழில் “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன” எனப் போடப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) தேவனுடைய வல்லமை வெளிப்பட்டே ஆக வேண்டும். 50''எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வார்த்தையோடு மாத்திரமல்ல (எரிபொருளினால் மாத்திரமல்ல) உயிர்ப்பிக்கும் வல்லமையுடனும் வந்தது'' என்று பவுல் சொன்னார். புரிந்து கொண்டீர்களா? அது நம்மிடம் அவ்விதமாகத்தான் வந்தது. அவரை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பினதும் உண்மையான விசுவாசியை நித்திய ஜீவனுக்கென்று உயிர்ப்பித்ததும் ஒரே ஆவிதான். நன்கு கவனியுங்கள் (நமக்கு நேரமாகிவிட்டது) உள்ளுக்குள்ளாகவே மறைந்திருக்கும் (Potentially) அந்த வல்லமையைப் பற்றி நாம் சற்று சிந்திப்பதற்கு ரோமர்: 8-ஆம் அதிகாரம் 1-ஆம் வசனம் மன்னிக்கவும், ரோமர்: 8-ஆம் அதிகாரம் 11-ஆம் வசனத்தை மீண்டும் வாசிப்போம். அன்றியும் (கஷ்டமே அங்கேதான்; இங்கே கவனியுங்கள்) அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பின ஆவி.. (பரிசுத்த ஆவியாகிய தேவன்)... உங்களில் வாசமாயிருந்தால்... இப்பொழுது, மணவாளனுடைய ஆவியேதான் மணவாட்டிக்குள்ளும் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் சரி. 51தேவன் அவருடைய முதல் மணவாளனை உண்டாக்கின பொழுது, முதன் முதலில் மணவாளனையே உண்டாக்கினார். ஆணும், பெண்ணுமாக அவனை சிருஷ்டித்து பூமியின் மண்ணினால் அவனுக்கு உருவத்தைக் கொடுத்தார். மேலும் கவனியுங்கள். அவர் ஆதாமிலிருந்து ஏவாளை உண்டாக்கிய பொழுது. பூமியிலிருந்தே வேறு மண்ணை எடுக்காமல், ஆதாமை உண்டாக்கிய அதே மண்ணிலிருந்தே ஏவாளையும் உண்டாக்கினார். ஏனெனில் ஆதாம் ஒரு உரைக்கப்பட்ட வார்த்தை. புரிந்து கொண்டீர்களா? அவன் ஆணின் ஆவியையும் பெண்ணின் ஆவியையும் உடையவனாயிருந்தான். அவர் பெண்ணின் ஆவியை ஆதாமிலிருந்து வெளியே எடுத்து ஏவாளுக்குள் வைத்தார். ஆகையால் இன்றுவரை ஏவாள் ஆதாமினுடைய ஒரு பாகமாவே இருக்கிறாள். ஏவாள் ஆதாமுடைய சரீரமே. ஆதாமின் ஆவியே (உயிர்ப்பிக்கும் வல்லமை) தன்னுடைய சரீரத்தின் ஒரு பாகமாகிய ஏவாளை உயிரோடே எழுப்பியது. ஆகையால் மணவாட்டியும் அவருடைய மாமிசத்தின் மாமிசமும், அவருடைய எலும்பின் எலும்பாகவும் இருக்க வேண்டும். சாவுக் கேதுவான நம்முடைய சரீரம் எப்படி அவருடைய சரீரமாக மாறப்போகிறது? இன்னும் ஒரு நிமிடத்தில் நாம் அதைக் காண்போம். கவனித்தீர்களா? இது எப்படி சாத்தியமாகும்? எப்படி... மகத்தான மறுரூபமாகுதல் என்பது என்ன?கவனியுங்கள்! அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி...(தேவன்)... உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். 52ஓ, என்னே! பூமிக்குள் விதைக்கப்பட்டு தன்னில்தானே ஜீவனுடைய வித்தைப் போல அவர் நிச்சயமாகவே முன் குறிக்கப்பட்டிருந்தார். விதைக்கப்பட்ட அநேக வித்துக்கள் மரித்துவிட்டன. அவைகளெல்லாம் வெறும் அழுகிய வித்துக்களே. தண்ணீரினால் அந்த வித்துக்கள் அழுகிவிட்டன. ஆனாலும் ஜீவனையுடைய ஒரு வித்து அங்கே இருந்ததை தேவன் அறிவார். முன்குறிக்கப்பட்டவர்கள் தான் முதலாவதாக பரிசுத்த ஆவியானவரால் உயிரோடே எழுப்பப்பட வேண்டும். ஏனெனில் இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் தமக்குச் சொந்தமானவர்களை சொந்தமாக்கிக் கொள்ள வருகிறார். இது மிகவும் ஆழமானது. இந்த நன்மையானதைப் பற்றிக் கொள்ள கவனமாய் இருங்கள். 53சூரியன், மலைகளுக்கு (அதுவும் பூமியிலுள்ள மண் தான்) ஜீவனை கொடுப்பதற்காக பூமியின்மேல் அனுப்பப்படவில்லை. பூமியிலுள்ள எல்லா மண்ணிற்கும் ஜீவனைக் கொடுப்பதற்காக அல்ல, ஆனால், ஜீவனைச் சுற்றிலும் காணப்படும் மண்ணிற்கே ஜீவனைக் கொடுக்க அனுப்பப்பட்டது. பூமியின் மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்டு, ஜீவனை தங்களுக்குள்ளாகவே உடையவர்களாக தேவனால் முன் தீர்மானிக்கப்பட்டவர்கள் எவர்களோ, அவர்களைத் தவிர வேறு ஒருவரும் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். (ஓ, இல்லை!) அவர்களை உயிர்ப்பிக்கவே அவர் வருகிறார். அவர்கள் தான் அந்த. பூமியின் மண்ணானது, “ஓ, இந்த சூரியன் மிகவும் உஷ்ணமாயிருக்கிறது'', என்று ஒருவேளை சொல்லியிருக்கலாம், மலைகளும் ஒரு வேளை ”இந்த சூரியன் மிகவும் உஷ்ணமாயிருக்கிறது'', என்று சொல்லியிருக்கலாம். ஆனால் விதையோ ''நான் இதற்காகவே காத்துக் கொண்டிருக்கிறேன்'', என்று சொல்லியது. விதையிலிருந்து ஜீவன் பிரவாகித்து ஓடியது. மண்ணின் ஒரு பாகமாகிய அந்த விதை உயிர்ப்பிக்கப்பட்டது. ஏனெனில் சூரியன் அந்த விதையை உயிர்ப்பிக்க அனுப்பப்பட்டதே யன்றி மலைகளுக்காகவும், பூமியிலுள்ள மண்ணிற்காகவும் அல்ல. 54இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் வருகிறார். நிச்சயமாக, அது அனுப்பப்படவில்லை. எல்லா ஜனங்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதில்லை. ஏன்? அவர் அவர்களுக்காக அனுப்பப்படவில்லை. ''நான் விசுவாசிக்க மாட்டேன்... நீங்கள் மரித்தோரை உயிரோடெழுப்பினாலும், வியாதியஸ்தரை சுகமாக்கினாலும் அல்லது நீங்கள் வேறு எதைச் சொல்லி நிரூபிக்க முயன்றாலும், நான்அதை விசுவாசிக்க மாட்டேன்'' என்று ஒருவன் என்னிடம் சொன்னான். “உன்னால் நிச்சயமாக அதை விசுவாசிக்க முடியாது. நீ ஒரு அவிசுவாசி. அது உனக்காக சொல்லப்படவில்லை. அது உனக்காக அனுப்பப்படவே இல்லை. அது விசுவாசிக்கிறவர்களுக்கு மாத்திரமே அனுப்பப்பட்டது'' என்று நான் அவனிடம் சொன்னேன். இச்செய்தி விசுவாசிக்கு மாத்திரமே. கெட்டுப் போகிறவர்களுக்கோ இது பைத்தியமாயிருக்கிறது. ஆனால் கிறிஸ்துவுக்குள் அவருடைய வித்தின் ஒரு பாகமாயிருப்பவர்களுக்கோ இது ஜீவனாயிருக்கிறது. 55விவசாயி ஒருவன் ஒரு கழுகின் முட்டையை ஒரு கோழியிடம் அடைகாக்க வைத்ததாக நான் சொல்லும் கதை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? பாருங்கள்? அவன் அந்த முட்டையை கோழியின் அடியில் அடைகாக்க வைத்தபோது அந்த கழுகின் முட்டை ஒரு வினோதமாகவே காணப்பட்டது. அந்தக் கோழி, ஒரு வினோதமான கோழிக்குஞ்சைப் பொறித்தது. அந்த கழுகுக்குஞ்சு மிகவும் சிறியதாகவும் வினோதமாகவும் காணப்பட்டது. அது மற்ற கோழிக்குஞ்சுகளைப் போல் இல்லை. அதனுடைய இறக்கைகள் மற்ற கோழிக்குஞ்சுகளுக்கு இருந்ததைப் போல் இல்லை. அது மற்ற கோழிக்குஞ்சுகளை விட சற்று வினோதமாகவே காணப்பட்டது. மற்ற எல்லா கோழிக்குஞ்சுகளுக்கும் அது ஒரு கோழிக்குஞ்சு அல்ல என்று தெரிந்துவிட்டது. தாய்க் கோழி. எல்லா இடங்களுக்கும் சென்று... தாய்க்கோழி கொடுத்த தீனி அந்த கழுகுக்குஞ்சுக்குப் பிடிக்கவேயில்லை. கழுகுக்குஞ்சுக்கு குப்பையைக் கிளறி தானியங்களைப் பொறுக்கித் தின்பது பிடிக்கவேயில்லை. ஆகையால் தான் என் வினோதமான ஒன்றாக அந்தக் கோழிக்குஞ்சுகளோடு இருக்க நேரிட்டது என்பதைக் குறித்து அந்த கழுகுக்குஞ்சு ஆச்சரியப்பட்டது. பார்த்தீர்களா! கோழிக்குஞ்சுகள் தின்ற எதையுமே அதனால் ருசித்துத் தின்ன முடியவில்லை. தான் உயிர் வாழ்வதற்குத் தேவையான கொஞ்ச அளவு தீனியையே உட்கொண்டது. ஏனெனில் அதற்கு அந்தத் தீனியின் ருசி பிடிக்கவில்லை. ஏனென்றால் அது ஒரு கோழிக்குஞ்சு அல்ல. புரிந்து கொண்டீர்களா? 56“அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. அப்படி ஒரு காரியமே கிடையாது, சபையில் சேர்ந்து விடுங்கள்'' என்று கோழி கொக்கரிப்பது (Cluck) உங்களுக்குத் தெரியுமா? இப்படிப்பட்ட காரியங்கள் ஒன்றுமே அந்த சிறிய கழுகுக்குஞ்சுக்குப் புரியவில்லை. எனவே அது தன் தாய்ப் பறவையை ஒரு நாள் பார்க்கும் வரையிலும், அந்த தாய்க் கோழியையே சுற்றிக் கொண்டிருந்தது. வயதான அந்தத் தாய்க் கழுகுக்கு தான் அநேக முட்டைகள் இட்டதையும், அதில் ஒன்று எங்கேயோ தவறிவிட்டது என்பதும் தெரியும். அதற்கு தன் கழுகுக்குஞ்சு எங்கேயாவது இருக்கும் என்பது தெரியும், ஆகையால் அது தன் குஞ்சைத் தேட ஆரம்பித்தது. அது மலையின் உச்சியிலும், பள்ளத்தாக்குகளிலும் மற்ற எல்லா இடங்களிலும் தன்னுடைய குஞ்சு எங்கே இருக்கிறது என்பதை வட்டமடித்துத் தேடியது. இந்நேரம் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரும் நேரம் இதுவே, முட்டை குஞ்சு பொறிக்கப்படுவதற்குரிய நேரம் இதுவே, “ஒரு காகமோ அல்லது ஒரு பருந்தோ (Vulture) என்னுடைய முட்டையை எடுத்துக் கொண்டு போயிருக்கும். எனக்குத் தெரியாது. ஏதோவொன்று என்னுடைய முட்டையை எடுத்துக் கொண்டு போய்விட்டது. ஆனால் என்னுடைய சிந்தையில் அந்த முட்டை இருந்தது என்பது எனக்குத் தெரியும். எங்கேயோ ஒரு இடத்தில் என்னுடைய குமாரன் இருக்கிறான், நான் அவனைத் தேட வேண்டும்'' எனச் சொல்லிக் கொண்டது. 57தேவனும் அப்படியே செய்கிறார். அவரே அந்த மகத்தான கழுகு. அவர் தம்முடைய சிந்தையில் தமக்கு ஒரு சபை உண்டு என்பதை அறிந்திருந்தார்; அவர் தமக்கு ஒரு கூட்டம் ஜனங்கள் உண்டு என்பதை அறிந்திருந்தார். அவர்களைச் சுற்றி எது இறுகப் பற்றியிருந்தாலும், அவர்கள் எந்த ஸ்தாபனத்தின் பிடியில் சிக்கியிருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் கவலையில்லை. அவர் தம்முடைய சொந்தமானவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். அந்த கழுகினுடைய கதை இப்படியாகப் போய்க் கொண்டிருக்கிறது. கோழியும் அதனுடைய குஞ்சுகளும் இருக்கிற இடத்திற்கு ஒரு நாள் அந்தத் தாய்க் கழுகு பறந்து சென்றது. அங்கே எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து, தன்னுடைய குஞ்சு அங்கே இருப்பதைப் பார்த்துவிட்டது. கடைசியாக, கழுகுக்குஞ்சு தான் ஒரு கோழிக்குஞ்சு அல்ல என்பதை அடையாளம் கண்டு கொண்டது. ஓ! என்னே ஒரு உயிர்த்தெழுதல். அது எப்பொழுதுமே குப்பையைக் கிளறி ஏதாவது ஒரு பூச்சியைத் தின்ன கீழ்நோக்கிப் பார்ப்பதற்கு மட்டுமே பழகியிருந்தது. ''இங்கே மேலே நோக்கிப் பார்“, என்று சொல்லிய ஒரு சத்தத்தைக் கேட்டது. உடனே அது மேலே நோக்கிப் பார்த்து கோழிகளை விட மிகவும் பலம் பொருந்திய பதினான்கு அடி நீளமுள்ள இறக்கைகளையுடைய ஒரு பறவை தன்னை, ''என்னுடைய குமாரனே'', என்று அழைப்பதையும் கண்டது, ''அம்மா, நான் உன்னிடம் எப்படி வர முடியும்“? என்று கேட்டது. தாய்க்கழுகு, “கொஞ்சம் குதி, உன்னுடைய செட்டைகளை விரித்து பற, ஏனெனில் நீ ஒரு கழுகு'' என்று சொன்னது. பார்த்தீர்களா, அந்தத் தாய்க்கழுகிற்கு தனக்கு ஒரு குமாரன் எங்கோ ஓரிடத்தில் இருக்கிறான் என்பது தெரியும். எந்த ஒரு ஸ்தாபனத்தில் அவன் வளர்ந்திருந்தாலும் அதை பற்றி ஒன்றும் கவலையில்லை. அந்தக் கழுகிற்கு எங்கோ ஓரிடத்தில் ஒரு குமாரன் இருந்தே ஆக வேண்டும். 58அவருக்கு ஒரு முன் தீர்மானிக்கப்பட்ட சபை இருந்தே ஆக வேண்டும். அவருடைய குமாரர்களும், குமாரத்திகளுமடங்கிய ஒரு மணவாட்டி சபை எங்கேயோ ஓரிடத்தில் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை தேவனும் அறிவார். (சகோதரன் பிரசங்க பீடத்தை பலமுறை தட்டுகிறார் - ஆசி) அல்லேலூயா பரிசுத்த ஆவியானவர் மணவாட்டி சபையின் மேல் பறந்து வரும்போது, அந்த கதிர்க்கட்டு அசைவாட்டப்படும் பொழுது ஓ, என்னே! அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவர்; அது வெறும் கட்டுக் கதையல்ல, ஆனால் அது மெய்யானது. ஒரு மனிதன் விசுவாசியிடம் என்ன சொல்ல முயன்றாலும் அதைப் பற்றி ஒன்றும் கவலையில்லை... கழுகுக்குஞ்சு தான் யார் என்பதை அறிந்து கொள்ளவில்லை. ஆயினும் அது ஒரு கழுகுதான். தன் மேல் ஏதோ ஒன்று பிரதிபலிப்பதை அவன் காணும் மட்டும், அவன் தான் ஒரு கழுகு என்பதை உணர்ந்து கொள்ளமாட்டான். ஒரு ஸ்தாபனத்தை அல்ல, ஒரு பி.எச்.டி. (Ph. D) பட்டத்தை அல்ல, ஒரு எல்.எல்.டி. (L.L.D) பட்டத்தை அல்ல, நல்ல ஒரு அயலானை. அல்ல. ஆனால் அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவர் என்கிற இன்றைய நாளின் தேவைக்கு பதிலளிக்கக் கூடிய தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்டு அவருடைய உயிர்ப்பிக்கும் வல்லமையையுடைய ஒரு தேவனுடைய குமாரனை எந்த ஒரு கோழியும் பிடித்து வைத்துக் கொள்ள முடியாது. அவன் தன்னுடைய தாய்க் கழுகைத் தேடுகிறான். அவன் கழுகாகவே பிறந்திருக்கிறான். இந்த உண்மையான கழுகு தேவனுடைய வார்த்தையின் அழைப்பை அடையாளம் கண்டு கொள்கிறது. ஏன்? அவன் ஒரு கழுகு. ஒரு கழுகிலிருந்து இன்னொரு கழுகிற்கு, வார்த்தைக்கு வார்த்தை: ஒரு உண்மையான கழுகு தேவனால் உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே முன் குறிக்கப்பட்டு இந்த மணி வேளைக்கென்று எழுதப்பட்டுள்ள வார்த்தையை அடையாளம் கண்டுகொள்கிறது. நீங்கள் உங்கள் ஸ்தானத்தை உணர்ந்து கொள்கிறீர்களா? அவர் அதைத் தேடித் திரிகிறார். 59தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமை. இந்த பூமிக்குரிய சரீரத்தை உயிர்ப்பித்து, தேவனுடைய வார்த்தைக்கு நம்மை கீழ்ப்படியச் செய்கிறது. (உடனடியாக) அவன் தன்னுடைய தாய்க் கழுகினிடம் எப்படி பறந்து செல்வது என்று யோசிக்கையில்... அவன் பறக்க முடியாதவாறே பழகியிருந்தான். ''நீ அவ்வளவு தூரம் பறக்க முடியாது, நீயோ ஒரு கோழிக்குஞ்சு“ என்று தாய்க்கோழி சொல்லியது, புரிந்து கொண்டீர்களா? ஆனால், “அப்படியல்ல'' என்று இந்த கழுகு சொன்னது. ''நல்லது, நானும் மற்ற கோழிக்குஞ்சுகளைப் போலத்தானே.“ “கோழிக்குஞ்சுகளைப் பற்றி கவலையில்லை, நீயோ ஒரு கழுகு, உன்னுடைய செட்டைகளை விரித்து பறக்க ஆரம்பி, சிறிதளவு முயற்சி செய்து பார். பறக்க ஆரம்பி'' வார்த்தைக்கு வார்த்தை, ''நான் செய்கிற கிரியைகளை நீயும் செய்வாய். விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். (புரிந்து கொண்டீர்களா?) நான் ஜீவிப்பதால் அவனும் ஜீவிக்கிறான். இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவருடைய ஆவி உங்களுக்குள்ளே வாசமாயிருந்தால் சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் அவர் உயிர்ப்பிப்பார்'' புரிந்து கொண்டீர்களா? 60அது என்ன செய்கிறது. இப்பொழுது கவனியுங்கள். இதுவரையிலுள்ள எந்த ஒரு ஈஸ்டரையும் விட இன்றைய ஈஸ்டர் உங்களுக்கு அதிக பிரயோஜனமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் அறிய விரும்புகிறேன். புரிந்து கொண்டீர்களா? நீங்கள் அதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவருடைய உயிர்த்தெழுதல் அவருக்கு என்ன நன்மையை செய்தது என்று நமக்குத் தெரியும், ஆனால் அவருடைய உயிர்த்தெழுதல் இனிமேல் அல்ல, அவர் உயிர்த்தெழுந்த அன்றே அதே நன்மையை நாமும் அடைந்துவிட்டோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். புரிந்து கொண்டீர்களா? அது என்ன செய்கிறது? அது சாவுக்கேதுவான சரீரத்தை உயிர்ப்பிக்கிறது. நம்முடைய சாவுக்கேதுவான சரீரத்தை உயிர்ப்பித்து ஜீவனைக் கொடுக்கிறது. முன்பு நீங்கள் சிகரெட்டை புகைத்துக் கொண்டிருந்தீர்கள். பெண்களாகிய நீங்கள் குட்டையான தலைமுடியை உடையவர்களாகவும் குட்டையான பாவாடையை அணிந்து கொண்டும், முகத்திற்கு சாயம் பூசிக் கொண்டும் வாழ்ந்து வந்தீர்கள். திடீரென்று ஒரு நாள் உங்களோடு பேசிய ஒரு சத்தத்தைக் கேட்டு நீங்கள் திரும்பி பார்த்தீர்கள். அது தேவனுடைய வார்த்தையாக இருந்தது. புரிந்து கொண்டீர்களா? அது உங்களை உயிரோடெழுப்பி..., ''இனிமேல் எனக்கு குட்டையான பாவாடை வேண்டாம். மது வேண்டாம். நான் இனிமேல் பொய் சொல்ல மாட்டேன், திருடமாட்டேன். இதை செய்யமாட்டேன். அதை செய்யமாட்டேன்'' என்று சொன்னீர்கள். புரிந்து கொண்டீர்களா? இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பிய ஆவி உங்களில் வாசமாயிருந்து உங்களுடைய சாவுக்கேதுவான சரீரங்களை (பூமியின் முன்) கீழ்ப்படிதலுள்ள சரீரங்களாக மாற்றியது. உங்களுக்குப் புரிகிறதா? அது என்ன? எதற்கு கீழ்ப்படிய? கிறிஸ்துவுக்கு. கிறிஸ்து யார்? வார்த்தை, வேத சாஸ்திரமல்ல, ஆனால் வார்த்தை. நீங்கள் சொல்கிறீர்கள், இந்த காரியங்களெல்லாம்... “ஓ, பெண்கள் ஆண்களின் சட்டைகளை அணிந்து கொள்வதெல்லாம் சரிதான் என்று நான் நினைக்கிறேன்”, என்று சொல்கிறீர்கள். ஆனால் வார்த்தை, “கூடாது'' என்று சொல்கிறது. புரிந்து கொண்டீர்களா? நீங்கள் அதற்கு உயிர்ப்பிக்கப்படுகின்றீர்கள். பாருங்கள்? நீங்கள் வார்த்தையிடம் இழுக்கப்படுகிறீர்கள். புரிந்து கொண்டீர்களா? அது மாறுகிறது. நீங்கள் வார்த்தையின் ஒரு பாகமாகவே மாறி விடுகிறீர்கள். 61நீங்கள் சொல்லலாம், “நல்லது, இப்பொழுது நான் சிலவற்றைச் சொல்கிறேன். என்னுடைய சபை மேய்ப்பன் (Pastor)...'' உங்கள் மேய்ப்பன் சொல்வதைப் பற்றி எனக்கு ஒன்றும் கவலையில்லை. வார்த்தை என்ன சொல்கிறது என்பது தான் முக்கியம். நீங்கள் கோழிக்குஞ்சாக இருக்க விரும்பினால் அப்படியே இருந்து கொள்ளுங்கள், மேய்ப்பன் வார்த்தைக்கு விரோதமாகப் பேசினால் அவன் கழுகுகளை போஷிக்கிறவன் அல்ல; அவன் கோழிக்குஞ்சுகளை போஷிக்கிறவனே. (புரிந்து கொண்டீர்களா) கழுகுகளை போஷிக்கிறவன் அல்ல. புரிந்து கொண்டீர்களா? கழுகு கழுகினுடைய ஆகாரத்தை தான் சாப்பிடும். புரிந்து கொண்டீர்களா? அது உயிர்ப்பிக்கிறது. அப்படிச் செய்வது தவறு என்று வேதம் சொல்கிறது. மனிதர்களாகிய நீங்கள் எல்லோரும் செய்வது தவறு. “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன'' என்று நீங்கள் சொல்கிறீர்கள். அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவர் என்று இந்த வேதம் சொல்கிறது. இருதயத்தின் இரகசியங்களை பகுத்தறிதலையும், தரிசனங்களையும் அவைகள் எல்லாம் வெறும் மனோவசியம், வெறும் புத்தியினம் என்று அவர்கள் சொன்னால், அவர்கள் கோழிக்குஞ்சுகளே. புரிந்து கொண்டீர்களா? கழுகின் ஆகாரம் என்ன என்பது அவர்களுக்கு தெரியாது. 62ஆனால் சகோதானே, உங்களுக்குள்ளாகவே இருந்து கொண்டு சத்தமிடும் ஏதோ ஒன்றை நீங்கள் கேட்கும்போது ஆதியிலிருந்தே நீங்கள் கழுகுதான் என்பது தெரிகிறது. ஏன்?உயிர்த்தெழுந்து பூமியின் மேல் உதித்து, அசைவாட்டப்பட்ட கதிர்க்கட்டாகிய குமாரன் நீங்கள் ஒரு ஸ்தாபனக் கோழிக்குஞ்சு அல்ல, ஒரு கழுகு தான் என்பதை அடையாளம் கண்டுகொள்ளச் செய்கிறார். உன்னால் அதைப் புரிந்து கொள்ள முடிகிறதா? இப்பொழுது, இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடே எழுப்பினவருடைய ஆவி, வார்த்தையாகிய உயிர்ப்பிக்கும் ஆவி, உங்களில் வாசமாய் இருந்தால், அது உங்களுடைய சாவுக்கேதுவான சரீரத்தையும் உயிர்ப்பிக்கிறது. இப்பொழுது, நாம் எப்படி அவருடைய மாமிசத்தின் மாமிசமும், எலும்பின் எலும்பாகவும் ஆனோம்? ஏனெனில் (சீக்கிரமாக) நாம் சாவுக்கேதுவான பாவிகளாக இருக்கையில் (சாவுக் கேதுவான, மரிப்பதற்கு ஆயத்தமாக உள்ள - இந்த சரீரங்கள்) நமது சரீரத்தை உயிர்ப்பிக்கிறது. எது உயிர்ப்பிக்கிறது? ஜீவனைக் கொடுக்கிறது. முன்பு குடிப்பதையும், விபசாரம் செய்வதையும், மற்றும் அநேக காரியங்களிலும் பிரியப்பட்ட நம்முடைய ஆவியை உயிர்ப்பிக்கிறது? ஏன்? அந்த காரியங்கள் யாவும் மரித்துவிட்டன. நீங்களோ உயிர்ப்பிக்கப்பட்டீர்கள். அது உங்களுடைய சாவுக்துேவான சரீரத்தை உயிர்ப்பிக்கிறது. ஆகையால், உங்களுடைய சரீரம் உயிர்ப்பிக்கும் வல்லமையின் ஆலயமாக விளங்குகிறது. ஏன்? ஏனெனில், ஆதியிலிருந்தே நீங்கள் வார்த்தையின் ஒரு பாகமாக விளங்குகிறீர்கள்! ஓ! (சகோ. பிரான்ஹாம் தன் கரங்களை ஒருமுறை கொட்டுகிறார் - ஆசி) அதுவே உங்களுடைய உயிர்தெழுதல் ஆகும். அதுவே சபை அவருடன் உயிர்த்தெழுதலும்; ஆகும். நம்முடைய சாவுக்கேதுவான சரீரங்கள் இப்பொழுதே உயிர்ப்பிக்கப்படுகிறது! புரிந்து கொண்டீர்களா? நீங்கள் கேள்விப்பட்டீர்கள்; நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்; அது ஒரு ஸ்தாபனத்திலிருந்து உங்களை வார்த்தைக்குத் திருப்பியது. புரிந்து கொண்டீர்களா? 63தண்ணீரின் மேல் உயிர்ப்பிக்கும் வல்லமை இறங்கினால் அற்புதத்தின் நாட்கள் கடந்துவிட்டன. (தீர்க்கதரிசி பிரான்ஹாம் பட் - பட் - பட் - ஓ என்று சப்தமிடுகிறார் - தமிழாக்கியோன்) தெய்வீக சுகமாக்குதல் இந்த நாளுக்குரியது அல்ல. (தீர்க்கதரிசி பிரான்ஹாம் பம்ப் - பம்ப் - பம்ப் - என்று சப்தமிடுகிறார் - தமிழாக்கியோன்.) ஆனால் அவர்கள் அதை விசுவாசிப்பதில்லை (தீர்க்கதரிசி பிரான்ஹாம் பம்ப் - பம்ப் - பம்ப் என்று சப்தமிடுகிறார் - தமிழக்கியோன்) புரிந்து கொண்டீர்களா? ஆனால் அது எரி பொருளின் மேல் இறங்கினால் அது உடனடியாக ஓட ஆரம்பித்து விடும். (தீர்க்கதரிசி பிரான்ஹாம் வீர்ர்ர்ர்ர் என்று சப்தமிடுகிறார் - தமிழாக்கியோன்). உயிர்ப்பிக்கும் வல்லமை அதை நெருங்குகிறது...! ஒரு கோழிக் குஞ்சை உயிர்ப்பிக்கும் வல்லமை நெருங்கினால், அதனால் எந்த ஒரு நன்மையும் ஏற்படுவதில்லை. ஆனால் அது ஒரு கழுகை நெருங்கும்போது அது உயரே பறக்க ஆரம்பிக்கிறது. ஆமென் வார்த்தையுடன் கூடிய உயிர்ப்பிக்கும் வல்லமை. நான் என்ன சொல்கிறேன் என்பதை புரிந்து கொண்டீர்களா? இப்பொழுது ஒருவன் உண்மையான கழுகாயிருந்தால் இதை புரிந்து கொள்வான். 64உங்களுக்காக நான் இங்கே ஒரு வேத வசனத்தைக் குறிப்பிடுகிறேன். (தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன், ஆனால் நாம் இன்னும் செய்தியைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.) யோவான்: 5:24-ல் இயேசு சொன்னார்... என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு... இப்பொழுது கவனியுங்கள்! ஆவிக்குரிய ஞானம் ஏதுமின்றி நான் வார்த்தையின்படி எப்படி எழுதப்பட்டுள்ளதோ அப்படியே எடுத்துக் கொள்கிறேன். (வேறு எவ்விதமாகவும் அதை வியாக்கியானிக்காமல், வார்த்தை என்ன சொல்லுகிறதோ, அதையே சொல்லுகிறேன்) புரிகிறதா? மூலகிரேக்க வார்த்தையில் இவ்விதம் சரியாக எழுதப்பட்டுள்ளது, “என் வசனத்தை புரிந்து கொள்ளுகிறவன்'' தெருவில் ஒரு குடிகாரன் வேறொருவருடைய மனைவியை தன் கைகளில் அணைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும், தேவனுடைய வார்த்தையை வீணாக உபயோகித்துக் கொண்டும், வேறு அப்படிப்பட்ட எல்லா காரியங்களுடனும் வந்து கொண்டிருக்கிற ஒருவனை நீங்கள், ''பிரசங்கியார் சொல்லியதைக் கேட்டீர்களா?'' என்று நான் அவனிடம் கேட்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். ''நீங்கள் பிரசங்கியார் சொல்லியதைக் கேட்டீர்களா?'' “ஆம், நான் கேட்டேன்,'' என்று அவன் சொல்கிறான். அவன் நித்திய ஜீவனை உடையவன் என்று அர்த்தமல்ல. புரிகிறதா? புரிந்து கொண்டீர்களா? ''என்னுடைய வார்த்தையைப் புரிந்து கொள்கிறவன்“ அவன் ஒரு கழுகு. “அதைப் பற்றி இன்னும் அதிகமான வசனங்களை சொல்லுங்கள், சகோதரன் பிரான்ஹாம்'' என்கிறீர்களா? “என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கிறது. அவைகள் அந்நியனுக்குப் பின் செல்வதில்லை''. 65அன்று நான் 'விவாகமும் விவாகரத்தும்' என்ற செய்தியை பிரசங்கிக்கும் பொழுது, பரிசுத்தாவியானவர் என்னிடம் சொல்லிய விதமாகவே நான் அச்செய்தியை பிரசங்கித்தேன். “நீங்கள் தேவனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்று நான் நினைக்கிறேன்'', என்று ஒரு பெண் ஊழியக்காரி என்னை மிகவும் கடிந்து கொண்டாள். ''இல்லை அம்மா'', என்று நான் சொன்னேன். “உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டது என்று நீங்கள் அவர்களிடம் சொல்கிறீர்களே'', என்று அந்தப் பெண் என்னிடம் சொன்னாள். ''நல்லது. தேவன் ஒருவர் மாத்திரமே பாவங்களை மன்னிக்க அதிகாரம் உள்ளவர் என்று வேதம் சொல்லுகிறதே”, என்றும் அவள் சொன்னாள். மற்றொரு பரிசேயன். புரிந்து கொண்டீர்களா...? பேதுரு, இயேசு யார் என்ற வெளிப்பாட்டைப் பெற்றுக் கொண்டு, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து'' என்று அவன் கூறியவுடன், அவர், “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாமிசமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதாவே உனக்கு வெளிப்படுத்தினார்; இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற் கொள்வதில்லை. பரலோக இராஜ்ஜியத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன். பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்'' என்றார்... 66வார்த்தை மாமிசமாகிய தெய்வீக வெளிப்பாடு அதுவே. மணவாளனாகிய குமாரனின் நாளாகிய அன்று அது மாமிசமானால் மணவாட்டியின் நாளாகிய இன்றும் அது மாமிசமாகவே இருக்கிறது. பாருங்கள்? “எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும்'' என்றார். கத்தோலிக்க சபை அந்த வசனத்தை பிடித்துக் கொண்டு தங்களுடைய பாதிரிமார்களுக்கு அதிகாரம் கொடுத்துவிட்டது. ஆனால் அது மாமிச சிந்தையே. கவனியுங்கள்! ஆவிக்குரிய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாகிய தேவன் தான் அதைச் செய்தார். பிதா, குமாரன், பரிசுத்தாவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள் என்று அவர் சொல்லியதற்கு காரணம் அதுவே. தான் யார் என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள் என்பது அவருக்குத் தெரியும். 67அன்று நான் ஒரு சிறிய பிரசங்கியாரிடம் பேசிக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவர், ''சகோதரன் பிரான்ஹாம், நான் முன்பு இருந்து வந்த இன்ன சபையிலிருந்து வெளியேறி, இப்பொழுது இன்ன விதமான ஒரு பெந்தெகொஸ்தே சபையில் சேர்ந்துவிட்டேன்'' என்று என்னிடம் சொன்னார். பெந்தெகொஸ்தே சபையினரும் கூட இப்பொழுதெல்லாம் வட்ட வடிவமான ஒஸ்தியை (Wafer) எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? கோஸர் என்பது சந்திர தேவனைக் குறிக்கிறது என்று நான் சொல்லியதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?பெந்தெகொஸ்தேயினர் எல்லாரும் அதை ஏற்றுக் கொண்டு இப்பொழுது ஒஸ்தியை எடுத்துக் கொள்கிறார்கள். (ஒஸ்தி என்பது ரோமன் கத்தோலிக்க சபை இராப்போஜன ஆராதனையில் அப்பமாக உபயோகிப்பது - தமிழாக்கியோன்) அவனுடைய சபை ஆசீர்வதிப்பது எதுவோ, அது ஆசீர்வதிக்கப்படும் என்றும் அவன் சொன்னான் (கத்தோலிக்க பாதிரியார் அந்த ஒஸ்தியை கிறிஸ்துவின் சரீரமாக மாற்றுவதற்கு தனக்கு அதிகாரம் உண்டு என்று சொல்வதைப் போலவே இதுவும் இருக்கிறது, இல்லையா? புரிந்து கொண்டீர்களா? இன்று அநேகம் சபைகள் அப்படித்தான் உள்ளன). ''நான் உங்களிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன்'' என்று அவன் சொன்னான். (அவன் “இயேசு கிறிஸ்துவின் நாமத்திலுள்ள'' ஞானஸ்நானத்தைக் குறித்து தர்க்கம் செய்தான். ஏனெனில் அவன் தான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பதை அந்திக் கிறிஸ்து என்று சொன்னவன். ”ஒருவன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்தான் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா'', என்று அவன் என்னிடம் கேட்டான். ''ஆம் ஐயா“, என்று நான் சொன்னேன். “ஒருவன் பிதா, குமாரன், பரிசுத்தாவியின் நாமத்திலே ஞானஸ்நானம் பெற்ற பிறகுமா?'' என்று அவன் என்னிடம் கேட்டான். ''ஆம் ஐயா, அவன் ஞானஸ்நானமே பெற்றுக் கொள்ளவில்லை, பாருங்கள்? அவன் எந்த ஒரு நாமத்திலும் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளவில்லை, அது நாமம் அல்ல, அது ஒரு பட்டப் பெயர்“, என்று நான் சொன்னேன். அது அங்கீகரிக்கப்படாது, ''ஏன் பேதுரு அவ்விதம் ஞானஸ்நானம் கொடுத்தான்?'' என்று நான் கேட்டேன். “நான் இப்பொழுது ஒன்றை உங்களிடம் சொல்கிறேன். அப்போஸ்தலர்: 10:49-ல் ”இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக் கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்“, (அப்போஸ்தலர்: 10:44 என்பதற்கு பதில் 10:49 என்று தீர்க்கதரிசி பிரான்ஹாம் சொல்கிறார் - தமிழாக்கியோன்.) என்று எழுதியிருக்கிறதே'' என்று அவன் என்னிடம் கேட்டான். “ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா?'' என்று பேதுரு அவர்களிடம் திருப்பிக் கேட்கவில்லையா? என்று நான் அவனிடம் சொன்னேன். 68“நீங்கள் சற்று முன்பு அப்போஸ்தலர்: 19-ம் அதிகாரத்தில் ”பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தார். அங்கே சில சீஷரைக் கண்டு“ என்ற வசனத்தை பிரசங்கித்தீர்கள், பவுல் ஏன் அந்த சீஷர்களிடம் நீங்கள் பிதா, குமாரன், பரிசுத்தாவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளவில்லை?'' என்று சொல்லவில்லை என்று அவன் என்னிடம் கேட்டான். “அவர்கள் மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தை பெற்றிருந்தார்களேயொழிய, பாவமன்னிப்புக்கேற்ற ஞானஸ்நானத்தை பெற்றுக் கொள்ளவேயில்லை. ஏனெனில் இயேசு அப்பொழுது அறியப்படவுமில்லை. பலியானது கொல்லப்படவுமில்லை'' என்று நான் அவனிடம் சொன்னேன். ''அவர்கள் ஏன் மீண்டும் ஒரு தடவை ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும்?'' என்று அவன் என்னிடம் கேட்டான். ''நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்று நீங்களெல்லாரும் அறிந்திருக்கக்கடவது'' என்று பரலோகத்தின் திறவு கோல்களையுடைய பேதுரு சொன்னாரே என்றேன். இரட்சிப்பு மட்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வருகிறது; வார்த்தையினாலாவது, கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே செய்யுங்கள், வேறு எந்த நாமத்தினாலுமல்ல, எந்த ஒரு சபையினாலுமல்ல, எந்த ஒரு மதகுருவினாலுமல்ல (hierarchy), எந்த பட்டப் பெயர்களினாலுமல்ல, வேறு எதினாலுமல்ல. அவரே சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி புஷ்பம், விடிவெள்ளி நட்சத்திரம், அல்பா, ஒமேகா, முந்தினவர், பிந்தினவர், யோகோவாயீரே, ராபா, மனாசே மற்றெல்லாமும் அவரே, ஆனால் இயேசுவின் நாமமேயல்லாமல் வேறெந்த பட்டப் பெயர்களிலும் இரட்சிப்பு இல்லை, யெகோவா - இரட்சிப்பு இல்லை, சாரோனின் ரோஜா (அது அவர் தான்) - இரட்சிப்பு இல்லை. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி - இரட்சிப்பு இல்லை. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே மாத்திரமே இரட்சிப்பு உண்டு. அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கி சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது என்று வேதம் சொல்லுகிறதே“ என்று நான் அவனிடம் சொன்னேன். “அதில் ஏதாகிலும் வித்தியாசம் இருக்கிறதா?'' என்று அவன் என்னிடம் கேட்டான். 69''ஐயா, உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன்'' என்று நான் அவனிடம் சொன்னேன். அவனும், நானும், என்னுடைய மனைவி மூவருமாக அங்கே உட்கார்ந்திருந்தோம். அவன் நான் சொல்லப் போவதை உன்னிப்பாக கவனித்தான். “நாம் இருவருமே அரிஸோனாவைச் சேர்ந்தவர்கள், நாம் இங்கேயே தான் வாழ்கிறோம். நம்முடைய தெரு, நம்முடைய நகரம், மற்றெல்லாவற்றைப் பற்றியும், நம்முடைய மாநகராட்சித் தலைவரையும் (Mayor), நம்முடைய ஆளுனரையும் (Governor) கூட நமக்கு நன்றாகவேத் தெரியும்'' என்று நான் அவனிடம் சொன்னேன். “ஆமாம்” என்று அவன் சொன்னான். “அரிஸோனா மாகாணத்தில் ஆளுநரின் பெயரில் நம்முடைய பகல் விருந்திற்காக இங்கே வந்து கையொப்பமிடுங்கள், சகோதரனே என்று நான் உங்களிடம் சொன்னால், நீங்களும் அதேவிதமாகத்தான் கையொப்பமிடுவீர்களா? அவர்கள் உங்கள் கையொப்பத்தை அங்கீகரிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா'' என்று நான் அவனிடம் கேட்டேன். “அவர்கள் அதை அங்கீகரிக்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும் ஆனால் ஏன் இயேசு அவ்விதம் சொன்னார்'' என்று அவன் என்னிடம் கேட்டான். “சரிதான்” என்று நான் சொன்னேன், புரிந்து கொண்டீர்களா? அரிஸோனா மாகாணத்தின் ஆளுநரின் பெயரால் கையொப்பமிடுங்கள் என்று நான் உங்களிடம் சொன்னால், அரிஸோனா மாகாணத்தைச் சேர்ந்தவராகிய நீங்கள் நம்முடைய ஆளுநர் யார் என்பதை தெரிந்தவராயிருப்பதால், சாம் கோட்டார்ட் (Sam Goddard) என்னும் பெயரில் கையொப்பமிடுகிறீர்கள். இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? நான் உங்களை கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் தான் மாகாண ஆளுநர் என்பதால் அவருடைய பெயரில் தான் கையொப்பமிட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும் ஆகையால் தான் பிதா, குமாரன், பரிசுத்தாவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள் என்று அவர் சொன்னார். அவர்கள் எவ்விதம் அதை செய்வார்கள் என்பது அவருக்குத் தெரியும். அவர் யார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்! ''என் ஆடுகள் என் சத்தத்தைக் கேட்கும்“ பாருங்கள், புரிந்து கொண்டீர்களா? ஓ, அப்படியா, என்று அவன் சொன்னான். அப்படியானால், நீங்கள் விசுவாசிப்பீர்களா? புரிந்து கொண்டீர்களா? என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. உங்களுக்குள் மறைவாக இருக்கக் கூடிய இந்த புதிய நித்திய ஜீவன் உங்களில் வாசமாயிருக்கும் பொழுது நீங்கள் சிருஷ்டிக்கும் வல்லமையை பெற்றுக் கொள்கிறீர்கள். 70அவர்கள் பெந்தெகோஸ்தே நாளில் பெற்றுக் கொண்டதைப் போல நீங்கள் இந்த பரிசுத்தாவியைப் பெற்றுக் கொள்ளும்பொழுது அவர்கள் வார்த்தையின் ஒரு பாகமாக இருந்தார்கள். இப்பொழுதோ தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமை வெளிப்பட வேண்டியது அவசியமாகிறது. அவர்களும் விசுவாசித்தார்கள். நாம் விசுவாசிக்கத் தொடங்கியபோதே அதைப் பெற்றுவிட்டோம் என்று நம்முடைய பாப்டிஸ்டு சபையைச் சேர்ந்த அருமையான நண்பர்கள் சொல்லுவது உங்களுக்குத் தெரியும். ஆனால், அவர்கள் விசுவாசித்திருந்தும் அதை பெற்றுக் கொள்ளவேயில்லை. அப்போஸ்தலர்: 19-ம் அதிகாரத்தில் அவர்கள் விசுவாசித்திருந்தும் அதை பெற்றுக் கொள்ளவேயில்லை என்பதை நாம் பார்த்தோம். ''நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்தாவியை பெற்றுக் கொண்டீர்களா?'' புரிந்து கொண்டீர்களா? அவர்கள் ஏற்கனவே வார்த்தையை சரியான விதத்தில் பெற்றிருந்தார்கள், ஏனெனில் அப்பல்லோ என்பவன் அவர்களுக்கு வார்த்தையைப் பிரசங்கித்து, வேதாகமத்திலிருந்து இயேசுவே கிறிஸ்து என்று காண்பித்து திருஷ்டாந்தப்படுத்தியிருந்தான், ஆனாலும் அவர்கள் இன்னும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளவேயில்லை. (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி)... நாடு கடந்து. நீங்கள் உங்களுக்குள்ளாகவே மெய்யுறுதிப்பாடாய் (earnest) பெற்றுக் கொண்டு காத்திருக்கிறீர்கள். இப்பொழுது, நீங்கள் உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பெற்றுக் கொள்ளும்போது உங்களுடைய சாவுக்கேதுவான சரீரம் சாவாமைக்கு உயிர்ப்பிக்கப்படுகிறது. அது உங்களுடைய முழு சரீரத்தையும் வார்த்தைக்கு கீழ்படியச் செய்கிறது. நீங்கள் வித்தியாசமாக நடந்து கொள்ளவும், வித்தியாசமாக நோக்கிப் பார்க்கவும், வித்தியாசமாக ஜீவிக்கும்படியாகவும் அது உங்களைத் தூண்டுகிறது. அது உங்களை முற்றிலும் வித்தியாசமாக மாற்றிவிடுகிறது. 71இப்பொழுது, கவனியுங்கள்! (ஒலிப்பதிவு நாடாவின் இரண்டாவது பக்கம் முடிவு பெறவில்லை - ஆசி)... உயிர்ப்பிக்கப்பட்டு, பாவத்திலும், அக்கிரமத்திலும், மரண இருளிலும் முன்பு மரித்திருந்த உங்களை அவர் உயிரோடே எழுப்பிவிட்டார். எதனால்? இயேசுவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலின் காலையில் உயிரோடெழுப்பிய அவருடைய ஆவியினாலேயே. அது உங்களுடைய சாவுக்கேதுவான சரீரங்களில் வாசமாயிருந்தால் (இப்பொழுது கவனியுங்கள்) அது உங்களை உயிர்ப்பித்து, ஜீவனுக்குக் கொண்டு வருகிறது. வார்த்தைக்கு கீழ்படியச் செய்கிறது. இப்பொழுது, வார்த்தையை மறுதலித்துக் கொண்டு எப்படி நீங்கள் அந்த ஆவியை பெற்றிருப்பதாக சொல்லிக் கொள்கிறீர்கள்? நீங்கள் வேறு ஏதோ ஒன்றால் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். தேவனுடைய ஆவியோ உங்களுடைய சாவுக்கேதுவான சரீரங்களை வார்த்தைக்கு மாத்திரமே உயிர்ப்பிக்கும். நிச்சயமாக அது செய்யும். தேவனுடைய ஆவியினாலேயன்றி நீங்கள் ஜீவிக்க முடியாது. நீங்கள் எல்லாவற்றையும் விசுவாசிக்காவிட்டால், நீங்கள் வெறும் சத்தமிடுவீர்கள். அவ்வளவுதான். நீங்கள் கொஞ்சம் எரிபொருளோடு கொஞ்சம் தண்ணீரை சேர்ப்பீர்களானால், நீங்கள் விரும்புகிற எந்த ஒரு இடத்திற்கும் போக முடியாது. புரிந்து கொண்டீர்களா? நீங்கள் நூறு சதவீதம் எரிபொருளை உடையவராக இருக்க வேண்டும். இல்லாவிடில் உங்களிடம் வல்லமை கிடையாது என்றே அர்த்தம். புரிந்து கொண்டீர்களா? ஆனால் நான்... நான் இதை விசுவாசிக்கிறேன். ஆனால் என்னால் அதை விசுவாசிக்க முடியாது என்கிறீர்களா? (தீர்க்கதரிசி பிரான்ஹாம் பம்ப் - பம்ப் - பம்ப் - பம்ப் என்று சப்தமிடுகிறார் - தமிழாக்கியோன்) உங்களால் எங்குமே போக முடியாது. ஆனால், ஓ, நீங்கள் முழு நிறைவைப் பெற்றுக் கொள்ளும் போதே அது தானாகவே பற்றி எரியும். ஒவ்வொரு வார்த்தையும், சத்தியம். 72பிறகு (இப்பொழுது கவனியுங்கள், நாம் செய்தியை முடிக்கப் போகிறோம், எனவே இதைக் கவனியுங்கள்) கவனியுங்கள், அது சிறிய விதையானது பூமிக்குள் புதைந்து கிடப்பதைப் போலாகும். நீங்கள். உள்ளுக்குள்ளாக உயிர்த்தெழுந்துவிட்டீர்கள். பரிசுத்தாவியைப் பெற்றுக் கொள்ளும் போதே நீங்கள் உயிர்ப்பிக்கப்படுகிறீர்கள். உங்கள் சரீரம் உள்ளுக்குள்ளாகவே (Potentially) உயிர்ப்பிக்கப்பட்டுவிட்டது. பூமியில் இருக்கிற ஒரு செடியைப் பாருங்கள். பூமிக்குள் ஊற்றுகிற தண்ணீரை அது தன்னுடைய ஊற்றின் வழியாக குடிக்க வேண்டும். அது பருகும்போது பூமிக்குள் சென்ற விதையைப் போலவே அது அவரை நோக்கி வளர ஆரம்பிக்கிறது. புரிந்து கொண்டீர்களா? சபையும் அவ்விதமாகவே நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்தாவியின் அபிஷேகம் ஆகியவற்றின் மூலம் வளர்ந்து, இப்பொழுதோ கனி கொடுக்கும் பருவத்தை அடைந்துவிட்டது. புரிந்து கொண்டீர்களா? தேவ ஆவியானவரே அவ்விதம் வருகிறார். உலகத்தின் ஆவியும் அந்திக் கிறிஸ்துவினால் அதே விதமாக வளர்ந்து வந்து இப்பொழுது, ஓ, “மகத்தான ஐக்கிய சபைகள்'' (Union of Churches) என்ற நிலையை அடைந்துவிட்டது. புரிந்து கொண்டீர்களா? முழுக் காரியமுமே. 73தனி மனிதனும் அவ்விதமாகவே வளர்ந்து வருகிறான். ஒவ்வொரு காரியமும் தேவனால் நிர்ணயிக்கப்பட்ட அதே வழியில் தான் கிரியை செய்கிறது. ஏனெனில், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். கவனியுங்கள்! நீங்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்பட்டு உயிர்த்தெழுதலின் முழு நிறைவைப் பெற்றுக் கொள்ள வளர்ந்து வருகிறீர்கள். பூமியிலுள்ள செடியானது தேவனுடைய ஊற்றிலிருந்து தண்ணீரை உறிஞ்சி, சூரிய வெப்பத்தினால் (சூ - ரி - ய - ன்) வளருவதைப் போலவே... புரிந்து கொண்டீர்களா? அது ஒரு இடத்திலிருந்து மாத்திரமே தண்ணீரை உறிஞ்சும். நீங்கள் ஒரே ஒரு தடவை எண்ணெயை அந்த விதையின் மேல் ஊற்றுவீர்களானால், அது அதைக் கொன்றுவிடும். அது சரிதான். நீங்கள் அசுத்தமானதும், பழையதுமான (old water) தண்ணீரை ஊற்றுவீர்களானால், அது அந்த செடியைக் கெடுத்து (contaminated) அதனுடைய வளர்ச்சியைப் பாதிக்கும். அந்த செடி கனி கொடுக்காது. அது சரிதானா? ஆனால் எந்த ஒரு மனிதனுடைய தயாரிப்பான அமிலங் கலந்த (chemical) தண்ணீரையும் ஊற்றாமல், வானத்திலிருந்து வரும் சுத்தமான மிருதுவான மழைத் தண்ணீரை (ஆமென்!) ஊற்றுவீர்களானால், அப்பொழுது அந்தச் செடியைக் கவனித்துப் பாருங்கள். அந்தச் செடியை வளரச் செய்வதற்கு மழைத் தண்ணீரை விட சிறந்தது வேறொன்றுமில்லை. நீங்கள் தண்ணீரில் குளோரின் (chlorine) போன்றவற்றை கலந்து செடிக்கு ஊற்றுவீர்களானால், அது செடியைக் கொன்றுவிடும் என்பதை முதலாவதாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 74அதுதான் இன்றும் சம்பவிக்கிறது. அவர்கள் ஸ்தாபனத்தின் ஊற்றிலிருந்து அவர்களுக்கு கொடுக்க முயற்சி செய்கிறார்கள், அது வளர்ச்சியை பாதிக்கிறது. புரிந்து கொண்டீர்களா? ஆனால் அவன் பெற்றுக் கொள்ளட்டும்... ...கிருபை பனித்துளிகளாக பிரகாசிக்குமிடத்திலிருந்து வருகின்றது. என்னைச் சுற்றி இரவும் பகலும் பிரகாசியும், இயேசுவே உலகத்தின் ஒளி. (அப்பொழுதே நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்கள்!) நாம் ஒளியிலே நடப்போம், அதுவே அருமையான ஒளி. கிருபை பனித்துளியாக பிரகாசிக்குமிடத்திலிருந்து வருகின்றது என்னைச் சுற்றிலும் பிரகாசியும் மனிதனால் உண்டாக்கப்பட்ட ஊற்றுக்களையெல்லாம் என்னிடமிருந்து விலக்கிவிடுங்கள். “இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை தவிர வேறெந்த ஊற்றையும் நான் அறியேன்.'' அந்த ஊற்றை மாத்திரமே நான் அறிந்து கொள்ள வாஞ்சிக்கிறேன். என்னில் உம்முடைய வார்த்தை வாசமாயிருக்கட்டும், கர்த்தாவே, உம்முடைய ஆவியினாலே நீர்ப் பாய்ச்சும். 75கவனியுங்கள்! இப்பொழுது இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பிய அதே ஆவி உன்னில் வாசமாயிருந்தால், நீ உனக்குள்ளாகவே ஜீவனைப் பெற்றுக் கொள்வாய், நீ வார்த்தையை விசுவாசிக்கும்படி ஆவியானவரே உயிர்ப்பித்து உன்னை வழி நடத்துவார். ஆவியானவரே வளருவதற்கு உன்னை வழி நடத்துவார். கவனியுங்கள்! பெந்தெகொஸ்தே நாளில் அவர்களுடைய சரீரங்கள் ஒரு புதிய ஜீவனுக்கு உயிர்ப்பிக்கப்பட்டது. கோழைகளாகிய அந்த சிறு கூட்டத்தைக் கவனித்துப் பாருங்கள். நான் உங்களை இங்கே நீண்ட நேரம் காக்க வைக்கிறேனா? (சபையோர் 'இல்லை' என்கின்றனர் - ஆசி) கவனியுங்கள், நான் அனல் கொண்டுள்ளேன். அதுதான், நான் நன்மை உணர்கிறேன். ஓ, என்னே? 76இதை கவனியுங்கள். அவர்கள் கோழைகளாய் இருந்தனர். ஆனால் அவர்கள் வார்த்தையை உடையவர்களாக இருந்தார்கள். புரிந்து கொண்டீர்களா? ஆனால் அவர்கள் மேல் வீட்டினுள் அடைந்து கிடந்தார்கள், வெளியே போகவே பயந்தார்கள். ''வெளியிலே இருப்பவர்கள் எல்லோரும் மிகப் பெரிய மத குருமார்கள், அவர்கள் முன்னால் போய் எங்களால் சாட்சி கொடுக்க முடியாது'', என்று அவர்கள் பயந்தார்கள். “ஓ, நானும் பயப்படுகிறேன். நான் அவரை விசுவாசிக்கிறேன் என்று குருமார்கள் முன்பு சாட்சி கொடுக்க என்னால் முடியாது, நான் பயப்படுகிறேன்'' உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? ஆனால் திடீரென்று உயிர்ப்பிக்கும் வல்லமை வருகிறது. ஆம், அது என்ன செய்தது? அது அவர்களுடைய ஆவியில் உள்ளாக நிரப்பியதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய சரீரங்களையும் உயிர்ப்பித்தது. அவர்களுடைய சரீரங்கள் உயிர்ப்பிக்கப்பட்டன. அதன்பிறகு அவர்கள் ஒருபோதும் கோழைகளாக இருக்கவில்லை. அவர்கள் நேரடியாக ஜனங்களிடம் போனார்கள். ஆம், ஐயா! “யூதர்களே, எருசலேமில் வாசம் பண்ணுகிற ஜனங்களே!'' அவர்கள் உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பு சாதாரணமானவர்களாக இருந்தார்கள். புரிந்து கொண்டீர்களா? ''எருசலேமில் வாசம் பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்த கொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்கு செவி கொடுங்கள், நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறி கொண்டவர்களல்ல''. நானும் அவர்களில் ஒருவனே. இது அதுவே! இது என்னவென்பதை நான் உங்களுக்கு சொல்லுகிறேன். இது வேத வாக்கியத்தின் நிறைவேறுதல், இது அதுவே!“ இது அதுவல்லவென்றால் அது வரும் வரை நான் இதைக் கைக் கொள்வேன் என்று நான் எப்பொழுதுமே சொல்லி வந்திருக்கிறேன். இல்லை. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. கடைசி நாட்களில் அது சம்பவிக்குமென்று கர்த்தர் உரைக்கிறார்: ''நான் மாமிசமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்''. பாருங்கள், உயிர்ப்பிக்கும் வல்லமை மாமிச சரீரத்தில் வருதல். அதன்பிறகு அவர்கள் ஒருபோதும் பயப்படவேயில்லை. 77நீங்கள் நீளமான தலைமுடி வைத்திருந்தாலோ, நீளமான பாவாடைகளை அணிந்தாலோ, சில பெண்கள் உங்களைப் பார்த்து சிரிப்பார்கள் என்று உங்களில் சிலர் பயப்படுகிறீர்கள். வேத வசனத்தின்படி நீங்கள் ஞானஸ்நானம் கொடுத்தால், உங்களுடைய ஸ்தாபனம் உங்களை வெளியேற்றிவிடுமோ என்று ஆண்களில் சிலர் பயப்படுகிறீர்கள். உன்னதத்திலிருந்து வரும் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நீங்கள் நிரப்பப்படும் வரை மேலறையில் காத்திருக்க வேண்டியதே உங்களுக்கு அவசியமாய் இருக்கிறது. அது சரிதான். அதுவே அவர்களை மாற்றியது, அது அவர்களை உயிர்ப்பித்தது; அவர்களை அது வித்தியாசமாக மாற்றிவிட்டது. அவ்வேளையிலிருந்து அவர்கள் மாறிவிட்டார்கள். கோழைகளாயிருந்த அவர்களுடைய பழைய வாழ்க்கையிலிருந்து அவர்கள் யூதா கோத்திரத்து சிங்கத்தைப் போல மாறிவிட்டார்கள். அவர்கள் தங்களை முற்றிலுமாக சிலுவை மரணத்திற்கும் சிலுவையிலே தலைகீழாக அடிக்கப்படுவதற்கும், அக்கினியிலே எரியப்படுவதற்கும், சிங்ககெபியிலே தூக்கி எறியப்படுவதற்கும், எல்லாவிதமான தியாக மரணத்திற்கும் (Martyrdom) ஒப்புக் கொடுத்தார்கள். அவர்கள் ஒருபோதும் கோழைகளாக இருக்கவில்லை. மரணம் அவர்களை ஒருபோதும் ஜெயிக்கவேயில்லை, சாவுக்கேதுவான சரீரங்களில் உயிர்ப்பிக்கும் வல்லமை வாசமாயிருந்தது. ஆம், ஐயா! அது அவர்களுடைய சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பித்தது. 78இப்பொழுது கவனியுங்கள், இங்கே இன்னொரு நிரூபணத்தைப் பாருங்கள். அவர்கள் பரலோகத்திலுள்ள உன்னத ஸ்தானங்களுக்கு உயர்த்தப்பட்டு அவர்களுடைய பாஷையே மாறுமளவிற்கு அவர்கள் சரீரம் உயிர்ப்பிக்கப்பட்டது. அது அவர்களுடைய பாஷையை மாற்றியது. அப்படித்தான் வேதம் சொல்லுகிறது. அது... அவர்களுடைய சாவுக்கேதுவான சரீரம் உயிர்ப்பிக்கப்பட்டு, அவர்களுடைய பாஷையும் மாறியது. அவர்களுடைய சிந்தனையும் உயிர்ப்பிக்கப்பட்டது. அவர்களுடைய ஜீவனும் உயிர்ப்பிக்கப்பட்டது. அவர்கள் எல்லாவற்றிலுமே உயிர்ப்பிக்கப்பட்டார்கள். அவர்கள் மனிதருடைய பாஷையில் பேச எவ்வளவோ முயன்ற போதிலும், அவர்களால் மனிதர் பாஷையில் பேச முடியவில்லை. அவர்கள் தேவனுடைய பிரசன்னத்திலே உயிர்ப்பிக்கப்பட்டு அந்நிய பாஷைகளை பேசினார்கள், அது பரலோகத்தின் பாஷை. (தீர்க்கதரிசி பிரான்ஹாம் வ்யூ என்று சத்தமிடுகிறார் - தமிழாக்கியோன்) என்னே ஒரு உயிர்ப்பிக்கும் வல்லமை! 79''இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால்'' (ஓ, அல்லேலூயா), அது உங்களுடைய சாவுக்கேதுவான சரீரங்களையும் உயிர்ப்பிக்கும். அது உங்களை நீங்கள் முன்பு செய்திராத கிரியைகளைச் செய்யத் தூண்டும். அப்பொழுது அவர்கள் நிறைவான உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பெற்றிருந்தார்கள். புரிந்து கொண்டீர்களா? உங்களுடைய சரீரங்கள் ஒருபோதும் பாவத்திற்கு அடிமைப்பட்டதல்ல. நீங்கள் உங்களுடைய வாஞ்சைகள்... “வெளியே வாருங்கள்” என்று அவர் சொல்லுகிறார். “உன் வாயை மூடு'' என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். “ஓ! எங்களிடம் பெரிய பெரிய...'' “உன் வாயை மூடு” ஆ, நீ ஒரு கழுகு! ஒரு வயதான கழுகு எவ்வளவு சுதந்திரமாய் நடந்து கொள்ளும் என்று நீ எப்பொழுதாவது பார்த்ததுண்டா? அது ஒரு வல்லூரைப் போல நடந்து கொள்ளாது. புரிந்து கொண்டீர்களா?ஒவ்வொரு மரித்த... பூமியின் மேல் கிடக்கிற எல்லா செத்த மாமிசத்தையும் அது புசிக்காது (Carrion) இல்லை. ஐயா. அது பெருமிதமாகவே நடந்து கொள்ளும். ஓ இங்கே... “உன் வாயை மூடு”, “ஒரு அருமையான விருந்து உண்டே'', ''அது எனக்காக அல்ல. என்னுடைய வாஞ்சைகளெல்லாம் மாறிவிட்டது; என்னுடைய பசி, தாகமெல்லாம் வித்தியாசமானது. ஏனெனில் மனிதன் பூமியின் செத்த மாமிசத்தினால் மாத்திரமல்ல (the world of carrion) தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்'' தேவனால் உயிர்ப்பிக்கப்பட்ட ஒரு உண்மையான கழுகு அதைக் கொண்டு தான் ஜீவிக்கும். ஆமென்! 80ஓ, கிறிஸ்துவை கல்லறையிலிருந்து எழுப்பிய ஆவி உங்களில் வாசமாயிருக்கும் போது, அது உங்களுடைய சாவுக்கேதுவான சரீரங்களை அவருடைய பிரசன்னத்தில் உயிர்ப்பிக்கிறது. நீ அதை அடையாளம் கண்டு கொள்கிறாய். நீ ஒருபோதும் காகம் அல்ல. (Scavengar - தமிழில் ஆகாயத்தோட்டி என்று அர்த்தம் - தமிழாக்கியோன்) நீ ஒரு கழுகு. நீ உலகக் காரியங்களை வாஞ்சிப்பதேயில்லை. நீ தேவனுடைய குமாரனும், குமாரத்தியுமாம். உலகம் அறிந்திராத ஊற்றண்டையிலே நீ பானம் பண்ணிக் கொண்டிருக்கிறாய். ஒரு சிலரே அதை அறிவர், உலகமோ அதைப் பற்றி ஒன்றும் அறியவில்லை. உலகம் ஒருபோதுமே அறிந்திராத மறைவான மன்னாவை நீ புசிக்கிறாய், ஏனெனில் நீ ஒரு கழுகு. உன்னதமான இடத்திற்கு நீ ஏறிப் போகும்படி நீ உயிர்ப்பிக்கப்படுகிறாய். நீ இனிமேல் கீழ்நோக்கி பறக்க முடியாது. மேல் நோக்கியே பறக்க வேண்டும். நீ மேல் நோக்கிப் பறக்கும்படி தான் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறாய். 81அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் மற்றொரு பாஷையில் பேசினார்கள். வேதம் அப்படித்தான் சொல்லுகிறது. ''வானத்தின் கீழுள்ள எல்லா பாஷைகளிலுமே அவர்கள் பேசினார்கள். உங்களால் அதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? “நான் இதை விசுவாசிப்பேனா இல்லையோ, எனக்குத் தெரியாது'' என்று அவர்களுடைய பழைய சாவுக்கேதுவான சரீரங்கள் சொல்லிற்று. திடீரென்று கதிர்கட்டாகிய யூதா கோத்திரத்து சிங்கத்தின் தைரியம் அவர்கள் மேல் விழுந்து அவர்களை உயிர்ப்பித்தது. ஓ, அந்தக் கழுகு தன்னுடைய சொந்தமானவர்களை அழைக்க வந்திருக்கிறது, ''அவர்கள் தங்களுடைய ஜீவனை மரணத்திற்கு ஒப்புக் கொடுக்க பயப்படவேயில்லை'' ஆமென்! தங்களுடைய ஜீவனின் இரத்தத்தை கொடுப்போர் ஆயிரம் ஆயிரம். பரிசுத்தாவியின் சுவிசேஷத்திற்காகவும் அதன் இளஞ்சிவப்பு இரத்தத்திற்காகவும். கடைசி நாட்களில் மணவாட்டியின் யுகத்தில் குமாரன் மீண்டும் வெளிப்பட்டே ஆக வேண்டும். ஒரு உயிர்ப்பிக்கும் வல்லமை வெளிப்பட்டே ஆக வேண்டும். ஸ்தாபனங்களிலிருந்தும், அதன் செத்தக் கிரியைகளிலிருந்தும் மீட்டு ஜீவ தேவனின் ஜீவ வார்த்தைக்கு உயிர்ப்பிக்க வேண்டும். ஓ! 82ஓ, இல்லை அது அவர்களை ஒரு புதிய ஜீவியத்திற்கு உயிர்ப்பித்தது. அதே காரியத்தை தான் அது நமக்கும் இப்பொழுது செய்கிறது. இப்பொழுது நான்... நான் உங்களுக்கு காண்பிக்க முயல்வதை கூர்ந்து கவனியுங்கள், கவனியுங்கள்! அப்பொழுது அவர்கள் தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமையிலேயே உயிர்ப்பிக்கப்பட்டார்கள். இப்பொழுது நான்... (இப்பொழுது கவனமாக கேளுங்கள். நான் அதை உங்களுக்கு விவரித்துச் சொல்கிறேன்.) உயிர்ப்பிக்கும் வல்லமையானது அவர்களுடைய ஆத்துமாவில் மாத்திரமல்ல, அவர்களுடைய முழு சரீரத்திலுமே நிரம்பி வழிந்தது. அது... உயிர்ப்பிக்கும் வல்லமையானது அவர்களுடைய முழு சரீரத்தையுமே உயிர்ப்பித்தது. நான் என்ன சொல்லுகிறேன் என்று புரிந்து கொண்டீர்களா? அவர்களுடைய நாவு வேறொரு பாஷையை உச்சரிக்கத் தக்கதாக அவர்கள் உயிர்ப்பிக்கப்பட்டடார்கள். அவர்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையினாலே உயிர்ப்பிக்கப்பட்டு, அவர்களுடைய கைகளை வைத்தார்கள். அவர்கள் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் உயிர்ப்பிக்கப்பட்டு வியாதியஸ்தர்களின் மேல் கைகளை வைத்தார்கள். அவர்கள் உடனே சொஸ்தமானார்கள். ''அது உங்களுடைய சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பிக்கிறது.'' அவர்கள் கைகளை வியாதியஸ்தர்கள் மேல் வைத்தபோது அவர்கள் சொஸ்தமானார்கள். 83தேவனுடைய ஆவி அவர்களுடைய ஐக்கியத்தை தேவனுடைய பிரசன்னத்திற்குள் உயிர்ப்பித்தது. அதனால் ஒருவன் மரித்து அவனுடைய ஆத்துமா அவனை விட்டு பிரிந்து போன பிறகும்கூட அவனுடைய ஜீவனை அவர்கள் அவனுக்கு திருப்பிக் கொடுத்தார்கள். ஆமென்! மகிமை! (இப்பொழுது, நான் பக்தி பரவசமடைகிறேன்). அதுசரிதான், உயிர்ப்பிக்கப்பட்டார்கள்! அவருடைய உயிர்த்தெழுதல் அவருக்கு மாத்திரமல்ல, சாவுக்கேதுவான சரீரங்கள் உயிர்ப்பிக்கப்பட்ட ஒவ்வொரு முன் குறிக்கப்பட்ட வித்துக்களுக்குமே அவருடைய உயிர்த்தெழுதல் சொந்தமாகும். சாவுக்கேதுவான சரீரத்தை உயிர்ப்பிக்கின்றது. அவர்கள் வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைத்தார்கள். அவர்கள் சொஸ்தமானார்கள். அவர்கள் தங்களுடைய ஆவியிலே தரிசனங்களைக் கண்டார்கள். அவர்கள் ஜெபித்து மரித்தோரை உயிருடன் எழுப்பினார்கள். அது சரிதான். அவர்களுடைய சாவுக்கேதுவான சரீரங்கள் உயிர்ப்பிக்கப்பட்டது. அந்த வல்லமை இப்பொழுது உனக்குள் இருந்தால், அவர்களைப் பின் தொடர்ந்த அதே கிரியைகள் உன்னிலும் காணப்படும், புரிந்து கொண்டீர்களா? அது உங்களுடைய சாவுக்கேதுவான சரீரத்தை உயிர்ப்பிக்கிறது, அது உங்களை உயிர்ப்பிக்கும். இப்பொழுது, கவனியுங்கள்! தேவனுடைய பிரசன்னத்திலே உயிர்ப்பிக்கப்பட்டு, ஏன்? அது இயேசுவை கல்லறையிலிருந்து உயிரோடெழுப்பிய அதே ஆவிதான். தேவனுடைய அதே ஆவிதான்... “நான் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பேன்”, (ஸோ - Zoe) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது அது உங்கள் மூலம் கிரியை செய்து அவர்களையும், அவர்களுடைய மனதையும் கூட உயிர்ப்பிக்கிறது. 84இப்பொழுது, கவனியுங்கள்! நீங்கள் நினைக்கிற எல்லாக் காரியமுமே சரிதான் என்று கிரியை செய்து கொண்டு, எப்படி அந்த ஆவி உங்களில் வாசம் செய்கிறது என்று நீங்கள் சொல்லக் கூடும்? (தீர்க்கதரிசி பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஐந்து முறை தட்டுகிறார் - ஆசி) இதோ நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்களா அல்லது இல்லையா என்பதற்கு சாட்சி, கிறிஸ்துவுக்குள் இருந்த ஆவி உங்களில் வாசமாயிருந்தால், அது உங்களை வார்த்தைக்கு உயிர்ப்பிக்கும், ஏனெனில் அவரே வார்த்தை. நீங்கள் வார்த்தைக்கு விரோதமாகவும் வார்த்தைக்கு அப்பாலும் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தால், உங்களில் வாசமாயிருப்பது கிறிஸ்துவின் ஆவியே இல்லை! அது உங்களை வார்த்தைக்குக் கொண்டு செல்லும் வரை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்... “என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கிறது'', அவைகள் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைக்கும், ஒவ்வொரு வார்த்தையினாலும். 85அன்று நான் பேசிக் கொண்டிருந்தேன். என்னுடைய வயோதிப அம்மா அவர்கள் மரித்துவிட்டார்கள், அவர்கள் பாதி இந்தியர் (half Indian) அவர்கள் ஒரு வினோதமான பெண்மணி. அவர்கள் வாழ்க்கையில் சொப்பனம் கண்டதேயில்லை. ஆனால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் நான்கு அல்லது ஐந்து சொப்பனங்கள் கண்டார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் கண்ட ஒவ்வொரு சொப்பனமும் உண்மையானதாய் இருந்தது. அவர்கள் ஒரு சொப்பனம் கண்டார்கள். அது உண்மையானது. நான் அநேக வருடங்களுக்கு முன்பு முதன் முதலில் பிரசங்கிக்க ஆரம்பித்த பொழுது, நாங்கள் இங்கே மேல் புறத்திலுள்ள சாலையின் மேல் வசித்துக் கொண்டிருந்தோம். நான் இதே சபையில் தான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் நான் இங்கே மூன்று படிக்கட்டுகளுக்கு அருகாமையில் நின்று கொண்டிருந்ததாக அவர்கள் ஒரு சொப்பனம் கண்டார்கள். எல்லோரும் பெரிய சாலையை அடைவதற்கு முன்னால் இந்த மூன்று படிக்கட்டுகளின் வழியாக நடந்து செல்ல வேண்டும் என்று நான் நின்று கொண்டே ஒவ்வொருவருக்கும் பிரசங்கித்துக் கொண்டிருந்தேனாம். அந்த பெரிய சாலையிலிருந்து முத்தைப் போன்ற வெண்மையான கோடு ஒன்று பரலோகத்தின் கதவு வரை காணப்பட்டதாம். அங்கே முத்துக்கள் பதித்த வாசல்கள் இருந்ததாம். முத்துக்குள் இந்த மூன்று படிக்கட்டுகளின் வரையிலும் பதிக்கப்பட்டிருந்ததாம். இன்று அதுவே என்னுடைய செய்தியாக இருக்கிறது. இல்லையா? நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்தாவியின் அபிஷேகம்! ஒருவன் அந்த பெரிய சாலையில் நடந்து போவதற்கு இந்த மூன்று படிக்கட்டுகளின் வழியாக வந்தே ஆகவேண்டும் என்று நான் சொல்லிக் கொண்டேயிருந்தேனாம். 86அப்பொழுது ஒரு ஸ்திரீ அந்த படிக்கட்டுகளின் அருகில் வந்தாளாம். (முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் ஜனங்கள் எப்படிப்பட்ட செருப்புகளை உபயோகித்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?) நல்லது, இன்று பெண்கள் அணிந்து கொண்டிருக்கிற உயரமான செருப்புகளைப் போல ஒரு ஜோடி செருப்பை அணிந்து கொண்டு ஒரு பெண்மணி இந்த படிக்கட்டுகளுக்கு அருகில் வந்தாளாம். அப்பொழுது “ஒரு நிமிடம் பொறுங்கள், சகோதரி. இந்த உயரமான செருப்புக்களுடன் நீங்கள் அந்த பெரிய சாலையில் நடக்க முடியாது'' என்று நான் சொன்னேனாம். ''நீ - நீ - உன்னால் அந்த பெரிய ரஸ்தாவில் நடக்க முடியாது'' என்று நான் சொன்னேனாம். அவள் தன்னைச் சுற்றிலும் இருந்த பெண்களைப் பார்த்து ''ஆ, அவரை விசுவாசிக்காதீர்கள், அவர் ஒரு பைத்தியக்கார மனிதன்'' என்று சொன்னாளாம் (புரிந்து கொண்டீர்களா?) ''அவரை விசுவாசிக்காதீர்கள், நான் உயரமான செருப்புகளை அணிந்து கொண்டே நான் நீதிமானாக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, பரிசுத்தாவியின் அபிஷேகத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை நிரூபிக்கிறேன் பாருங்கள்'' என்றும் அவள் சொன்னாளாம். அவள்... நான் அவள் போகும் வரை பேசாமலிருந்தோம். அதற்கு மேல் அதைப் பற்றி ஒன்றும் செய்ய முடியாது. அவளைத் தடுக்க முடியாது. அவள் அந்த பெரிய சாலையில் தாவிக் குதித்து, பின்னால் திரும்பி பார்த்து “நான் சொன்னேன் பாருங்கள்'' என்று மற்ற சகோதரிகளிடம் சொன்னாளாம். அவள் ஓட ஆரம்பித்தாள். மேலும் அவள்... உங்களுக்கு தெரியுமா? அவர்களுக்கு “நெறித்த கழுத்துக்கள்” இருக்கும் என்றும் அவர்கள், அவர்கள் ஒய்யாரமாய் ஆடிக் கொண்டு நடப்பார்கள். ''சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்'' என்று ஏசாயா: 5-ஆம் அதிகாரத்தில் வேதம் சொல்லுகிறது (ஏசாயா: 3:16 என்பதற்குப் பதில் 5-ஆம் அதிகாரம் என்று தீர்க்கதரிசி பிரான்ஹாம் குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்). 87அவள் அந்த பெரிய சாலையில் அவளால் எவ்வளவு கஷ்டப்பட்டு ஓட முடியுமோ அவ்வளவு கஷ்டப்பட்டு ஓடினாளாம். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அந்த சாலை மிகவும் குறுகலாகச் சென்றது, அவள் தடுமாறி நடந்து கொண்டும், ஒய்யாரமாக நடந்து கொண்டும் மறைந்துவிட்டாளாம். “அந்த ஸ்திரீ ஓடி மிகப் பெரிய நெருப்பில் விழுந்தாளாம். அவள் அந்த நெருப்பில் விழும்போது அலறிய அந்த பயங்கரமான சத்தத்தைப் போல், என்னுடைய வாழ்நாள் நான் ஒருபோதும் கேட்டதேயில்லை” என்று என் அம்மா என்னிடம் சொன்னார்கள். நான் சபையோரை திரும்பிப் பார்த்து “கவனித்தீர்களா''? என்று கேட்டேனாம். அவள் ஒரு, ஒரு வார்த்தையைத் தவிர மற்றெல்லாவற்றுக்குமே கீழ்ப்படிந்தாள். (புரிந்து கொண்டீர்களா?) ஒரு வார்த்தையைத் தவிர மற்றெல்லாவற்றுக்குமே, நிச்சயமாக பெந்தேகோஸ்தே சபையைச் சேர்ந்த ஸ்திரீகள் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, பரிசுத்தாவியினால் நிரப்பப்படலாம், ஆனாலும் அவர்கள் முற்றிலுமாக தவறிவிடுவார்கள். நிச்சயமாக மனிதன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். பாருங்கள், (புரிந்து கொண்டிர்களா?) அவள் செவி சாய்க்க தவறிவிட்டாள், நான் சொல்லியது போல் (புரிந்து கொண்டீர்களா?) அவள் எல்லாக் காரியங்களிலேயும் சரியாயிருந்தாள், ஆனால், (புரிந்து கொண்டீர்களா?) அவள் செவி கொடுக்க மறுத்துவிட்டாள். தேவன் தம்முடைய ஊழியக்காரர்களாகிய அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் சீஷர்கள் ஆகியோரைக் கொண்டு முன் கூட்டியே சுவிசேஷத்தை எழுதியிருந்தும் கூட, அவர்கள் செவி கொடுக்கமாட்டார்கள். 88இப்பொழுது உயிர்ப்பிக்கும் வல்லமை என்கிற கிரேக்க வார்த்தையாகிய ஸோ (Zoe) வின் அர்த்தம். கிறிஸ்துவின் சிந்தை உங்களில் இருக்கிறது என்பதே. தேவன் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பியபோது, அவரோடே ஜீவிக்கும்படி உன்னையும் உயிர்ப்பித்துவிட்டார் (நீங்கள் இப்பொழுது ஜீவனுக்கு உயிர்ப்பிக்கப்படுகிறீர்கள்) என்பதை நான் உங்களுக்கு விவரிக்க முயற்சிக்கிறேன். அப்பொழுது நீங்கள் அவருடைய சிந்தனையில் மாத்திரமே இருந்த போதிலும் எல்லோருமே அவருடன் உயிர்ப்பிக்கப்பட்டதை தேவன் பார்த்தார். புரிந்து கொண்டீர்களா? தேவன் அந்த சரீரத்தை கீழே நோக்கிப் பார்த்த போது... கெத்சமெனே தோட்டத்தில் அவருக்குள் இருந்த ஆவி எடுக்கப்பட்டுவிட்டது. அவர் ஒரு மனிதனாக மரிக்க வேண்டியிருந்தது. அவர் அப்படிச் செய்யத் தேவையில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், நண்பர்களே, அவர் தேவன். தேவன் அந்த மாமிச சரீரத்தை அபிஷேகித்தார், ஆனால் அது அவருக்கு அவசியமில்லை. அவர் அங்கே தேவனாகவே சென்றிருந்தால், அந்த வகையான மரணத்தை அவர் ருசி பார்த்திருக்க முடியாது. தேவனைக் கொல்ல முடியாது. ஆனால்... அவர் அவ்விதம் செய்யத் தேவையில்லை. ஆனால், நினைவில் கொள்ளுங்கள். அவர் உங்களை அவருக்குள் கொண்டவராய் அங்கே சென்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். புரிந்து கொண்டீர்களா? தேவன் மணவாட்டியை இன்று வரை மணவாளனிடமிருந்து பிரிக்கவேயில்லை. ஆகையால், தேவன் கிறிஸ்துவின் சரீரத்தை நோக்கிப் பார்த்தபொழுது அவரை ஆணும் பெண்ணுமாகவே கண்டார், எல்லாருமே அவர் ஒருவருடைய சரீரத்திலேயே மீட்கப்பட்டுவிட்டோம். புரிந்து கொண்டீர்களா? அவர்கள் ஒரே சரீரம் - ஒரே வார்த்தை, மணவாளனிடமிருந்து வெளிப்பட்ட அதே வார்த்தை. மணவாளனிடமிருந்து வெளிப்பட்ட அதே வார்த்தை மணவாட்டியின் மூலம் வெளிப்படுகிறது. 89நல்லது, அவரைக் குறித்து வாக்குரைக்கப்பட்ட ஒவ்வொரு காரியத்தையும் வெளிப்படுத்திக் காட்ட மணவாட்டியால், மணவாட்டி எப்படி தவறமுடியும், மணவாளன் மணவாட்டியின் மூலம் எவ்விதம் வெளிப்படாமல் இருக்க முடியும்? ஆனால் அவர் மரித்த பிறகு தன்னை உயிரோடெழுப்பி அவரைப் பற்றிய எல்லா வாக்குத்தத்தங்களையும் நிரூபித்தது போல, மணவாட்டியும் இந்தக் கடைசி நாளில் அவர் செய்த அதே கிரியைகளைச் செய்ய வேண்டாமா? அவளைப் பற்றிய வாக்குத்தத்தங்களை அவள் நிறைவேற்ற வேண்டாமா? அவள் மல்கியா: 4-ஆம் அதிகாரத்தின் வழியாக திரும்பி வரவேண்டாமா? சோதோமின் நாட்களில் நடந்ததைப் போல அவள் தன்னை வெளிப்படுத்திக் காட்ட வேண்டாமா? உலகமும் மற்றெல்லாமும்... அவ்விதமாகவே இருக்க வேண்டாமா? இவைகள் எல்லாம் தேவனுடைய வார்த்தை நமக்கு வெளிப்பட்டது என்பதின் பரிபூரண அடையாளமல்லவா? நல்லது, நண்பர்களே; நான் உங்களை அதிக நேரம் காக்க வைத்துவிட்டேன் என்று நினைக்கிறேன் - விருந்திற்கு இன்னும் பதினைந்து நிமிடங்களே இருக்கிறது, ஆனால் நான் அதற்குள் முடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன். ஆனால் கவனியுங்கள்! இங்கே பாருங்கள்! இது என்னே ஒரு பரிபூரணமான காரியம் (மீண்டும் உங்களை நான் எப்பொழுது சந்திப்பேன் என்பது தெரியாது, புரிந்து கொண்டீர்களா?) பாருங்கள்! இதைக் கவனியுங்கள்! 90ஆனால் தேவனோ மணவாட்டி மணவாளனுக்குள்ளேயே இருப்பதை முன்பே அறிந்திருந்தார்! அல்லேலூயா! புரிந்து கொண்டீர்களா? அவர் தன்னுடைய மணவாட்டியை இரட்சிப்பதற்கு, ஆதாமைப் போலவே, அவரும் அவளோடே போக வேண்டி இருந்தது. ஆதாம் தான் என்ன செய்கிறோம் என்பதை அறிந்திருந்தான், ஏவாளோ தான் என்ன செய்கிறோம் என்பதை அறிந்திருந்தாள். ஆனால் ஆதாம் தன் மனைவியுடனே வெளியேறினான். புரிந்து கொண்டீர்களா? இயேசு தன்னுடைய மனைவியின் ஸ்தானத்தை தானே எடுத்துக் கொண்டு, அவளுக்காக அவர் பாவமானார். நீ அவருடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்வதற்காக அவர் உன்னுடைய தண்டனையை ஏற்றுக் கொண்டார். அவர் உன்னைப் போல் மாறிவிட்டார் என்பதை நினைத்துப் பார். நீ அவருடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்வதற்காக அவர் உன்னுடைய தண்டனையை ஏற்றுக் கொண்டார். என்னே ஒரு அன்பு! என்னே ஒரு ஐக்கியம்! நாம் அதை எப்படி மறுதலிக்கக் கூடும்? அவரை நாம் நேசிப்பதைத் தவிர வேறெதையும் நாம் எப்படிச் செய்ய முடியும், நண்பனே? இதைக் குறித்து நான் மணிக் கணக்கில் பிரசங்கிக்க முடியும், ஆனால் நேரம் கொஞ்சமாகவே இருக்கிறது. 91பெந்தேகோஸ்தே நாளின் அனுபவத்தைப் போல் இன்றைய கடைசி நாளில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தாவியானவர் உரிமைப் பத்திரத்தின் அச்சாரமாயிருக்கிறார் (abstract) புரிந்து கொண்டீர்களா? நிச்சயமாக இப்பொழுது நீங்கள் ஒரு உரிமையைப் பெற்றுக் கொள்ளக் கூடும். புரிந்து கொண்டீர்களா? ஒரு இடத்தில் உரிமையை நீங்கள் விலைக்கு வாங்கக் கூடும், ஆனாலும் இன்று வரை அது உங்களுடையதல்ல என்று அது சொல்லுகிறது. இல்லை, ஐயா! யாராவது ஒருவர் வந்து அதன் பேரில் உரிமை கொண்டாடிக் கொள்ள முடியும். ஆனால் நீங்கள் ஒரு அச்சாரத்தை (abstract) பெற்றுக் கொள்ளும்போது அதற்கெதிரான (உரிமைக்கெதிரான - தமிழாக்கியோன்) எதிர்ப்புகள் துவக்கத்திலேயே அழிக்கப்படுகின்றது, பலம் இழந்துவிடுகின்றது. அது சரியல்லவா? ஒருவன் வார்த்தையை விசுவாசிப்பதாக சொல்லிக் கொள்ளும் போது அவன் மேல் பரிசுத்தாவியானவர் இறங்கினால், அதுவே அவனுடைய உரிமைக்கு அச்சாரமாயிருக்கிறது. அந்த அச்சாரத்தை நீ பெற்றுக் கொள்ளும்போது மாத்திரமே அது உனக்கு எல்லாவற்றின் மேலும் அனுமதியளித்து ஒவ்வொரு சிறு பாகத்தையும் உனக்கு சொந்தமாக்குகிறது. ஆமென். (சகோ. பிரான்ஹாம் பீடத்தின் மீது மூன்று முறை தட்டுகிறார் - ஆசி) உலகத் தோற்றத்திற்கு முன்பே தேவன் முன்னறிந்து ஜீவ புத்தகத்தில் பெயரெழுதப்பட்ட ஒரு ஆணுக்கும் ஒரு ஸ்திரீக்கும் பாவத்திலே பிறந்து பாவத்திற்கு அடிமைப்பட்டு கிடக்கும் உரிமைப் பத்திரத்தின் மேல் பரிசுத்தாவியானவர் இறங்கும் பொழுது அது அச்சாரத்தைப் பெற்றுக் கொள்கிறது. ஆனால் நான் விசுவாசிக்கும்போதே பத்திரத்தை (deed) பெற்றுக் கொண்டேன். ஆனால் பரிசுத்தாவியானவர் வரும்போது என்னுடைய தகப்பனும், தாயும், என்னுடைய பாட்டியும் செய்ததுமான எனக்கு விரோதமான பாவக் காரியங்கள் எல்லாமே ஒழிந்து போய் எனக்கு அச்சாரம் கிடைத்துவிடுகிறது. முன்பு நான் கூறினது போன்று, சில நிமிடங்களுக்கு முன்பு நான் வலிப்புநோய் உள்ள குழந்தைக்காக ஜெபித்தேன். அந்த குழந்தைக்கு அதனுடைய மூதாதையர்கள் (grandparent) மூலமாகவே அந்த வலிப்பு நோய் வந்தது. 92ஆனால் அச்சாரமானது வந்தபோது அது எல்லாவற்றையும் எடுத்துவிட்டது, கழித்துவிட்டது. அதிலிருந்து நான் அச்சாரத்தைப் பெற்றுக் கொண்டவனாகிவிடுகிறேன். ஆமென்! தேவனுடைய ஆவி கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பியது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக நான் அவருடைய சரீரத்தின் ஒரு பகுதி என்ற உரிமைப் பத்திரத்தின் அச்சாரத்தைப் பெற்றுக் கொண்டேன் அன்று அவருடைய சரீரம் பரிசுத்தாவியின் அச்சாரத்தினாலே ஜீவித்தது போல இந்த கடைசி நாளுக்கென்று உரைக்கப்பட்ட வாக்குத்தத்தத்தின்படியே இன்றும் அந்த சரீரம் ஜீவிக்கிறது - அச்சாரம். (சகோ. பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை நான்கு முறை தட்டுகிறார் - ஆசி) என்னுடைய பாவங்கள் அனைத்துமே ஒழிந்து போயிற்று. உங்களுடைய எல்லாப் பாவங்களுமே இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, தேவனுடைய முன்னறிவினாலே எனக்கு கிருபையாக கொடுக்கப்பட்ட உரிமைப் பத்திரத்தின் அச்சாரமாக பரிசுத்தாவியானவர் வருகிறார். ஓ, என்னே! 93எதற்காக நீங்கள் பயப்படுகிறீர்கள்? ''பயப்படாதிருங்கள், மரித்தேன், ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடே இருக்கிறேன்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். ஒன்றைப் பற்றியும் கவலைப்படாதீர்கள், மரணம் உங்களை சேதப்படுத்தாது“ என்று அவர் சொல்லியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. கவனியுங்கள்! இது எவ்வளவு அழகாயிருக்கிறது! நாம் சீக்கிரமாக முடிப்போம். உரிமைப் பத்திரத்தின் அச்சாரம். கிரயம் செலுத்தப்பட்டுவிட்டது; இதற்கு விரோதமான எல்லாமே ஒழிந்து போயிற்று. (ஹா, ஹா, ஹா! மகிமை என்று தீர்க்கதரிசி பிரான்ஹாம் சப்தமிடுகிறார் - தமிழாக்கியோன்) நான் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்ளலாம். ஆனால் மகிழ்வாக நான் உணருகிறேன். கவனியுங்கள்! புரிந்து கொண்டீர்களா? ஓ! உரிமைப் பத்திரத்தின் அச்சாரம், அதன் அர்த்தம் என்னவென்று நீங்கள் புரிந்து கொண்டீர்களா? சகோதரனே, அதன் அர்த்தம் என்னவென்று புரிந்து கொண்டீர்களா? அதிலிருந்து ஒன்றுமே உங்களை வேறு பிரிக்க முடியாது. ஆமென்! நான் உரிமைப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டேன். ஆமென்! என்னே - என்னே ஒரு உரிமைப் பத்திரம். அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றினால் நான் என்னுடைய உரிமையை இப்பொழுது அடைந்துவிட்டேன். நான் அவராக மாறுவதற்கு அவர் என்னைப் போலானார். நான் உரிமைப் பத்திரமுடைய குமாரனாகத் தக்கதாக அவர் பாவமுள்ளவரானார். ஏனெனில், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்'' (மாற்கு: 16:16). புரிந்து கொண்டீர்களா? உரிமைப் பத்திரத்தின் அச்சாரம். சீக்கிரமாக முன்னால்... நாம் இன்னுமொரு பத்து நிமிடம் எடுத்துக் கொள்வோம். 94நாம் இப்பொழுது துரிதமாக உயிர்ப்பிக்கும் ஆவியை கவனிப்போம். உங்களுக்கு காட்டப் போகிறேன். கவனியுங்கள், இந்த உயிர்ப்பிக்கும் வல்லமை என்ன என்பதை கவனியுங்கள் (அதுவே என்னுடைய செய்தியின் தலைப்பு), குமாரன் உயிரோடெழுந்த பின்னால்... பெந்தெகொஸ்தே நாளில் அவர்களுக்கு எவ்விதம் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை கிரியை செய்தது, அவர்களுக்கு அது என்ன செய்தது, என்பதை கவனித்துப் பாருங்கள். அது அவர்களை உயிர்ப்பித்தது. ஸ்தேவானுக்கு அது என்ன செய்தது என்பதை நாம் கவனிப்போம். ஸ்தேவான் முற்றிலுமாக தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிரப்பப்பட்டிருந்தான், அது சரிதானா? புரிந்து கொண்டீர்களா? அவன் முற்றிலும் உயிர்ப்பிக்கும் வல்லமையால் நிரப்பப்பட்டிருந்தான். அவன் எதற்குமே பயப்படவில்லை. “வணங்கா கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவியிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப் போலவே நீங்களும் பரிசுத்தாவிக்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள்” என்று ஸ்தேவான் கதறினான். ஓ, என்னே! அவனுக்கு ஏதோ சம்பவித்துவிட்டது. நிச்சயமாக, அவன் முழுவதுமாக உயிர்ப்பிக்கும் வல்லமையால் நிறைந்திருந்தான். ஆகவே அவர்கள், “அவனை நாம் விரட்டியடிப்போம்'' என்று சொன்னார்கள். அவன் மரிக்கும் பொழுது (அவர்கள் அவனை கல்லெறிந்து அவனுடைய மண்டையை உடைத்தார்கள்) அவன் வானத்தை அண்ணாந்து பார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலது பாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு; அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும் மனுஷகுமாரன் தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான். உயிர்ப்பிக்கும் வல்லமை ஸ்தேவானுக்குச் செய்தது அதுவே. 95கவனியுங்கள், மற்றொருவனும் இதே உயிர்ப்பிக்கும் வல்லமையை பெற்றிருந்தான்; அவன் பெயர் பிலிப்பு, அவன் முற்றிலுமாக உயிர்ப்பிக்கும் வல்லமையை பெற்று, சமாரியாவில் ஒரு மகத்தான கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தான், பிசாசுகளை துரத்தினான்; இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். ஆவியானவர் அவனோடே பேசினார், அவர்கள் ஒரு மெய்யான கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர் ஓ, உயிர்ப்பிக்கும் வல்லமை கீழிறங்கி வந்து ''எழுப்புதலை விட்டு விலகிப் போ'' என்று சொல்லிற்று. “ஆனால், ஊழியக்காரர்கள் என்ன சொல்லுவார்கள்?”, ''அவர்கள் சொல்வது எந்த வித்தியாசத்தையும் உருவாக்குவதில்லை“ புரிந்து கொண்டீர்களா? அவன் முற்றிலும் உயிர்ப்பிக்கும் வல்லமையால் நிரப்பட்டிருந்தான். அவன் எரிபொருளாகிய உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பெற்றிருந்தான், ”வனாந்திரத்திற்கு ஓடிப்போ“ என்று அவனிடம் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை சொல்லியது. அவன் அவ்விடத்தில் ஒரு மந்திரியைக் கண்டான், அவனுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தான். அவனிடம் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்ட அந்த ஓரே மனிதன் எத்தியோப்பியா முழுவதுக்கும் செய்தியை கொண்டு போனான். அது சரிதானா? அவன் தேவனுக்கு கீழ்ப்படிந்தான்... நீங்கள் இதுவரையிலும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளாவிடில், தேவனுக்குக் கீழ்படிந்து இப்பொழுதே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்; அப்பொழுது உயிர்ப்பிக்கும் வல்லமை உங்களையும் நிரப்பி என்ன செய்கிறதென்று பாருங்கள்? புரிந்து கொண்டீர்களா? 96ஸ்தேவான் இந்த மகத்தான காரியத்தைச் செய்யும் பொழுது... ஸ்தேவான் அல்ல, பிலிப்பு அந்த மகத்தான எழுப்புதல் கூட்டத்தை விட்டு விலகி தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிந்து, அந்த மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். அப்பொழுது பிலிப்பு முற்றிலும் உயிர்ப்பிக்கும் வல்லமையால் நிரப்பப்பட்டிருந்தான். அவனை ஆசோத்திலிருந்து செசரியா வரைக்கும் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை தூக்கிச் சென்றது. (சகோ. பிரான்ஹாம் கைகளை இரண்டு முறை தட்டுகிறார் - ஆசி) இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால் அது உங்களுடைய சாவுக்கேதுவான சரீரங்களையும் உயிர்ப்பிக்கும்... பிலிப்புவை அது மற்றொரு தேசத்திலுள்ள 150 மைல்களுக்கப்பால் உள்ள ஒரு இடத்திற்கு தூக்கிச் சென்றது. அது அவனுடைய சாவுக்கேதுவான சரீரத்தை உயிர்ப்பித்தது. அவன் அதை எப்படிச் செய்தான்? அவன் முற்றிலும் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தான். 97ஓ, ஜீவனுள்ள தேவனுடைய சபையே, நான் இன்று ருசித்துக் கொண்டிருக்கிற சிறிய சர்க்கரைத் துண்டை (sugar tits) சுற்றிலும் மாத்திரமே தின்று கொண்டிருக்க முடியாது; பரிசுத்தாவியின் உயிர்ப்பிக்கும் வல்லமையால் நிரப்பப்படும் வரையிலும் நாம் முற்றிலுமாக ஜெபத்திலே தரித்திருக்க வேண்டும்... நாம் என்றாவது ஒருநாள் வருகையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆம்! ஐயா! ஆமென்! ஓ, நான்! நான் அப்படிச் சொல்லியதை பொறுத்துக் கொள்ளுங்கள். சிறு பிள்ளைகளுக்கு உபயோகமாகும் காலுறைகளை (socks) செய்கிற ஒரு தாயைப் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். வயதான தாய்மார்களாகிய உங்களில் சிலருக்கு ஞாகமிருக்கும். பனி அதிகமாக இருக்கும்போது நீங்கள் உங்கள் சிறு பிள்ளைக்கு காலில் காலுறையை அணிவித்து, காப்பியில் சர்க்கரை போட்டுக் குடிக்கக் கொடுப்பீர்கள், அப்பொழுது குழந்தைக்கு சூடு உண்டாயிருக்கும். ஆனால் அதில் குழந்தை வளர்ச்சிக்கு தேவையான சத்து இல்லை. அது அக்குழந்தையைக் கொன்றுவிடும். புரிந்து கொண்டீர்களா? காப்பியில் சர்க்கரை போட்டு அக்குழந்தைக்கு குடிக்க கொடுக்கும் போது காபின் (caffeine) என்கிற விஷம் அக்குழந்தைக்குள் செல்லுகிறது. அப்படிப்பட்ட காரியத்தை தான் நாம் செய்து வருகிறோம். தேவனுடைய வார்த்தைக்கு திரும்புங்கள்! நீங்கள் கழுகுகள்! கொழுத்த பதார்த்தங்களை சாப்பிடுங்கள். உங்களுடைய மனதை எதுவுமே புண்படுத்த முடியாது. ஆகையால் மனிதனுடைய எல்லா அவமானங்களிலிருந்தும் நீங்கள் விடுபட்டுவிட்டீர்கள். உங்களுக்கு விரோதமாக யார் பேசினாலும் நீங்கள் அன்பாகவே இருப்பீர்கள். ஆமென். உயிர்ப்பிக்கும் வல்லமை. கோழிக்குஞ்சுகளுக்கு மேலாக கழுகு வானங்களில் பறந்து வெகு தூரத்திலுள்ள இயேசு கிறிஸ்துவுக்குள் உன்னத ஸ்தானங்களிலே வீற்றிருக்கிறது. ஓ! அந்த வல்லமை பிலிப்புவின் மேல் தங்கியிருந்து, அவனை உயிர்ப்பித்து, அவனை மேலே தூக்கி சென்றது. 98நாம் இன்னுமொரு மனிதனை பார்ப்போம். ஏனோக்கு என்று ஒரு மனிதன் இருந்தான். அவன் ஏறக்குறைய ஐந்நூறு வருடங்களாக தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையின் படியும் நடந்து வந்தான். “அவன் ஒரு தடவை கூட தன்னுடைய வார்த்தையை நிறைவேற்ற தவறியதில்லை'' என்னும் சாட்சியைப் பெற்றிருந்தான். வார்த்தையின் ஒரு பாகமாகிய அவன் மேல் உயிர்ப்பிக்கும் வல்லமை வந்திறங்கியபோது, அவன் மரணத்தை ருசி பாராமல் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். அவன் தேவனோடே சஞ்சரித்தான். அவன் பிலிப்பைப் போலவே அதிகமான உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பெற்றிருந்தான். பிலிப்பு காசாவிற்குப் போவதற்குப் பதிலாக மேடான தேசங்களின் வழியாக ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம் பண்ணி செசரியாவிற்கு வருகிற வரையில் சகலப் பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வந்தான். அதைப் போன்று அல்லாமல், ஓ, அவன் (ஏனோக்கு - தமிழாக்கியோன்) கூறினான். ”நான் ஒரு வயதான கிழவன், எப்படியாயினும் உயிர்ப்பிக்கும் வல்லமை நிறைந்தவனாக நான் உள்ளேன். நான் பூமியை விட்டு வெளியே நடந்து சென்றுவிடுவேன்'' என்று கூறினான். அதே உயிர்ப்பிக்கும் வல்லமையைத் தான் நாம் இப்பொழுது பெற்றிருக்கிறோம். புரிந்து கொண்டீர்களா? அது உங்களுடைய சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பிக்கும். அது சரிதானா? அதுவே உயிர்ப்பிக்கும் வல்லமைகள், ''தேவன் சொல்லிய எல்லாவற்றையுமே நான் செய்து முடித்தேன். அவர் நான் செய்ய வேண்டும் என்று சொல்லியபோது நான் கண்ட எல்லாவற்றையும் செய்து முடித்தேன்“ என்ற சாட்சியை ஏனோக்கு உடையவனாய் இருந்தான். உயிர்ப்பிக்கும் வல்லமை அவனை வந்தடையும் வரை அவன் வார்த்தையின் ஒரு பாகமாகவே ஜீவித்தான், உயிர்ப்பிக்கும் வல்லமை அவனிடம் வந்த போதோ, அவன் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். அவன் பூமியிலிருந்து நேரே பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். 99இப்பொழுது கவனியுங்கள்! எலியா... மகத்தான தீர்க்கதரிசியான எலியாவை நோக்கிப்பார்... அவன் தன்னுடைய நாளில்... என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் சகோதரனே, சகோதரியே, அந்த நாளில் பெண்கள் இடுப்புக்கு மேல் உடம்பை வெளியே காட்டிக் கொண்டும், முகத்தில் சாயத்தைப் பூசிக் கொண்டு வாழ்ந்ததையும், யேசபேல்களையும், ஆகாபுகளையும் அவன் எதிர்த்து நின்றான். அவனை ஆதரிப்பதற்கு ஒருவருமேயில்லை. அவன் அவர்களுக்கு எதிர்த்து நின்று அவர்களை கடிந்து கொண்டான், தேவன் அவன் மேல் நோக்கமாயிருந்து எல்லா இடங்களிலும் அவனுக்கு உதவி செய்தார். ஒருநாள் அந்த வயதான கிழவன் இளைப்படைந்தான் என்பது உங்களுக்குத் தெரியும். ''எனக்கு மிகவும் வயதாகிவிட்டது ஆகையால் இனிமேல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது'' என்று அவன் சொன்னான். அவர்கள், “அவனுக்கு தொண்ணூறு வயதாகிவிட்டது, அவனுடைய வாழ்நாட்கள் முடிவடைகின்றன'' என்று சொன்னார்கள். மிகவும் வயதானவனாக அவன் அங்கே சுற்றித்திரிந்து, அதிகமான உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பெற்றிருந்தான். அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? யோர்தானின் மறுகரையை நோக்கி அவன் பார்த்தான், (ஓ, தேவனே, என்னால் மறுகரையை நோக்கிபார்க்க முடிகிறது. உங்களால் முடியவில்லையா?) அக்கினிமயமான இரதம் ஒன்று அக்கினிமயமான குதிரைகளால் பூட்டப்பட்டு, ஒரு மரத்திலே அந்த இரதம் கட்டப்பட்டிருப்பதை அவன் தன் கண்களால் காணத் தக்கதாய் அதிகமான உயிர்ப்பிக்கும் வல்லமையால் நிரப்பப்பட்டிருந்தான். அவன் ஆற்றின் குறுக்கே நடந்து, மரணத்தை ருசி பாராமல், பரலோக வீட்டிற்குச் சென்றான். உயிர்ப்பிக்கும் வல்லமை பரலோகத்திலிருந்து ஒரு இரதத்தை கீழே இறக்கி அவனை மேலே எடுத்துக் கொண்டது. அவன் தன் மேலங்கியைக் கூட கழற்றி அதை எலிசாவிற்காகக் கீழே எரிந்துவிட்டான் (எலிசா என்பதற்குப் பதிலாக தீர்க்கதரிசி எலியா என்று சொல்கிறார் - தமிழாக்கியோன்) அது சரிதான். 100எலிசா அந்த மேலங்கியை எடுத்துக் கொண்டான். (அது சபைக்கு மீண்டும் ஒரு நிழலாக இருக்கிறது, புரிந்த கொண்டீர்களா?) அந்த மேலங்கியை எடுத்துக் கொண்டான். இப்பொழுது, அவன் இரட்டிப்பான அற்புதங்களைச் செய்தான். (அது கிறிஸ்துவுக்கும் சபைக்கும் ஒரு நிழலாக இருக்கிறது). புரிந்து கொண்டீர்களா? எலியா நான்கு அற்புதங்களைச் செய்தான்; எலிசா எட்டு அற்புதங்களைச் செய்தான். இப்பொழுது அவன் இரட்டிப்பான வல்லமையைப் பெற்றிருந்தான், ஏனெனில் அவன் அதற்காக விண்ணப்பம் செய்தான். “நான் செய்யும் கிரியைகளை விட நீங்கள் பெரிதான கிரியைகளைச் செய்வீர்கள்'', புரிந்து கொண்டீர்களா? எலிசா செய்த ஒவ்வொரு காரியமும் எலியா செய்ததைக் காட்டிலும் இரட்டிப்பான வல்லமை உடையதாய் இருக்கும் அளவிற்கு. அவன் அதிகமான உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பெற்றிருந்தான், அவன் எண்பது அல்லது தொண்ணூறு வருடங்கள் உயிர் வாழ்ந்து கிழவனாகி மரித்தான். அவன் மரித்தபின்பு அவனை எடுத்து அவர்கள் அடக்கம் செய்தார்கள் என்பதை கவனியுங்கள். அவனைவிட்டு அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை விலகவே இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். அதன்பிறகு அனேக, அனேக ஆண்டுகளாகி அவனுடைய சரீரம் மக்கிப் போய் (Rotted) கல்லறையினுள் அவனுடைய எலும்புகள் மாத்திரமே இருந்தன; ஒரு நாள் அவர்கள் ஒரு செத்த மனிதனை தூக்கிக் கொண்டு வந்தார்கள், அங்கே அவர்கள் எதிரியைக் கண்டு, எலிசாவின் எலும்புகளின் மேல் தூக்கி எறிந்தார்கள். அந்த எலும்புகளிலுள்ள அதிகமாக உயிர்ப்பிக்கும் வல்லமையினால் செத்தவன் உயிரோடே குதித்து எழுந்தான். ஓ! 101ஓ! அவர் உங்களுடைய சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பிப்பார்! உங்கள் சரீரம் மரித்து கல்லறையிலே மக்கிப் போனாலும் அந்த மண்ணிலேயே உயிர்ப்பிக்கும் வல்லமை தங்கியிருக்கிறது. அல்லேலூயா! (ஹம்! என்று தீர்க்கதரிசி பிரான்ஹாம் சத்தமிடுகிறார் - தமிழாக்கியோன்), கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடே எழுப்பினவர் உங்களுடைய சாவுக்கேதுவான சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்! மீண்டும் அங்கே எலியா, எலியாவும், எலிசாவும்... நினைவில் கொள்ளுங்கள். மரித்துப் போன எலிசா தீர்க்கதரிசி, கல்லறையிலே மக்கிப் போன நிலைமையில் கிடந்தான், அவன் அங்கே முற்றிலும் உயிர்ப்பிக்கும் வல்லமையை உடையவனாகவே இருந்தான் என்பதை நினைத்துப் பாருங்கள், எனவே தான் அவன் மீது செத்துப் போன ஒரு மனிதனை தூக்கி எறிந்த உடனேயே செத்தவன் பிழைத்துக் கொண்டான். அவன் வியாதியஸ்தர்களின் மேல் இப்பொழுதும் கைகளை வைக்க முடியும். அவனால் முடியாதா? ஆமென். அதுவே வெளிப்பாடு. 102நாம் அவருடைய மாமிசத்தின் மாமிசமாய் இருக்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள் (இயேசு கிறிஸ்து). நாம் அவருடைய மாமிசத்தின் மாமிசமாகவும் எலும்பின் எலும்பாகவும் இருக்கிறோம். ஓ, அதைத் தவிர வேறு எவ்விதமாகவும் இருக்க முடியாது. நாம் உயிரோடே எழும்பப் போகிறோம், அவ்வளவுதான். சர்வ சாதாரணமாக உயிருடன் எழும்பப் போகிறோம். அவ்வளவுதான். ஈஸ்டர் (Easter) என்பது பாரம்பரியத்தை விட மேலானது. இப்பொழுது நம்முடைய சரீரங்கள் உயிர்ப்பிக்கப்பட்டு, பரலோகத்தின் உன்னத ஸ்தானங்களிலே நாம் அவரோடே கூட உட்கார்ந்து இருக்கிறோம்... நம்முடைய இந்த சரீரம் கடலில் அழுகிப் போகலாம், பூமியின் மண்ணுக்குள் மக்கிப் போகலாம், ஒரு கரண்டி அளவு (Spoon) சாம்பல் கூட மிச்சமில்லாமல் போகலாம், ஆனால் மணவாட்டி வந்து கொண்டிருக்கிறாள். ஏனெனில் என்னுடைய கர்த்தரை மரித்தோரிலிருந்து உயிரோடே எழுப்பினவருடைய ஆவி இந்த சரீரத்தையும் உயிர்ப்பித்துவிட்டது. உங்களுடைய சாவுக்கேதுவான சரீரமும் உயிர்ப்பிக்கப்படுகிறது. நாம் அவருடைய உயிர்த்தெழுதலில் பங்குள்ளவர்களாகவும், நான் இதுவரை விளக்கமாகப் பேசிய அவருடைய நித்திய ஜீவனின் உரிமைதாரர்களாகவும் ஆகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். “பயப்படாதிருங்கள், என்று அவர் சொன்னதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, ஏனெனில் மரணமே உன் கூர் எங்கே, பாதாளமே உன் ஜெயம் எங்கே'' என்று பவுல் கூறியதை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார். நான் உயிர்ப்பிக்கும் வல்லமையின் முழு நிறைவைப் பெற்றிருக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் மூலமாய் ஜெயங் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம், ஆம் ஐயா! உயிர்ப்பிக்கும் வல்லமை. ஓ, என்னே! 103நேற்றும், இன்றும், என்றும், மாறாத அவர் என்றென்றும் ஜீவிக்கிறார். (எபிரேயர்: 13:8). கவனியுங்கள்! மேசியா, அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவர், அதே போல, அவருடைய மணவாட்டியும் மேசியாக்கள் (புரிந்து கொண்டீர்களா?) அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவர். கவனியுங்கள்! மரணம் தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமையைத் தடுக்க முடியாது. மரணத்தால் அதை நிறுத்த முடியாது, அதைப் பெற்றுக் கொள்ளும் போதே அது நித்தியமானதாக இருக்கிறது. தடுத்து நிறுத்துவதற்கு யாதொன்றாலும் கூடாது. அதற்கு நீங்கள் ஓய்வு கொடுக்க முடியாது (harness) உங்களால் முடியாது. அது கிரியை செய்வதற்கு விரோதமாக உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. நீங்கள் மரித்துப் போனாலும் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை உங்களை விட்டு எடுபட்டுப் போகாது. அது என்றென்றும் நித்தியமானது. புரிந்து கொண்டீர்களா? கவனியுங்கள்! மோசே அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையினால் முற்றிலுமாக நிரம்பியிருந்தான். இல்லையா? அவன் ஒரு தீர்க்கதரிசி, அவனிடம் வார்த்தை வந்தது. அவன் வார்த்தையின் ஒரு பாகமாக இருந்தான், அவன் தான் அந்த நாளுக்குரிய வார்த்தையாயிருந்தான். அது சரிதானா? அவன் மரித்து எண்ணூறு வருடங்களுக்குப் பின்னால் மறுரூப மலையின் மேல் எலியாவுடன் வந்து நின்றான். (தீர்க்கதரிசி பிரான்ஹாம் எலியா என்பதற்குப் பதில் எலிசா என்று குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்) அது சரிதானா? உயிர்ப்பிக்கும் வல்லமையை மரணம் மேற்கொள்ள முடியாது. இல்லை, முடியாது. “நான் அவனை மீண்டும் உயிரோடே எழுப்புவேன்'', தேவ தூதர்கள் வந்து அவனை எடுத்து ஒரு பள்ளத்தாக்கிலே அடக்கம் பண்ணினார்கள். அவனுடைய சரீரம் அழுகி மக்கிப் போய்விட்டது, அவனுடைய எலும்புகளெல்லாம், மற்றெல்லாமும் அழிந்து போயிற்று. ஆனால் உயிர்ப்பிக்கும் வல்லமையோ அங்கேயிருந்தது. அது அவனை உயிர்ப்பித்து மறுரூபமலையின் மேல் கொண்டு வந்தது. அவன் அங்கே நின்று கொண்டிருந்தான். கவனியுங்கள்! 104“அது சரிதானா, சகோதரன் பிரான்ஹாம், எண் நூறு வருடங்களுக்கு பிறகுமா?'' என்று நீங்கள் கேட்கிறீர்களா? ஓ, என்னே! நீங்கள் மத்தேயு: 27-ஆம் அதிகாரம் 51-ஆம் வசனத்தை வாசிப்பீர்களானால் (நான் இங்கே ஒரு வசனத்தை குறித்து வைத்திருக்கிறேன்), நீங்கள் அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அவர் வருவார் என்று விசுவாசித்து, அங்கே அவர்கள் எல்லோரும் காத்திருக்கையில்... இங்கே வேதம் சொல்லுகிறது, அவர் வந்த பின்னால்... பூமியின் மண்ணில் நித்திரையடைந்தவர்களின் மேல் உயிர்ப்பிக்கும் வல்லமை தங்கியிருந்தது, அவர்கள் அவரின் ஒரு பாகமே (அவர்கள் பரிசுத்தவான்கள்) அவர்கள் அவரின் ஒரு பாகமே, ஏனெனில் அவர்மேல் அவர்கள் விசுவாசம் வைத்திருந்தார்கள். உள்ளுக்குள்ளாகவே அவர்கள் ஒரு பலியாட்டின் மூலமாக ஜீவனைப் பெற்றிருந்தார்கள். (பாவ நிவாரணம்) அது ஆட்டின் ஆவியை மீண்டும் மனிதனின் மேல் ஒரு போதும் கொண்டு வரமுடியாது. மனிதனுடைய ஆவியின் மேல் தேவன் தாமே வாசம் செய்வது எவ்வளவு மகத்துவமானது! புரிந்து கொண்டீர்களா? எவ்வளவு அதிகமான உயிர்ப்பிக்கும் வல்லமையை நாம் பெற்றுள்ளோம்! ஆனால் ஒரு ஆட்டுக்குட்டியின் மூலம் வெறும் சாயலாகவே பாவநிவாரணம் செலுத்தப்பட்டது. இப்பொழுது நம்மிடம் உள்ளது நிழல் அல்ல. அது உண்மைப் பொருள். அதைப் பற்றி நாம் எவ்வளவு பயப்படுகிறோம். அவர்கள் அவருடைய உயிர்த்தெழுதலின் சாயலை மாத்திரமே விசுவாசித்து மரித்து கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டார்கள்... 105அங்கே யோபு தன்னுடைய மகத்தான சகிப்புத் தன்மையுடன் காணப்படுகிறான். அவனுக்குண்டான எல்லாக் காரியங்களும் எடுக்கப்பட்டன. ''அவனை என் கையில் ஒப்பு கொடும், அப்பொழுது நான் உம்முடைய முகத்திற்கு முன்பாக அவனை சாபமாக்குவேன்'' என்று சாத்தான் சொன்னான். அதன்பிறகு அவன் செயலில் இறங்கினான். ''அவனுடைய ஜீவனை மட்டும் எடுக்காதே“ என்று சொல்லி தேவன் யோபுவை சாத்தானின் கையில் ஒப்புக் கொடுத்தார். அவனுடைய ஜீவனை மட்டும் எடுக்காமல் சாத்தான் மற்றெல்லாவற்றையுமே செய்தான். அவனுடைய மனைவி கூட அவனுக்கு விரோதமாக திரும்பினாள். ''உம்முடைய ஜீவன் போகிறதே'', என்று அவள் சொன்னாள். வேறு விதமாகச் சொன்னால், அவளால் அவனுக்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை. அதன்பிறகு அவள் அவனை நேசிக்கவில்லை, அவனை வெளியே தள்ளிவிட்டாள். “யோபுவே, நீர் பரிதபிக்கப்படத் தக்கவர். நீர் ஏன் தேவனை தூஷித்து உம்முடைய ஜீவனை விடுவதில்லை'' என்று சொன்னாள்? “நீ பைத்தியக்காரி பேசுவது போல பேசுகிறாய்'' என்று யோபு சொன்னான். புரிந்து கொண்டீர்களா? ஓ, என்னே! புரிந்து கொண்டீர்களா? அவனுடைய விசுவாசத்தில் அவன் உறுதியாயிருந்தான், அவன் ஒரு தீர்க்கதரிசி. ''நான் ஒரு பாவியல்ல, நான் பாவ நிவாரண பலியை செலுத்திவிட்டேன்'' என்று சொன்னான். ஆமென்! அவன் தன்னுடைய ஸ்தானத்தை அறிந்திருந்தான். அவன் வார்த்தையில் ஜீவித்தான். மற்றவர்கள் சொல்லியதைப் பற்றியெல்லாம் அவன் கவலைப்படாமல் வார்த்தைக்கு உத்தமமாக ஜீவித்தான். அந்த கொடிதான சூழ்நிலையிலும் கூட அவன், “நீ பைத்தியக்காரி பேசுவது போல பேசுகிறாய்” என்று சொன்னான். “கர்த்தர் கொடுத்தார்; கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம், ஒன்றுமே இல்லாமல் இவ்வுலகத்தில் பிறந்தேன்; நிர்வாணியாய் பிறந்தேன்; நிர்வாணியாகவே மரிப்பேன். கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்”, அவனுடைய பிள்ளைகள் மரித்துவிட்டார்கள், உடம்பெல்லாம் கொடிய பருக்களால் வாதிக்கப்பட்டான், அவனுடைய நண்பர்கள் எல்லாருமே அவனுக்கு விரோதமாகத் திரும்பினார்கள், அவனுடைய சபை அங்கத்தினர்கள், மற்றெல்லாரும் அவனுக்கு விரோதமாக எழும்பி அவனுடைய மனதை புண்படுத்தினார்கள்... என்னே ஒரு பரிதாபமான கொடுமை. நீங்கள் ஒருவர் கூட அப்படிப்பட்ட உபத்திரவங்கனை அனுபவித்ததேயில்லை. அப்படியிருந்தும் அவன் வார்த்தையை விசுவாசித்தான். 106அவன் ஒரு கழுகு. ஓ, என்னே! எப்பொழுதுமே அவனை உபத்திரவம் சூழ்ந்து கொண்டிருக்க முடியாது. இல்லை. முடியாது! வார்த்தையில் ஜீவித்த அவனுக்கு திடீரென்று என்ன சம்பவித்தது? வானங்கள் விலகியோடியது, இடி முழக்கங்கள் கர்ஜித்தன, மின்னல் மின்னியது, யோபு அண்ணாந்து பார்க்கையில் ஒரு தரிசனத்தைக் கண்டு, ''என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன், இந்த என் தோல் முதலானவை அழுகிப் போன பின்பு, (எலும்புகளும் மற்றெல்லாம் கூட) நான் என் மாமிசத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன், அவரை நானே பார்ப்பேன், அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும், அது சரிதானா? இந்த வாஞ்சையால் என் உள்ளந்திரியங்கள் எனக்குள் சோர்ந்து போனாலும், இந்த என் தோல் முதலானவை அழுகிப் போனாலும் என்னில் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை இருக்கும்“, என்று சொன்னான்... 107உன்னுடைய சரீரத்தைத் தின்னும் பூச்சிகள் உன்னிடம் வர வேண்டிய அவசியமேயில்லை, அந்த பூச்சிகள் ஏற்கெனவே உன் சரீரத்தில் இருக்கின்றன, அவைகள் உங்களுடைய சரீரத்திலேயே உள்ள பூச்சிகள் என்று உங்களுக்கு முன்பே தெரியுமா? உன்னை ஒரு சவப் பெட்டியினுள் வைத்து காற்றுப் புகாதவாறு அந்த சவப்பெட்டியை அடைத்துவிட்டால், பூச்சிகள் (Bugs) உன்னைத் தின்றுவிடும், ஏனெனில் அந்த பூச்சிகள் உன்னுடையவைகளே. உனக்குள்ளாக கூட்டம் கூட்டமாக பூச்சிகள் இருக்கின்றன. ''இந்த என் தோல் முதலானவை அழுகிப் போன பின்பு (என்னுடைய சரீரம்) நான் என் தேவனைப் பார்ப்பேன்'' (யோபு: 19:26). அன்று உயிர்த்தெழுதலின் காலையில்... மகிமை! அல்லேலூயா! அவர் உயிர்த்தெழுந்த பின் நித்திரையடைந்திருந்த அநேக பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தன. இவர்கள் கல்லறைகளை விட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்கு காணப்பட்டார்கள் என்று மகத்தான எழுத்தாளனாகிய மத்தேயு; தன்னுடைய சுவிசேஷத்தில் 27-ஆம் அதிகாரம் 52-ஆம் வசனத்தில் குறிப்பிடுகிறார். எலியாவின் எலும்புகளெல்லாம் இல்லாதிருந்தும், யோபுவின் சரீரம் ஒரு கரண்டி (Spoon) அளவுக்கு சாம்பல் கூட மிச்சமில்லாதிருந்தும், அங்கே உயிர்ப்பிக்கும் வல்லமை அவர்களுடைய எலும்புகளில் தங்கியிருந்தது. இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பிய இந்த ஆவி உங்களில் வாசமாயிருந்தால், அவர் உங்களுடைய சாவுக்கேதுவான சரீரத்தையும் உயிர்ப்பிப்பார். கவனியுங்கள், இப்பொழுது சீக்கிரம்! 108''ஆ, நான் அந்தக் காலத்தில் வாழ்ந்திருக்க விரும்புகிறேன்“ என்று நீங்கள் சொல்கிறீர்களா?... நீங்கள் அதைவிட ஒரு மேலான நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்! இப்பொழுது, நீங்கள் எல்லோரும்... நீங்கள் சில வசனங்களை குறித்துக் கொள்வதை நான் பார்க்கிறேன். நல்லது, 1தெசலோனிக்கியர்: 4-ஆம் அதிகாரம் 16-ஆம் வசனத்தை குறித்துக் கொள்ளுங்கள். கவனியுங்கள், என்னே அழகு! புரிந்து கொண்டீர்களா? கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களை தேவன் தன்னுடனே கூட்டிச் சேர்ப்பார். புரிந்து கொண்டீர்களா? எலியாவையும், எலிசாவையும் போல கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டு நித்திரையடைந்தவர்கள் (புரிந்து கொண்டீர்களா?) உயிர்ப்பிக்கப்பட்டு, அவர்களோடே நாமும் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவோம். ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள் மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவோம். உயிரோடே இருப்பவர்கள் மேலும் உயிர்ப்பிக்கும் வல்லமை; நித்திரையடைந்தவர்களின் மேலும் உயிர்ப்பிக்கும் வல்லமை. புரிந்து கொண்டீர்களா? 109அதே உயிர்ப்பிக்கும் வல்லமை தான் இந்த இரண்டு தீர்க்கதரிசிகளிலும் தங்கியிருந்தது. அவர்கள் இருவருடைய பெயருமே ஒன்றாக இருப்பதைக் கவனியுங்கள். எலிசா, எலியா. மண்வாட்டியையும், மணவாளனையும் கவனித்தீர்களா? அவர்களில் ஒருவர் திருவாளர் இயேசு, (Mr. Jesus) மற்றொருவர் திருமதி. இயேசு, (Mrs. Jesus) ஏறக்குறைய ஒரே மாதிரியான பெயர் - அவர் - அவள், புரிந்து கொண்டீர்களா? எலியா... அதே காரியம் இங்கே எப்படி பிரதிபலிக்கிறது பாருங்கள். எலியா பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். (அவன் சபைக்கு அடையாளம்) சரிதான். எலியா, எலிசா உயிர்த்தெழுதல் வரை காத்திருந்தான். புரிந்து கொண்டீர்களா? இது ஒரு பறவை பறப்பதற்கு இரண்டு இறக்கைகள் தேவைப்படுவதைப் போலாகும். புரிந்து கொண்டீர்களா? இந்த இரண்டு தீர்க்கதரிசிகளுமே சபைக்கு முன்னடையாளமாக இருந்தார்கள். ''ஏனெனில் கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்'', அப்பொழுது இரண்டு இறக்கைளுமே ஒன்றாகச் சேர்ந்து நாம் பறந்து போய்விடுவோம். (அல்லேலூயா!) நாம் பறந்து போவோம். எதனால்? உயிரோடு இருக்கிறவர்களோ அல்லது மரித்தவர்களோ யாராயிருந்தாலும் அவர்களிடம் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை இருக்கிறது. கவனியுங்கள்! நினைத்துப் பாருங்கள்!. இப்படிப்பட்ட காரியங்களைப் புரிந்து கொள்வதற்காகவே நீங்கள் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள். இந்த நாளுக்குரிய உயிர்ப்பிக்கும் வல்லமையைக் கவனியுங்கள்! நாம் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள்... அநேக நாட்களுக்கு முன்பு... 110''பிதா எனக்கு காண்பிக்கிற யாவையும் மறைக்காமல் நான் உங்களுக்கு சொல்லுகிறேன்“ என்று இயேசு சொன்னார், பவுலும் அதே விதமாகத்தான் நடந்து கொண்டார். இந்த கடைசி நாட்களில் நம்மேல் இந்த உயிர்ப்பிக்கும் வல்லமை தங்குவதைக் காணும் பொழுது... வியாதியஸ்தர்கள் சுகமாவதை காண்பதற்கும் உயிர்ப்பிக்கும் வல்லமையை நமக்குத் தருகிறார். ஆதி அப்போஸ்தலர்களுடைய நாட்களில் கிரியை செய்த அதே உயிர்ப்பிக்கும் வல்லமை நம் மத்தியிலும் கிரியை செய்து தரிசனங்களை கொண்டு வருவதையும், மரித்தோரை உயிரோடெழுப்புவதையும் நாம் காண்கிறோம், புரிந்து கொண்டீர்களா? வியாதியஸ்தர்களையும் அது சுகமாக்குகிறது. 111அன்று டோனாவன் வீர்ட்ஸ் (Donovan Weerts) உடன் நான் இங்கே பேசிக் கொண்டிருந்தேன். (அவனை உங்கள் எல்லோருக்குமே தெரியும் என்று நான் நினைக்கிறேன்) அவனுடன் நான் வேட்டைக்குச் சென்றிருந்தேன். அவன் நம்முடைய சபைக்கு வருபவன், அவன் வயதில் ரொம்ப சிறியவன், அருமையானவன். எனக்கு ஒரு நல்ல அருமையான நண்பன். அவன், ''உங்களுக்கு நான் சிரமம் கொடுக்க விரும்பவில்லை'' என்று என்னிடம் சொன்னான். அவனுடைய காதைத் தொட்டு அதன் உள்ளேயும் வெளியேயும் நன்றாக நோக்கிப் பார்த்தேன், “டோனாவன் நீ சௌக்கியமாக இருக்கிறாயா?'' என்று நான் கேட்டேன். அவனுக்கு புற்று நோய், ”உன்னுடைய காதில் என்ன டோனாவன்?'' என்று அவனிடம் நான் கேட்டேன். “எனக்குத் தெரியவில்லை, சகோதரன் பிரான்ஹாம், ஆறு ஏழு மாதங்களாக அது வளர்ந்து கொண்டே வருகிறது...'' என்று அவன் சொன்னான். ''நீ ஏன் அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை?'' என்று நான் அவனைக் கேட்டேன். “உங்களுக்குச் சிரமம் கொடுக்க நான் விரும்பவில்லை, சகோதரன் பிரான்ஹாம்'', என்று அவன் சொன்னான். “அது என்னவென்று உனக்குத் தெரியுமா? என்று நான் அவனைக் கேட்டேன். “ஓரளவு தெரியும்” என்று அவன் சொன்னான். நான் அவன் மேல் என்னுடைய கைகளை வைத்தேன், ஆனால் நான் ஒரு வார்த்தையுமே சொல்லவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு அவனுடைய காதில் புற்றுநோயின் வடு கூட இல்லை (Scar) அது என்ன? அது உயிர்ப்பிக்கும் வல்லமை! புரிந்து கொண்டீர்களா? அது உங்களுடைய சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பிக்கும். அவனுடைய காதை புற்று நோய் (Cancer)அரித்துவிட்டது. அந்த அரிப்பு அவனுடைய மூளை வரை பாதித்திருக்கும். புரிந்து கொண்டீர்களா? அவன் மரித்து போயிருப்பான். ஆனால் உயிர்ப்பிக்கும் வல்லமை, புரிந்து கொண்டீர்களா? 112ஒருநாள் நான் மிகவும் களைப்பாயிருந்தேன். அப்பொழுது... நான் சொன்னேன், ''நீ... உனக்கு ஐம்பது வயதாகிவிட்டது, நீ முன்னேறிச் செல்வது நல்லது. நீ, நீ கர்த்தருக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதை தாமதிக்காமல் இப்பொழுது செய்து முடி, ஏனெனில் உனக்கு வயதாகிவிட்டது.'' புரிந்து கொண்டீர்களா! உயிர்ப்பிக்கும் வல்லமை அன்று காலையில் என்னை நிரப்பியது, அவர் என்னை திரைக்கப்பால் காணும்படி செய்தார், நான் உங்கள் எல்லோரையும் அங்கே பார்த்தேன். பாருங்கள், புரிந்து கொண்டீர்களா? அஹ், அஹ், பாருங்கள்? “நீ நேசித்த யாவரும், உன்னை நேசித்த யாவரும் உனக்கு அளிக்கப்பட்டார்கள்'', என்று அவர் கூறினார், பாருங்கள்? அவர்கள் எல்லோரையும் அவ்விதமாகவே நான் கண்டேன். என்ன அது? உயிர்ப்பிக்கும் வல்லமை. அது என்ன? உயிர்ப்பிக்கும் வல்லமை. வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதிய யோவான் முற்றிலும் உயிர்ப்பிக்கும் வல்லமையால் நிறைந்து, அங்கே நின்று கொண்டு துவக்கத்திலிருந்து முடிவு வரைப் பார்த்தான்... ஏசாயா முற்றிலும் உயிர்ப்பிக்கும் வல்லமையால் நிறைந்து, அங்கே நின்று கொண்டு ஆயிரவருட அரசாட்சியையும், மற்றெல்லாவற்றையும் பார்த்தான். உயிர்ப்பிக்கும் வல்லமை, கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், அது உங்களுடைய சாவுக்கேதுவான சரீரத்தையும் உயிர்ப்பிக்கும், சாவுக்கேதுவான சரீரம். 113நினைத்துப் பாருங்கள்! உயிர்ப்பிக்கும் வல்லமை. இந்த நாளில் நாம் என்ன பார்த்தோம் என்பதைக் கவனியுங்கள். ஏழு முத்திரைகளை திறக்கத் தக்கதாக உயிர்ப்பிக்கும் வல்லமை நம்மிடத்தில் வந்துள்ளது. அது என்ன? அது மனிதனுடைய ஞானமா? இல்லை. தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமை இது சம்பவிக்குமென்று முன்னறிவித்தது. புரிந்து கொண்டீர்களா?. அதைக் குறித்து உலகமும் சாட்சி கொடுக்கும் படி உயிர்ப்பிக்கும் வல்லமை செய்தது. நான் உங்களிடம் கூறியவாறே கர்த்தருடைய தூதனானவர் அந்த அக்கினி ஸ்தம்பத்தை சுற்றிலும் இருந்தது; உலகமானது அது உண்மை என சாட்சிக் கூறச் செய்தது உயிர்ப்பிக்கும் வல்லமையே, ஆகவே அது என்னவென்று அவர்களுக்கு தெரியாது. ஆனால் நமக்கு தெரிந்திருக்கிறது. இந்த பக்கமாக திருப்பி பாருங்கள் (தீர்க்கதரிசி பிரான்ஹாம் மேக ஸ்தம்ப புகைப்படத்தை பற்றி விளக்குகிறார் - தமிழாக்கியோன்) அங்கே மேலே இருந்தது நம்முடைய கர்த்தர் தாமே, புரிந்து கொண்டீர்களா? உலகமோ அதைக் குறித்த ஒன்றுமே அறியவில்லை. ஆனால் நாமோ அங்கே கர்த்தர் நின்றார் என்பதைப் புரிந்து கொண்டோம். நீங்கள் புரிந்து கொண்டீர்களா? 114முத்திரைகளைத் திறந்தவர் அவரே. அவரே அந்த முத்திரைகள், ஏனெனில் தேவனுடைய முழு வார்த்தையும் கிறிஸ்துவே, கிறிஸ்துவே திறக்கப்பட்ட முத்திரைகள். அப்படியானால் முத்திரைகள் திறக்கப்படுவது என்பது என்ன? கிறிஸ்துவை வெளிப்படுத்துவதே ஆகும். ஏழுசபைக் காலங்களின் தூதர்களும் ஏழு சபையின் காலத்தோடே போய்விட்டார்கள், அந்தக் காரியங்களை நாம் பார்க்க முடியாது. அவர்கள் அவர்கள் அந்த புகைப்படத்தை எடுத்தார்கள், நாம் அல்ல. அங்கே தான் அவர் பிரதம நீதிபதியாக நின்று கொண்டு, அவர்தான் அல்பாவும், ஒமேகாவும் என்றும், ஆதியும் அந்தமுமானவர் என்றும் வெளிப்படுத்திக் காட்டுகிறார். என்னே ஒரு அடையாளம். உயிர்ப்பிக்கும் வல்லமைதான் அதை நமக்குச் செய்தது. அவர் வருகிறார் என்பதை நாம் காண்பதற்கு உயிர்ப்பிக்கும் வல்லமை தான் உதவி செய்கிறது. உயிர்ப்பிக்கும் வல்லமை நம்மை மரணத்திலிருந்து ஜீவனுக்கு மீட்டுக் கொண்டது. உயிர்ப்பிக்கும் வல்லமை பகுத்தறியும் வரத்தைத் தந்து உங்களுடைய தவறு என்ன என்றும், என்ன செய்ய வேண்டும் என்றும், நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்றும், நீங்கள் என்ன செய்திருக்கக் கூடாது என்றும், நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும், நீங்கள் என்னவாயிருப்பீர்கள் என்பதையெல்லாம் புரிந்து கொள்ளச் செய்கிறது. உயிர்ப்பிக்கும் வல்லமை. இந்த எல்லாக் காரியங்களுமே. 115நம்முடைய கர்த்தராகிய இயேசு முற்றிலும் உயிர்ப்பிக்கும் வல்லமையால் நிறைந்திருந்து முழு வார்த்தையின் நிறைவேறுதலாயிருந்தார். “இந்த சரீரத்தை அழித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்'', என்று அவர் சொன்னார். நம்பிக்கையோடே உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பற்றி பேசுங்கள். ''இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்'' ஏன்? ஏன் அவர் அப்படிச் சொன்னார்? அவரைப் பற்றி அவ்விதமாக எழுதியுள்ளதை அவர் அறிந்திருந்தார். (புரிந்து கொண்டீர்களா?) ஒருபோதும் ஒழிந்து போகாத தேவனுடைய வார்த்தையில் அவரைக் குறித்து அவ்விதம் எழுதப்பட்டுள்ளது. ''என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்“ என்று வார்த்தை சொல்லுகிறது. (சங்: 16:10). உயிர்ப்பிக்கும் வல்லமை அவரை உயிரோடே எழுப்பும், அவருடைய சரீரத்தின் ஒரு அணு கூட அழிவைக் காணாது என்பது அவருக்குத் தெரியும். “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்'' என்று அவர் சொன்னார். ஏன்? அது தீர்க்கதரிசனமாகிய தேவனுடைய வார்த்தை. தீர்க்கதரிசனம் தேவனுடைய உண்மையான வார்த்தையாயிருந்தால் அது ஒழிந்து போகாது. தேவன் அவரை உயிரோடே எழுப்பினார் என்று சொல்லுகிற தேவனுடைய தீர்க்கதரிசனமும், வார்த்தையும், நாமும் அவரோடே உயிர்த்தெழுந்துவிட்டோம் என்று சொல்லுகிறது. “பயப்படாதிருங்கள்'', என்று அவர் சொன்னதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவரை உயிரோடே எழுப்பினவருடைய ஆவி இப்பொழுது நமக்குள் வாசம் செய்து நம்முடைய சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பிக்கிறது என்று எழுதியிருக்கிறது. பயப்படாதிருங்கள், நண்பனே, கு-மா-ர-ன் (S-O-N) உயிர்த்தெழுந்தார். குமாரன் உயிர்த்தெழுந்தார். 116இப்பொழுது, மறுரூபமாகுதலைக் கவனியுங்கள். நாம் ஒவ்வொரு வரும் அங்கே சாயலாக நின்றோம். வருகையில் எடுத்துக் கொள்ளப்படும் உயிருள்ள பரிசுத்தவான்களுக்குச் சாயலாக எலியா அங்கே நின்றான், மரித்த பரிசுத்தவான்களுக்குச் சாயலாக மோசே அங்கே நின்றான்... அவர்கள் இருவரும் உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பெற்றிருந்தார்கள். மரித்திருந்தாலும், மரிக்காமலிருந்தாலும் அவர்கள் அங்கே நின்றார்கள். கவனியுங்கள்! ஓ, நாம் இப்பொழுது இந்தக் கடைசி நாட்களில் என்ன பார்த்துப் கொண்டிருக்கிறோம் என்பதை யோசித்துப் பாருங்கள். யோவான்: 14-ஆம் அதிகாரம் 12-ஆம் வசனத்தில் அவர் வாக்களித்த அதே காரியம். இப்பொழுது யோசித்துப் பாருங்கள்!நிச்சயமாக! (ஒலிநாலிடாவில் காலியிடம் - ஆசி) ''உங்களிடம் வல்லமையிருப்பதாகச் சொல்லிக் கொள்கிறீர்களா?'' என்று ஜனங்கள் சொல்லுகிறார்கள். “இல்லை, இல்லை, இல்லை! நாங்கள் மறுரூபமலையில் நின்றவர்களைப் போலத்தான் புரிந்து கொண்டீர்களா? நிச்சயமாக, நம்மிடம் வல்லமை இருப்பதாக நாம் சொல்லிக் கொள்வதில்லை, ஆனால் நாம் மறுரூபமலையின் மேல் நின்று கொண்டிருந்தவர்களைப் போலதான். ''என்னை யார் என்று சொல்கிறார்கள்“ என்று மோசே கேட்கவில்லை, ”என்னை யார் என்று சொல்கிறார்கள்'' என்று சீஷர்கள் யாருமே கேட்கவில்லை. சம்பவித்தது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? கவனியுங்கள்! அவர்கள் இயேசு மகிமையடைந்ததைப் பார்த்தார்கள். இயேசு மகிமையடைந்ததைப் பார்ப்பதற்கு மாத்திரமே அவர்கள் வாஞ்சையாயிருந்தார்கள். 117இன்றும் அதே சம்பவிக்கிறது. நாம் நம்மைப் பெரிய மனிதர்களாக்கிக் கொள்ள முயற்சிக்கவில்லை. நம்மைப் பற்றி ஜனங்கள் என்ன சொல்கிறார்கள் என்று நமக்குக் கவலையே கிடையாது. நம்முடைய நாமம் ஒன்றுமில்லை, அது அவருடைய நாமமே. நம்முடைய ஜீவன் ஒன்றுமில்லை, அது அவருடைய ஜீவனே, அது நம்முடைய வல்லமையல்ல, அது அவருடைய வல்லமையே, அவரை மகிமையின் சரீரத்தில் பார்ப்பது ஒன்றே நம்முடைய வாஞ்சை. அது எப்படி முடியும்? நம் மத்தியில் இருக்கிற அவருடைய உயிர்த்தெழுதலினால் அவர் மகிமையடையும் போது மாத்திரமே. அவர் அன்று இருந்ததைப் போலவே மீண்டும் இன்று இருப்பதை நாம் காண்கிறோம். நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்களா? புரிந்து கொண்டீர்களா? நாம் மகிமையடைவது நம்முடைய வாஞ்சையல்ல. நம்முடைய வாஞ்சை ஒரு பெரிய நாமமல்ல, பெரிய சபையை எழுப்பி, அநேகரை ஞாயிறு பள்ளியில் சேர்த்து, அநேக உல்லாசப்பயண விருந்துகளை ஏற்படுத்தி (picnic party) அநேக நட்சத்திரங்களைத் தொங்கவிட்டு (stars) இன்னும் இதுபோன்ற அநேக வேறு காரியங்களைச் செய்வதிலெல்லாம் எங்களுடைய வாஞ்சை இல்லை. அது எங்களுடைய வாஞ்சை இல்லை. அவர் மகிமையடைந்ததைப் பார்ப்பது தான் நம்முடைய வாஞ்சை. எதில் மகிமையடைந்தார்? சுய பெருமையினால் அல்ல, நம்மிலும், நம்முடைய ஜீவியத்திலும் அவர் ஜீவிக்கிறார் என்றும், நமக்குள்ளாக ஜீவிக்கிறார் என்பதை நிரூபிப்பதிலேயும் தான். என்னை நானே வழியிலிருந்து அகற்றிக் கொண்டு, வில்லியம் பிரான்ஹாம் என்று நினைத்துப் பார்க்கக் கூடாத அளவிற்கு செய்து உங்களைப் பற்றியும் நினைத்துப் பார்க்கக் கூடாத அளவிற்குச் செய்து நம் மத்தியிலே இயேசு மகிமையடைவதைக் காண்பதே நம்முடைய வாஞ்சையாகும். அவரைப் பார்ப்பதே நம்முடைய வாஞ்சை. அதுவே நமக்கு உயிர்ப்பிக்கும் வல்லமையைக் கொடுக்கிறது. நாம் அவரில் இருக்கிறோம் என்றும், அவருடைய மாமிசத்தின் மாமிசமும், எலும்பின் எலும்புமாக, இருக்கிறோம் என்றும், நாம் அவருடைய மணவாட்டி என்றும், மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து இப்பொழுது அவர் நம்முடன் இருக்கிறார் என்றும், அதை அதே விதமாக நம்மில் நிரூபிக்கிறார் என்பதையும் நாம் புரிந்து கொள்ளும் சந்தோஷத்தை அது நமக்குத் தருகிறது. புரிந்து கொண்டீர்களா? 118“பயப்படாதிருங்கள்'', என்று அவர் சொன்னதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இப்பொழுது, (கவனியுங்கள்!) நாம் அவரால் மீட்கப்பட்டு அவருடன் இப்பொழுது உயிரோடு எழுந்துவிட்டோம். அதுவே ஜனங்களுடைய ஈஸ்டர்; அவருடன் உயிரோடு எழுந்துவிட்டோம். நாம் நமக்குள் அவருடைய ஆவியைப் பெற்றுக் கொண்டோம், உரிமைப் பத்திரத்தின் கிரயம் முழுவதுமாக செலுத்தப்பட்டுவிட்ட து. “நல்லது, நான் அதைப் பெற்றுக் கொள்வேன்'', என்று நீங்கள் சொல்லாதீர்கள். நீங்கள் ஏற்கனவே அதைப் பெற்றுக் கொண்டீர்கள். இல்லையா? ”நான் அதைப் பெற்றுக் கொள்வேன்'' என்பதல்ல; நான் ஏற்கனவே அதைப் பெற்றுவிட்டேன். நான் அதை சம்பாதிக்கவில்லை, அவர் எனக்காக அதை சம்பாதித்துவிட்டார். புரிந்து கொண்டீர்களா?நானல்ல, அவரே. “நல்லது, சகோதரன் பிரான்ஹாம், அவர்கள் சொல்கிறார்கள்'', அவர்கள் என்ன சொன்னாலும் அதைப் பற்றி எனக்கு ஒன்றும் கவலையில்லை, அவர் எனக்காக அதை சம்பாதித்துவிட்டார். அதை மாத்திரமே நான் வாஞ்சிக்கிறேன். அவர் வெளிப்படுவதைப் பார்க்க நான் வாஞ்சிக்கிறேன். அதை மாத்திரமே நான் சுமந்து செல்கிறேன். நீங்கள் அதை எப்படி பார்க்க முடியும்? அவரே கீழே கூப்பிட்டோ? இல்லை, அவர் உங்களிலேயே வாசம் செய்கிறார். புரிந்து கொண்டீர்களா? அவர் உங்களிலேயே வாசம் செய்கிறார். நல்லது, கர்த்தாவே என்னுடைய வழியிலிருந்து நான் அகன்று போனால் நீர் என்னில் வெளிப்படமுடியும்... நீங்கள் அதை எப்படி பார்க்க முடியும்? நீங்கள் அதற்காகவே நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்'', கவனியுங்கள்! மகிமை! 119இன்று காலையில் நம்மிடமுள்ள எல்லா சாட்சியங்களுடனும், ஓ, அந்தப் பாடலைப் பாட விரும்புகிறேன். உயிர்த்தெழுந்த காலையில், மரணக் கட்டுகள் அறுபடும் போது, ''நாம் உயிர்த்தெழுவோம்“, “அல்லேலூயா” நாம் உயிர்த்தெழுவோம். நீங்கள்அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) நாம் உயிர்த்தெழுவோம். அவருக்குள் நாம் அவருடைய பாகமாகவே மாறுகிறோம், மரணத்திற்குப் பின்னால் தேவன் உயிரோடெழுந்தார் என்ற இரகசியம் வெளிப்பட்டது தான் ஈஸ்டர். முன்பு பாவத்திலும் அக்கிரமத்திலும் மரித்திருந்த நாம் இப்பொழுது ஜீவிக்கிறோம். என்னைச் சுற்றியிருந்த மரணத்தை உண்மையான ஈஸ்டர் முத்திரை (True Easter Seal) உடைத்தெறிந்துவிட்டது, நான் ஜீவிக்கிறேன். ஆதியிலே ஈஸ்டர் முத்திரை (Easter Seal) அவருடைய கல்லறையில் வைக்கப்பட்டிருந்த ரோம சாம்ராஜ்யத்தின் முத்திரையை உடைத்தெறிந்தது. மனிதர்களாகிய அவர்கள் மரித்துப் போனார்கள், ஆனால் அவர் தாமே முத்திரையை உடைத்து அதன் இரகசியத்தையும் வெளிப்படுத்தி தந்தார். இப்பொழுது, தேவன், தம்முடைய பரிசுத்தாவியினாலே நம்முடைய ஜீவனைச் சுற்றிலும் முத்திரையை உடைத்தார், நம்முடனே கிறிஸ்து ஜீவிக்கிறார் என்பதை வெளிப்படுத்தி அவரோடே நம்மையும் உயிர்ப்பித்துவிட்டார், ஓ! பக்கத்திற்குப் பக்கம். நாம் உயிர்த்தெழுவோம்! (அல்லேலூயா!)... நாம் உயிர்த்தெழுவோம்! (ஆமென்) உயிர்த்தெழுந்த காலையில், மரணக்கட்டுகள் அறுபடும் போது, நாம் உயிர்த்தெழுவோம்; அல்லேலூயா! நாம் உயிர்த்தெழுவோம்! ஓ, நீங்கள் சந்தோஷப்படவில்லையா! ஒரு நாள் காலையில் அந்த கரி வைக்கும் (Coal Shed) சிறிய அறையில் முத்திரைகள் உடைக்கப்பட்டன. நான் அவருடன் உயிரோடெழுந்து புது சிருஷ்டியானேன். அதைக் குறித்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். அவருடைய உயிர்ப்பிக்கும் வல்லமை! குமாரன் உயிர்த்தெழுந்தார். 120அநேக நாட்களுக்கு முன்பு மீன் பிடிப்பவனைப் பற்றி ஒரு கதையை என்னிடம் சொன்னார்கள். ஒருவன் மேற்குக் கடற்கரையில் மீன்பிடிக்க, ஒரு வயதான மீன் பிடிப்பவரிடம் தன்னையும் அழைத்துக் கொண்டு, தனக்கு மீன் பிடித்துத் தர வேண்டும் என்று சொல்லி அவனை தன்னுடன் வாடகைக்கு அமர்த்திக் கொண்டான். அன்று காலையில் அவர்கள் மீன் பிடிக்கப் போனார்கள். பெரிய வஞ்சன மீன் (Salmon) பிடிப்பதற்குச் சென்றவர்கள் தங்களுடைய வலையிலே கடம் புல் (Foggy) இருப்பதைக் கண்டார்கள். என்னுடைய வாலிப சகோதரன் எடி பிஸ்கல் (Eddie Byskal) இங்கே உட்கார்ந்திருப்பதை நான் பார்க்கிறேன், அவர் இந்தியர்களுக்கு சுவிசேஷ ஊழியம் செய்கிறார். நாங்கள் அந்த இடங்களில் எங்களுக்கு மீன் பிடித்தோம். நம் கதையில் வரும் மீன் பிடிப்பவன் அனுபவமில்லாதவன். மீன் பிடிக்கச் சென்ற போது மிகவும் மந்தமாயிருந்தான், சூரிய வெளிச்சம் உதிக்கும் வரையிலும் காத்துக் கொண்டிருந்தான். அவர்கள்... அந்த மீன் பிடிப்பவன் ஒன்றுமே பேசவில்லை, அவனை வாடகைக்கு அமர்த்தியவன் அவனை மீன் பிடிக்கும் படித் தூண்டினான், ''நாம் கடலுக்கு வெளியிலேயே நின்று கொண்டிருக்கிறோமே“ என்று மீன் பிடிப்பவனிடம் சொன்னான். கிழவனான அந்த மீன் பிடிப்பவன் ''இங்கே உட்கார்ந்து கொள் மகனே, இங்கே உட்கார்ந்து கொள்'', என்று அவனிடம் சொல்லிவிட்டு, பொறுமையாயிருந்தான். “சூரியன் உதிக்கும் வரையிலும் சற்று பொறுமையாயிரு, பிறகு நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்வோம்'', என்று சொன்னான். மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், பெந்தெகொஸ்தே இதில் நான் எந்த ஸ்தாபனத்தில் சேர வேண்டும் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். 121சற்று பொறுங்கள். குமாரன் வருகிறார், நாம் எங்கே நிற்கிறோம் என்பதைக் கண்டு கொள்வோம். அவரே வார்த்தை கதிர் கட்டாகிய வார்த்தை வெளிப்பட்டு வித்தின் மீது பிரகாசிக்கும் வரை பொறுத்துக் கொள்ளுங்கள், அப்பொழுது நாம் எங்கே நிற்கிறோம் என்பதைக் கண்டு கொள்வோம். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்'' என்கின்றார்கள் -ஆசி). நீண்ட நேரம் உங்களை காக்க வைத்ததற்கு நான் வருந்துகிறேன். உங்களில் எத்தனை பேர் இன்றிரவு இங்கே தங்கப் போகிறீர்கள்? ஓ! இன்று மாலையில் நான் மீண்டும் திரும்பி வருவேன். ஏழு மணிக்கு ஆரம்பிக்கலாமா? (மேடையிலிருந்து யாரோ ஒருவருடன் தீர்க்கதரிசி பிரான்ஹாம் பேசுகிறார் - பதிப்பாசிரியர்) (சகோ. நெவில் 'இல்லை' என்கிறார் - ஆசி) நாம் நம்முடைய தலைகளை வணங்குவோம். 122உயிர்ப்பிக்கும் வல்லமையை உங்களில் எத்தனை பேர் பெற்றுக் கொள்ளவில்லை. ஒருவரா அல்லது அநேகரா? நீங்கள் உட்கார்ந்திருக்கிற இந்தக் கூடாரத்தில் தானே குமாரன் பிரகாசிக்கிறார், நீங்கள் வார்த்தையைப் பின்பற்றாத வரையில் செய்திகளடங்கிய ஒலிநாடாக்களைக் கேட்டிருந்தும், நீங்கள் இதுவரை உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பெற்றுக் கொள்ளவில்லை. அவரைக் குறித்து எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் ஸ்திரீகளே, ஆண்களே உங்களால் கீழ்ப்படிய முடியுமா? ஒ, அது பயங்கரமான காரியம். உங்களில் ஜீவன் இல்லாமல், நீங்கள் ஒரு மரித்த வித்தாயிருந்தால் அதனால் என்ன பிரயோஜனம்? ஆனால் உங்களுக்குள்ளாக ஏதோ ஒன்று இருந்து கொண்டு, நான் - நான் இன்று காலையில் உயிரோடே எழுந்திருக்க வாஞ்சிக்கிறேன் என்று சொல்லுகிறது. நான் இன்று இருக்கும் நிலைமையிலிருந்து உயிரோடே எழுந்திருக்க விரும்புகிறேன். நான் ஒரு செத்துப்போன வித்தாக, செத்துப்போன மரக்கட்டையைப் போல, பூமியின் மண்ணில் இருந்து விட விரும்பவில்லை, நான் உயிரோடே எழுந்திருக்க விரும்புகிறேன். உங்கள் கைகளை உயர்த்தி எனக்காக ஜெபியுங்கள் சகோதரனே என்று நீங்கள் சொல்லுவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அநேகர் கைகளை உயர்த்தியிருப்பதை நான் பார்க்கிறேன். நாம் பீட அழைப்பு கொடுக்கப் போவதில்லை (Altar call) மெதோடிஸ்ட் எழுப்புதலின் போதுதான் பீட அழைப்பு கொடுக்கப்பட்டு ஜனங்கள் சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். புரிந்து கொண்டீர்களா? 123விசுவாசித்தவர்கள் யாவரும் (புரிந்து கொண்டீர்களா?) ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்கள் என்று வேதம் சொல்லுகிறது. ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள விரும்புகிற யாவருக்கும் இங்கே தண்ணீர் நிறைந்துள்ள ஒரு தொட்டி ஆயத்தமாயிருக்கிறது. நீங்கள் அநேக முறை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அடக்கம் பண்ணப்படலாம். ஆனால் வித்திலே ஜீவன் இல்லாவிடில் (புரிந்து கொண்டீர்களா?) அதை உயிர்ப்பிக்க முடியாது. இல்லை, இல்லை! ஞானஸ்நானத்தில் நாம் உபயோகிக்கும் தண்ணீர் வானத்திலிருந்து இறங்கும் பனித்துளியைப் போன்றது. அது வித்தின் மேல் விழக்கூடும், ஆனால் வித்திலே ஜீவன் இல்லாவிடில் அது உயிர்வாழ முடியாது. ஆனால் உண்மையான ஞானஸ்நானத் தண்ணீரானது உங்களுக்கு ஒரு மரணமாக இருக்கிறது, வார்த்தைக்கு விரோதமான ஸ்தாபனங்களினாலும், கோட்பாடுகளினாலும் நீங்கள் கற்றுக் கொண்ட எல்லாக் காரியத்திற்கும் மரிப்பதற்கு ஆயத்தமாகிறீர்கள், நீங்கள் தேவனுடைய குமாரனாகவோ, குமாரத்தியாகவோ நடக்க ஆரம்பித்து, இன்று காலையில் ஞானஸ்நானத்தின் தண்ணீர் எனக்கு என்ன செய்யும் என்பதைக் கவனி என்று உங்களுடைய இருதயத்தில் சொல்லிக் கொள்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி பாவ மன்னிப்புக்கென்றும், உங்களுடைய குற்றங்களிலிருந்து விடுபடவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் அசைவாட்டுதலின் காணிக்கையாகிய கதிர்க்கட்டைப் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியாகிய உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பெற்றுக் கொள்வீர்கள். ஏனெனில் வாக்குத்தத்தமானது உங்களுக்கும் மற்ற எல்லாருக்கும், எல்லா சந்ததியினருக்கும் உடையது. 124பிதாவாகிய தேவனே, நான் ஜனங்களுடைய நேரத்தை அதிகமாக எடுத்துக் கொண்டு, நீண்ட பிரசங்கத்தை நிகழ்த்திவிட்டேன். ஆனால், கர்த்தராகிய தேவனே, அதை நிறுத்துவதற்கு முடியாது. அது இவ்விடத்தை விட்டுப் போய் நீர் சற்று நேரம் அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டு, திரும்பி வருவதைப் போல் காணப்படுகிறது. ஜீவனுள்ள ஒரு செய்தியுடனும், உயிர்த்தெழுதலின் ஒரு சாட்சியுடனும்; மரித்துக் கொண்டிருக்கிற ஜனங்களின் மத்தியிலே நாங்கள் ஒரு மரித்துக் கொண்டிருக்கிற உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்புள்ள தேவனே, ஒரு தடவை மாத்திரமே நாங்கள் சாவுக் கேதுவாய் இருக்கப் போகிறோம். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் நழுவவிட்டால் எங்களுக்கு அதனால் என்ன பிரயோஜனம்? இங்கே வந்திருக்கிறவர்களாகிய எங்களுடைய இருதயம் கொழுந்துவிட்டு எரிகிறது; எங்களுடைய ஆத்துமா நடுங்குகிறது, இன்று காலையில் இங்கே அநேகர் - இந்த செய்தியைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆம், இருநூறு அல்லது முன்னூறு பேர் தங்களுடைய கைகளை உயர்த்தியிருக்கிறார்கள். அவர்கள் உம்மை விசுவாசிக்க வாஞ்சிக்கிறார்கள். கர்த்தாவே, ஓ, நிச்சயமாகவே அந்த வித்தானது மரித்துப் போகவில்லை. ஆண்டவரே அவர்களால் எப்படித் தங்கள் கைகளை உயர்த்த முடிகிறது? அவர்களுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது. ஓ, தேவனே, யோபுவின் மனைவி அங்கே நின்று கொண்டு, “ஓ..'' என்று சொல்லுகிறாள். ஆனால் இங்கே நடந்து வந்து முற்றிலுமாக மரித்து கர்த்தாவே, விசுவாசியாகிய யோபுவோ, எல்லாப் பாவங்களையும் கழுவி சுத்திகரிப்பேன் என்று சொல்லிக் கொண்டு பரலோகத்திலிருந்து இறங்குகிற பனித் துளியும், தேவனுடைய வார்த்தையுமாகிய ஞானஸ்நான தண்ணீர்களிடத்தில்அடக்கம் பண்ணப்படட்டும். நீங்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்கிறீர்கள், எதற்கா? உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கென்று. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தான் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன 125பிதாவே, இங்கே வியாதியஸ்தர்கள் யாராவது இருந்தால் அவர்கள் சுகமடைந்து வெளியே நடந்து போகட்டும். அவர்கள் கால்கள் நடக்க முடியாமல் முடங்கியிருந்தால், பரிசுத்தாவியின் வல்லமையினால் எழுந்து அவர்கள் நடந்து வெளியே போகட்டும். அவர்கள் பாவிகளாயிருந்தால் அவர்கள் பாவங்கள் கழுவி சுத்திகரிக்கப்பட்டவர்களாய் நடந்து வெளியே போகட்டும். உன்னதத்திலிருந்து வரும் பெலனாகிய பரிசுத்தாவி வார்த்தையின் ஒரு பாகமாக இருப்பவர்களின் மேல் விழுந்து அவர்களை ஆட்கொள்ளட்டும். கர்த்தாவே, சாவுக்கேதுவான அவர்களுடைய சரீரங்களை உயிர்ப்பியும், அப்பொழுது நாங்கள் உண்மையான அந்நியபாஷைகளைக் கேட்போம், தேவனுடைய வல்லமை கிரியை செய்வதையும், அன்பினால் நிரப்பப்படுதையும், கிருபை ஊற்றப்படுவதையும், கிருபை எடுபட்டுப் போவதையும், ஒரு உயிர்த்தெழுந்த கிறிஸ்துவையும், மணவாட்டியும் அவரும் ஒரே சரீரமாக பூமியின் மேல் நிற்கிறதையும் காண்போம். பிதாவே, அவர்கள் உம்முடையவர்கள். அவர்கள் தங்களுடைய கைகளை உயர்த்தினார்கள்; நான் வார்த்தையை பிரசங்கித்துள்ளேன். இப்பொழுது நீர் அவர்களை ஏற்று கொள்ளும்படி நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்ததில் கேட்டு, வேண்டிக் கொள்கிறேன். பிதாவே ஆமென். 126நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) அவர் அருமையானவர் அல்லவா? அந்த உயிர்த்தெழுதலின் ஈஸ்டரில் நீங்களும் ஒரு பாகம் என்றும், நீங்கள் அவரோடே உயிர்த்தெழுந்துவீட்டீர்களா என்பதிலும் நீங்கள் திருப்தி அடைகிறீர்களா? (ஆமென்.) உங்களுடைய கைகளை உயர்த்துங்கள். நீங்களும் அதில் சேர்க்கப்பட்டுவிட்டீர்கள். என் சிறு பிள்ளைகளே, நான் உங்களை நேசிக்கிறேன் என்று பவுல் சொல்லியதை போல், அவனைப் போல பாவனை செய்வதற்காக அல்ல, ஆனால் நான் உங்களை நேசிக்கிறேன். அநேக மைல்கள் காரை ஓட்டிக் கொண்டும், இன்னும் பல கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டும், உங்களுடன் பேசுவதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன். வனாந்திரத்தை கடந்தும், பனிப் பிரதேசங்களின் வழியாக பிரயாணம் செய்தும் இங்கே வந்திருக்கிறேன். நாங்கள் விமானத்திலும், நீங்கள் காரிலும் வந்து, நாம் இங்கே ஒன்றாகக் கூடியுள்ளோம். நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம். நாம் ஒருவர் மற்றொருவரின் பாகமாக இருக்கிறோம். சாத்தான் வேறு எவ்விதத்திலும் உங்களோடு பேசுவதற்கு இடம் கொடுக்காதீர்கள். நாம் ஒருவர் மற்றொருவரின் பாகமாக அவருக்குள் அவருடைய பாகமாக இருக்கிறோம். உயிர்த்தெழுதலின் ஆசீர்வாதங்களை நாம் அனுபவித்துக் கொண்டு அவருடைய ராஜ்ஜியத்தின் பிரஜைகளாக இருக்கிறோம். (எபேசியர்: 2:19). 127இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? இப்பொழுது நீங்கள் அவருடனே உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். தேவன் அவரை உயிரோடே எழுப்பிய போது, அவர் உங்களையும் உயிரோடே எழுப்பிவிட்டார்; குமாரன் இப்பொழுது உங்கள் மேல் இருக்கிறார். நீங்கள் கடைசி நாளில் முற்றிலுமாக உயிர்ப்பிக்கப்படுவதற்காக, இப்பொழுது அவரைப் போலவே ஜீவனுடையவர்களாக வளர்ந்து வருகிறீர்கள். நீங்கள் இப்பொழுது உள்ளுக்குள்ளாக உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பெற்றிருக்கிறீர்கள். எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் ஆத்துமா மாறிவிட்டது, இல்லையா? உங்களுடைய சரீரம் அதற்குக் கீழ்ப்படிகிறது, இல்லையா? எதற்குக் கீழ்ப்படிகிறது? ஒரு சபைக்கா? ஜீவனுள்ள வார்த்தைக்கு, நீங்களும் இப்பொழுது மரித்தோரிலிருந்து உயிரோடே எழுப்பப்பட்டு இருக்கிறீர்கள். இயேசுவுக்கும் எனக்கு இதுவே ஈஸ்டர். உங்களுக்கும் இயேசுவுக்கும் இதுவே ஈஸ்டர். என்னோடும், இயேசுவோடும் உங்களுக்கு இதுவே ஈஸ்டர். நாம் எல்லோரும் இயேசு, நீங்களும் நானும், நாம் எல்லோரும் ஒன்றாக உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய ஆவி சரீரத்தை விட்டு பிரிந்து நம்முடைய சரீரம் மண்ணுக்குப் போய் மக்கிப் போனாலும், அக்கினியிலே வெந்து போனாலும், கடலுக்கு அடியில் சிக்கினாலும் கடைசி நாளில் நாம் உயிரோடே எழுந்திருப்போம். ஒரு தூதன் தன்னுடைய கலசத்தில் உள்ளதை சமுத்திரத்தில் ஊற்றினான். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது என்று வேதம் சொல்லுகிறது. தேவனிடமிருந்து நம்மை மறைக்கவோ, அல்லது பிரிக்கவோ யாதொன்றாலும் முடியாது, ஏனெனில் நம்மை உயிரோடே எழுப்பியவரை நாம் அதிகமாக நேசிக்கிறோம். 128தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உங்களை அதிக நேரம் காக்க வைத்துவிட்டேன். தொலைபேசியில் இணைக்கப்பட்டிருக்கும் ஜனங்கள் தொடர்ந்து செய்தியைக் கேட்டுக் கொண்டிருப்பார்களேயானால், ஒரு நிமிடத்திற்கு ஐம்பது பைசா வீதம் அவர்கள் இன்று காலையில் நிறைய செலவு செய்திருப்பார்கள் (தீர்க்கதரிசி பிரான்ஹாம் அமெரிக்கா நாணயமாகிய ஐம்பது சென்ட்டை குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்) என்னால் இந்த செய்தியை குறைந்த நேரத்தில் பிரசங்கிக்க முடியவில்லை, நான் அதை திட்டவட்டமாக பிரசங்கித்தேயாக வேண்டும். கர்த்தருக்குச் சித்தமானால் நான் உங்களோடு மீண்டும் பேசுவதற்காக இன்றிரவு திரும்பி வருவேன். அப்பொழுது தொலைபேசி இணைப்பு இருக்காது என்று உங்கள் எல்லோருக்குமே தெரியும். நான் எங்கே போய்க் கொண்டிருக்கிறேன் என்பது உங்கள் எல்லோருக்குமே தெரியும். இல்லையா? ஆப்பிரிக்கா! அநேக நாட்களாக அவர்கள் என்னை அழைத்தார்கள், அநேக வருடங்களாக நான் அங்கே போவதற்கு முயற்சி செய்து வருகிறேன். இப்பொழுது ஒரு தரிசனத்தின் மூலம் கர்த்தருடைய ஆவியானவர் வழியை ஆயத்தம் செய்துவிட்டார். சென்ற முறை நான் அங்கே போகவில்லை என்பதை கேள்விப்பட்ட ஆயிரக்கணக்கான எளியவர்களாகிய அந்த உள்ளூர்வாசிகள் இரவும் பகலும் தரையில் விழுந்து, ''கர்த்தாவே, நாங்கள் என்ன செய்தோம்'', என்று சொல்லிக் கொண்டே புலம்பி, கதறி அழுதார்கள் என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அந்த ஜனங்கள் தங்களுக்கு ஒரு ஆத்துமா உண்டு என்பதைக் கூட விசுவாசிக்காதவர்கள். புரிந்து கொண்டீர்களா? 129“ஒரு வார்த்தை அனுப்பமாட்டீரா, தயவுசெய்து அனுப்பமாட்டீரா'' என்று அவர்கள் கதறி, புலம்பி அழுதார்கள். புரிந்து கொண்டீர்களா? என்னுடைய விசா (Visa) அந்த அதிகாரிகளின் கையில் கிடைக்க நேரிட்டால், அவர்கள் என்னை அங்கே போகவிடாமல் தடுத்துவிடுவார்கள். நான் ஒரு வேட்டைக்காரனாகத் தான் அங்கே போகவேண்டும். பதினேழு ரயில் பெட்டிகள் நிறைய சரக்குகளுடன் கூட்டத்திற்கு வந்த அந்த மகாராணியை நான் சந்திக்கப் போகிறேன். அவளுடைய தேசத்தில் நான் வேட்டையாடப் போகிறேன். நான் அங்கே போவதற்கு என்னுடைய பாஸ்போர்ட் (Passport) மற்றெல்லாவற்றிலும் வேட்டைக்காக நான் அங்கே போவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, தேவனுடைய ஊழியத்திற்காக அல்ல. அங்கே ஒரு சகோதரன் என்னை சந்தித்து, நீங்கள் ஏன் எங்களுக்கு ஒரு சிறு கூட்டத்தை நடத்தக் கூடாது என்று என்னிடம் கேட்பார். கூட்டம் நடத்துவதற்கு மைதானங்கள் எல்லாம் ஏற்கனவே வாடகைக்கு அமர்த்தப்பட்டாயிற்று. அது கூட அவர்களுக்குத் தெரியாது. பார்த்தீர்களா? ஓ, மகிமை! 130அங்கிருந்து வந்ததிலேயிருந்து தேவனுடைய சித்தத்தை தெரிந்து கொள்வதற்கு என் ஆத்துமா ஆப்பரிக்காவிற்காக கதறியது, நான் அங்கே கூட்டங்களை முடித்துக் கொண்டு திரும்பி வந்து உங்களுக்கு ஒரு மகத்தான கூட்டத்தைக் குறித்த செய்தியை கொடுப்பதற்காக ஜெபியுங்கள். ஒருவேளை மீண்டும் திரும்பி வரும் வரையிலும் நான் உங்களைப் பார்க்க முடியாமல் போகலாம். நாங்கள் இன்னும் சில நாட்கள் கழித்து மே மாதம் 10-ந் தேதி அங்கே இருப்போம். எனக்காக நீங்கள் ஜெபிப்பீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). பிசாசுகளின் மத்தியிலும், மந்திரவாதிகளின் மத்தியிலும் (witch doctors) நீங்கள் இருக்க நேரிடும்போது என்ன விதமான தொல்லைகள் இருக்குமென்று உங்களுக்குத் தெரியாது; அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாது என்று நீங்கள் நினைக்காதீர்கள். புரிந்து கொண்டீர்களா? அவர்களுக்கு முன்னால் நீங்கள் நிற்கும் பொழுது, நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதைக் குறித்து நிதானமாயிருப்பது நல்லது, “ஏனென்றால் நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புப் கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக் கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்”, (2தீமோத்தேயு: 1:12). இங்கே சில கைக்குட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. அன்பான தேவனே, விசுவாசிக்கிற குழந்தையிடம் உயிர்ப்பிக்கும் வல்லமை இருக்கிறது என்று நான் இன்று காலையில் இங்கே நின்று கொண்டு உயிர்த்தெழுதலின் செய்தியைப் பிரசங்கித்து, அதை வார்த்தையின் மூலமாக நிருபித்தேன்; ஆகையால் நம்பிக்கை, விசுவாசம் ஆகியவற்றின் மூலம் உயிர்ப்பிக்கும் வல்லமை என்னுடைய வாழ்க்கையை மாற்றியிருக்கிறது என்று இந்த ஜனங்கள் விசுவாசிக்கிறார்கள், கர்த்தாவே, உயிர்ப்பிக்கும் வல்லமை இவர்களுடைய வாழ்க்கையையும், மாற்றிவிட்டது, நாங்கள் ஒருவர் மற்றொருவருக்காக ஜெபிக்கிறோம். தேவனே நான் இந்தக் கைகுட்டைகளின் மேல் என்னுடைய கைகளை வைத்து இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பிய உம்முடைய ஆவி எங்களுடைய சரீரங்களில் வாசமாயிருக்கட்டும் என்று ஜெபிக்கிறேன். எலிசா மரித்தப்பின் எலும்புகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்த போதும், அவனுடைய எலும்புகளில் உயிர்ப்பிக்கும் வல்லமை தங்கியிருந்தது. அப்போஸ்தலர்கள் அவர்களுடைய கைகளில் உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பெற்றிருந்தார்கள். அப்போஸ்தலர்களுடைய சிந்தனையும், பார்வையும் விசுவாசிகளுடைய நாவுகளும் உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பெற்றிருந்தது. கிருபையினால் உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பெற்றுக் கொண்ட என்னுடைய கைகளை இந்த கைக்குட்டைகளின் மேல் நான் வைக்கும்போது, வியாதியஸ்தர்களுடைய சரீரங்கள் உயிர்ப்பிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவர்கள் முற்றிலும் சுகமடையட்டும். தேவனே இந்தக் கைக்குட்டைகள் மேல் மாத்திரம் அல்ல. இந்தக் கட்டிடத்திற்கு வெளியே நின்று கொண்டிருக்கிற சிறு பிள்ளைகள் பெரியவர்கள் யாராகிலும் வேதனையோடே இருந்தால், இப்பொழுதே அவர்கள் ஒவ்வொருவரையும் உயிர்ப்பிக்கும் வல்லமை, இயேசுவின் நாமத்தில் உயிர்ப்பிக்கட்டும். ஆமென். 131உங்களில் எத்தனை பேர் உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பெற்றுக் கொண்டீர்கள்? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி) இப்பொழுது நீங்கள் உங்களுடைய கைகளை ஒருவர் மற்றொருவர் மேல் வையுங்கள். உயிர்ப்பிக்கும் வல்லமை உங்களுக்குள் இருந்தால்... உங்களுக்குள் உயிர்ப்பிக்கும் வல்லமை கிரியை செய்வதை உங்களுடைய அவிசுவாசம் மாத்திரமே தடை செய்ய முடியும். ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தை தொட்டு சொஸ்தமடைந்தாள், ஒரு ரோம போர்ச் சேவகன் அவருடைய முகத்தில் துப்பி நரகத்திற்கு போனான். புரிந்து கொண்டீர்களா? அது உங்களுடைய விசுவாசத்தைப் பொறுத்தது. நீங்கள்அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் உங்களுடைய தலையை வணங்கி ஒருவர் மற்றொருவருக்காக ஜெபிக்க விரும்புகிறேன். இப்பொழுதே ஜெபியுங்கள். “கர்த்தாவே இந்த நபர்...'' என்று சொல்லுங்கள். புரிந்து கொண்டீர்களா? ஒருவர் மற்றொருவருக்காக ஜெபியுங்கள். 132அன்பான தேவனே, மனிதருக்குள்ளே இரட்சிக்கப்படவும், சுகமடையவும் அருளப்பட்ட ஒரே நாமமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் இதைச் செய்கிறோம். தேவனுடைய வீட்டாரும், உயிர்ப்பிக்கும் வல்லமையை பெற்றவர்களுமாகிய இவர்களை இப்பொழுதே உயிர்ப்பியும் கர்த்தாவே. இயேசு கிறிஸ்து ஒவ்வொருவருடைய சரீரங்களிலும் வெளிப்படும் வரை உம்முடைய ஆவி ஒரு கழுகிலிருந்து மற்றொரு கழுகிற்கும், ஒரு வார்த்தையிலிருந்து மற்றொரு வார்த்தைக்கும் பாய்ந்து செல்வதாக, நாங்கள் எங்களுடைய கைகளை ஒருவர் மற்றொருவர் மேல் வைக்கும்போது சரீர, ஆவிக்குரிய தேவைகள் எதுவாயினும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அதை அருளிச் செய்யும்.